25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


புவிசார் குறியீடு பெற ராஜபாளையம் பஞ்சவர்ணம் ரக மாம்பழத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புவிசார் குறியீடு பெற ராஜபாளையம் பஞ்சவர்ணம் ரக மாம்பழத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பஞ்சவர்ணம் ரக மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி எடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை கிடைக்காததால் ,விரைந்து புவி சார் குறியீடு பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இம்மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் 1000 முதல் 1500 எக்டேர் பரப்பில் பஞ்சவர்ணம் ரக மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. சுவையான அல்போன்சா, சப்பட்டை (பங்கனபள்ளி) மாம்பழ வகைகளுக்கு அடுத்தப்படியாக மே சீசனில் அதிகம் விற்பது பஞ்சவர்ணம் ரகம் தான்.

மாவட்டத்தில் இருந்து மட்டும் ஆண்டு தோறும்  6 ஆயிரம் மெட்ரிக் டன் பஞ்சவர்ணம் ரக மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் சுவையால் தனித்துவம் பெற்றதாலும், 

ராஜபாளையம் பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை யடிவாரத்தில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுவதாலும், தோட்டக் கலைத்துறை உதவியுடன் மதுரை வேளாண் வணிக காப்பீட்டு மன்றம் சார்பில் புவிசார் குறியீடு பெற 2023 முதல் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

பருவநிலை மாற்றத்தால் இந்தாண்டு காய்ப்பு குறைந் துள்ளதாகவும், பஞ்சவர்ணம் மா விவசாயத்தை அதிகப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ,விரைந்து புவி சார் குறியீடு பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News