25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகத்தை கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதன்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உயிரினங்கள் வாழும் பிரம்மாண்ட கிரகத்தை கண்டுபிடித்து உலகிற்கு சொன்ன இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிக்கு மதுசூதன்!

நட்சத்திர மண்டலத்தில் ஏராளமான கோள்கள், கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் பூமியில் மட்டுமே தற்போது வரை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. பூமி தவிர இதே போன்று வேறு சில கிரகங்களிலும் நிச்சயமாக உயிரினங்கள் வாழும் என்ற நம்பிக்கையோடு விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகளை செய்து வருகின்றன. 

 அவ்வாறாக இதுவரை உயிரினங்கள் வாழத் தகுதியான கிரகங்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உயிரினங்கள் நிஜமாகவே வாழும் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை வைத்து ஆய்வு மேற்கொண்டதில், K2-18b என்ற கிரகத்தில் டைமெத்தில் சல்பைடு, டைமெத்தில் டை சல்பைடு உள்ளிட்ட வாயுக்களை கண்டறிந்துள்ளனர். இவை கடல்பாசிக்களால் வெளியிடப்படும் வாயுக்கள்.

அந்த கிரகத்தில் இந்த வாயுக்கள் வெளிப்படுவதன் மூலம் கடல்பாசி உள்ளிட்டவை இருப்பதும், மேலும் சில உயிரினங்கள் அங்கு வசிக்கலாம் என்பதும் 98% உறுதியாகியுள்ளது. மேலும் அந்த கிரகமானது பூமியை விட இரண்டு மடங்கு பெரியதாகவும், அதிகமான நீர் பரப்பை கொண்டுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இங்கிலாந்து ஆய்வுக்குழுவை வழிநடத்தியவர் இந்திய வம்சாவளியான விஞ்ஞானி நிக்கு மதுசூதன் ஆவார். வேறு உலகில் உயிர்கள் உள்ளதை இந்திய வம்சாவளி ஒருவர் கண்டறிந்துள்ளதை பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News