25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முதுமை வேறு, முதிர்ச்சி வேறு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதுமை வேறு, முதிர்ச்சி வேறு.

இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரிப் பார்க்கும் பக்குவமான மனம் இருந்தால் அதைத்தான் 'முதிர்ச்சி என்கிறோம். சிலருக்கு அது 20 வயதில் கூட வந்துவிடும். சிலருக்கு 80 வயது வரை முதிர்ச்சி வராமலே போகலாம்.  தான் முதிர்ச்சி அடைந்திருப்பதை ஒருவர் எப்படி உணர முடியும்?

யாரைப் பற்றியாவது யாரோ வம்பு பேசுவதைக் கேட்க அலுப்பாக இருக்கும். இதில் ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று தோன்றும்.

அம்மாவோ, மனைவியோ, நெருங்கிய உறவுகளோ போன் செய்யும்போது எரிச்சல் வராது. போனை எடுத்து அன்புடன் பேசமுடியும்.

தான் பேசுவதைக் குறைத்து, அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கத் தோன்றும்.

எல்லாம் தெரிந்ததுபோலப் பேச மாட்டார்கள். "ஆமாம், இது எனக்குத் தெரியாது" எனத் தயங்காமல் ஒப்புக்கொள்வார்கள்.

நண்பர்களை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் பேசுவார்கள். அவர்களைக் கொண்டாடவும் செய்வார்கள்.

பிரச்னைகளைக் கண்டு ஒதுங்காமல்,ஏதேதோ காரணங்கள் சொல்லி தட்டிக் கழிக்காமல் நேரடியாக எதிர்கொள்வார்கள்.

தங்கள் நேரத்தை வீணடிக்கும் மனிதர்களைச் சாமர்த்தியமாக ஒதுக்கக் கற்றிருப்பார்கள்.

தன்னுடைய மகிழ்ச்சி மற்றவர்கள் கையில் இல்லை, அது தன் மனதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்திருப்பார்கள்.

அடுத்தவர்களை நேசிப்பதுபோலத் தங்களையும் நேசிப்பார்கள். ஒன்றுமில்லாத விஷயங்களுக்காகத் தங்களை வருத்திக்கொள்ள மாட்டார்கள்.

தேவையற்ற வாக்குவாதங்களையும் சண்டைகளையும் புறக்கணித்துவிட்டு, மௌனமாக அந்தச் சூழலைக் கடந்து போய்விடுவார்கள்.

யாரையும் வெறுமனே தோற்றத்தை வைத்தும் பேச்சை வைத்தும் எடைபோட மாட்டார்கள்.

யார் மீதும் தங்கள் கருத்தை வலிந்து திணிக்க மாட்டார்கள். மாற்றுக்கருத்து வைத்திருக்க அடுத்தவர்களுக்கு உரிமை உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வார்கள்.

அடுத்தவர்களின் தவறுகளை மறக்கவும், அதைவிட அதிகமாக மன்னிக்கவும் கற்றிருப்பார்கள்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News