உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அமைச்சர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(03.12.2025) உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் 361 பயனாளிகளுக்கு ரூ.30.93 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இன்றைக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன வகையில் உதவியாக இருக்கிறது என்பதையெல்லாம் உணர்வு பூர்வமாக சொல்லக்கூடிய நிகழ்ச்சியாக இத்தினத்தினை சென்னையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் நமது விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளை உற்சாகப்படுத்தி வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் முன்னேற வேண்டும் என்ற உணர்வை உண்டாக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் மாற்றுத்திறனாளிகளை நம்முடைய வீட்டிலே கூட அலட்சியமாகவும், சுமையாகவும் பார்த்தார்கள். மாற்றுத்திறனாளிகள் ஒரு மூலையிலே முடங்கியிருந்தார்கள்.சராசரியாக இரண்டு கைகள் கால்கள் இருப்பவர்கள் செய்யும் செயல்களை மாற்றுத்திறனாளிகளும் செய்யக் கூடிய அளவிற்கு இயற்கையாகவே அவர்கள் உடம்பில் இருந்து திறன்கள் இருக்கின்றன. எனவே, தான் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்கலைஞர்அவர்கள்மாற்றுத்திறனாளிகள்எனபெயர்மாற்றம்செய்துஅவர்களைசிறப்புசெய்துள்ளார்.சிந்திப்பதிலும், செயலாற்றுவதிலும் சாதாரண மனிதர்களை விட ஒரு பங்கு அதிகமாக திறன் பெற்றிருக்கக் கூடியவர்கள் மாற்றுத்திறனாளிகள். எனவே, தான் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்டாசு விபத்துகளில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பராமரிப்பு மற்றும் உதவித்தொகைகளையும் வழங்கி வருகிறார்.வீட்டில் தாய்மார்களின் பனிச்சுமை காரணமாக குழந்தைகள் பல நேரங்களில் காலை உணவை எடுக்காமலேயே பள்ளிக்கு சென்று வருகின்றார்கள் என்பதை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.வயதானவர்கள் நியாய விலைக் கடைக்கு சென்று பொருட்களை சுமந்து கொண்டு வரும் சிரமத்தை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் யாருக்கு எதை செய்யலாம், எப்படி செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம்முடைய அரசானது, நிதிச்சுமைக்கு ஏற்றார் போல் தான் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிகமான நிதிகளை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஒரு காலத்தில் பட்டதாரி முடித்தவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்த நிலை மாறி இன்று வீட்டுக்கு ஒரு பட்டதாரியும் தெருவுக்கு மூன்று மருத்துவம் படித்த மாணவர்களும் இருக்கிறார்கள். படித்த இளைஞர்களிடையே போட்டிகள் அதிகமாக உள்ள சூழ்நிலையில் அவர்களுக்கான திறமையை வளர்ப்பதன் மூலமும், திறன்களை வளர்ப்பதன் மூலமும் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான முயற்சிகளைய அரசு எடுத்து அவர்களுக்கான திறன் வகுப்பு பயிற்சிகளையும் அளித்து வருகிறது. பட்டாசு தொழிற்சாலையில் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான உதவித்தொகை மற்றும் பராமரிப்புத் தொகைகளை வழங்குவதோடு அவர்கள் பிற்காலத்தில் வேலை வாய்ப்பை பெரும் வகையில் அவர்களுக்கான திறன் பயிற்சிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இன்று மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், 100 நபர்களுக்கு தலா ரூ.14,500/- வீதம் ரூ.1,45,000/- மதிப்பில் ஸ்மார்ட் போன்களும், 125 நபர்களுக்கு தலா ரூ.6,500/- வீதம் ரூ.8,12,500/- மதிப்பில் தையல் இயந்திரங்களும், 4 நபர்களுக்கு தலா ரூ.15,750/- வீதம் ரூ.63,000/- மதிப்பில் சக்கர நாற்காலிகளும், 7 நபர்களுக்கு தலா ரூ.2,000/- வீதம் ரூ.14,000 மதிப்பில் பிரெய்லி கடிகாரங்களும், 50 நபர்களுக்கு தலா ரூ.3,300/- வீதம் ரூ.1,65,000/- மதிப்பில் காதொலிக் கருவிகளும் என மொத்தம் 286 பயனாளிகளுக்கு ரூ.25.04 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும்,
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்துகளில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே 102 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது, 27 குழந்தைகளுக்கு (வெளிமாவட்டத்தைச் சார்ந்த 8-குழந்தைகள் உட்பட) ரூ.5,18,000/- மதிப்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையும், 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தலா ரூ.4,000/- வீதம் ரூ.8,000/- மும், 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தலா ரூ.6,000/- வீதம் ரூ.12,000/- மும், கல்லூரி பயிலும் 1 மாணவருக்கு கல்லூரிக் கட்டணம் ரூ.313/- மும், என மொத்தம் 32 மாணவர்களுக்கு ரூ.5.38 இலட்சத்திற்கான ஆணைகளும்,
மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ், பெற்றோரை இழந்த 39 கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.மேலும், சிறந்து விளங்கிய மூன்று பள்ளிகளுக்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் மற்றும் சுழல் கோப்பைகளும், தமிழ் இலக்கியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.இதுபோன்று, எண்ணற்ற திட்டங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த அரசின் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரசுப் பள்ளியில் பயின்று நான் முதல்வன் - உயர்வுக்குப்படி திட்டத்தின் மூலம் பயன்பெற்று மும்பை ஐஐடி-யில் பயன்று வரும் செல்வி.யோகேஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி மாணவியை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.மேலும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குடிமைப்பணிக்கான முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்று, முதன்மைத் தேர்வுக்கு தயாராகி வரும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 ஊக்கத்தொகைக்கான காசோலையினைவருவாய் மற்றும் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply