25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மண்ணுக்கு உரமாகும் கண்ணாடித் துகள்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மண்ணுக்கு உரமாகும் கண்ணாடித் துகள்கள்

கண்ணாடிப் பொருட்கள் வீணாகும்போது அவற்றில் பெரிய துண்டுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. சிறிய துண்டுகள் பெரும் பாலும் மண்ணில் தான் புதைக்கப்படுகின்றன.அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ் பல் கலை விஞ்ஞானிகள், இந்தக் கண்ணாடித் துகள் களை மண்ணில் கலப்பது பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

மண், கண்ணாடி இரண்டுமே சிலிக்கா வால் ஆனவை என்பதை மனதில் கொண்டேவிஞ்ஞானிகள் ஆய்வைத்தொடங்கினர். கண்ணாடிமறுசுழற்சி செய்யும் இடத்தில் இருந்து கண்ணாடித்துகள்களை வாங்கினர். அவற்றின் கூர்மையான முனைகளை மழுங்கடித்தனர்.செடிகள் வளர்ப்பதற்கு பயன்படும் மண்ணில் துகள்களை வெவ்வேறு விகிதங்களில் கலந்து தொட்டிகளில் நிரப்பினர். பின்பு அவற்றில் கொத்த மல்லி, குடைமிளகாய், மிளகாய் ஆகிய தாவரங் களை நட்டு வளர்த்தனர்.

முழுக்கவே மண் மட்டும் நிரம்பிய தொட்டியை விட50 சதவீதம் மண்,50 சதவீதம் கண்ணாடித் துகள்கள் கலந்த தொட்டியில் செடிகள்வேகமாக வளர்ந்தன.வெறும் மண்ணில் உருவான சில பூஞ்சைகள் தாவரத்தின் வளர்ச்சியை தடுத்தன. ஆனால், கண்ணாடி கலந்த மண்ணில் பூஞ்சைகள் உருவாக வில்லை.இதனால் தான் அவற்றில் தாவரங்கள் வேகமாக, நன்றாக வளர்ந் துள்ளன. ஆகவே, இனி எதிர்காலத்தில் இவ்வாறு வீணாகும் கண்ணாடித்துகள்களைக் கொண்டு பயிர் வளர்ச்சியை ஊக்கு விக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இந்தப் புது முயற்சி யால் பயிர்களுக்கான உரம், ஆபத்தான பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட் டைக் குறைக்க முடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News