25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


நாகலிங்க மலர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாகலிங்க மலர்

இது இயற்கையாக வரும்ஒரு அபூர்வ மலர் . சிவலிங்கம் மலரின் மையப்பகுதியில் உள்ளது சிவலிங்கத்தின்மீதுநாகம் படமெடுப்பது போன்றஅமைப்பாக உள்ளது. சிவலிங்கபூஜைக்கு உதவும் பொருட்களில்நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப்பங்கு உண்டு.. சிவலிங்கபூஜைக்கு உதவும் பொருட்களில்வில்வம், தாமரை, செவ்வரளிபோல நாகலிங்கப் பூவுக்கும்முக்கியப் பங்கு உண்டு.நாகலிங்கப் பூவுக்கு21 ரிஷிகள்தங்களுடைய தவ ஆற்றல்களைஅளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 21 ரிஷிகளும், ‘மாத்ருகாரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நாகலிங்கப்பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறைசொல்லிய பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில்எடுத்தப் பின்னர்,21 பேருக்குஅன்னதானம் செய்ய வேண்டும்.அப்படி21 பேருக்கு அன்னதானம்செய்யும் போது,21 மாத்ருகாரிஷிகள் சூட்சுமமாக அந்தஅன்னதானத்தைப் பெற்றுக்கொள்வதாக நம்பிக்கை.அதன் பிறகு தான்நமது கையில் இருக்கும்நாகலிங்கப் பூவை சிவலிங்கத்தின்தலையில் வைக்க வேண்டும்;இப்படிச் செய்தால் மட்டுமேநாகலிங்கப் பூவால் சிவலிங்கத்திற்குபூஜை செய்த புண்ணியம்நமக்குக் கிட்டும்.நாகலிங்கப் பூவை ஈசனுக்குசாற்றி வழிபட்ட பிறகு,அது வாடியப் பின்னரும்கூட, நாம் குளித்துவிட்டுத்தான் அதனை எடுக்கவேண்டும். வாடிய நாகலிங்கப்பூவை எடுத்து ஓடும்ஆற்றில் போட்டு விடவேண்டும். அல்லது கடலில்போட வேண்டும். நாகலிங்கப்பூவையே சிவலிங்கமாக எண்ணிவீட்டில் தினமும் பூஜைசெய்யலாம். இப்படி ஒருவழிபாட்டு முறை கலியுகத்தின்ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டுவந்ததாக சொல்லப்படுகிறது.

. சிவலிங்கத்திற்குசாற்றிய நாகலிங்கப் பூவை,பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்குகொண்டு வரவேண்டும். நமதுவீட்டுப் பூஜை அறையில்சுவாமி படத்தின் முன்பாகஅதனை வைத்துக்கொள்ள வேண்டும்.நீண்டகாலமாக இருக்கும் நோய்தீரவோ அல்லது நீண்டகாலமாகஇருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோமனதார வேண்டிக் கொள்ளவேண்டும். நமது நோய்தீரும் வரை தினமும்வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லதுதேவாரப் பாடல்கள் பாடிவழிபட வேண்டும். நமதுவேண்டுதல்கள் நிறை வேறியபிறகு, நாகலிங்கப் பூவைஓடும் நதி அல்லதுகடலில் போடலாம். அதுவரைஅது எவ்வளவு காய்ந்துபோனாலும், அதற்கு நமதுவேண்டுதலை நிறைவேற்றும் சக்திஉண்டு.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News