25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடரின் அரையிறுதியின் முதல் போட்டியில் ஹம்பி, திவ்யா 'டிரா' செய்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடரின் அரையிறுதியின் முதல் போட்டியில் ஹம்பி, திவ்யா 'டிரா' செய்தனர்.

பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் ஜார்ஜியாவில் 46 நாடுகளில் இருந்து107 பேர் பங்கேற்கின்றனர்.'டாப்-3' இடம் தகுதிப் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் போட்டியில்('கேண் டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஹம்பி, திவ்யா என இரு வீராங்கனைகள் முதன் முறையாக முன்னேறி, வரலாறு படைத்தனர்.நேற்று தலா இரு போட்டி கொண்ட அரையிறுதி சுற்று துவங்கின. 

முதல் உலகத் போட்டியில் தரவரிசையில்'நம்பர்-5' வது இடத்திலுள்ள ஹம்பி,'நம்பர்-3' வீராங்கனை சீனாவின் லெய் டிங்ஜீ மோதினர்.17 வது நகர்த்தலில் சற்று பின்தங்கிய ஹம்பி, பின் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார்.38 வது நகர்த்தலில் இப் போட்டி‘டிரா’ஆனது. இருவரும் 0.5-0.5 என சம புள்ளியில் உள்ளனர்.

மற்றொரு அரையிறுதியில் உலகத் தரவரிசையில்18வது இடத்திலுள்ள,19 வயது வீராங்கனை திவ்யா,'நம்பர்-8' ஆக உள்ள சீனாவின் வலிமையான ஜோங்இயை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடினார் திவ்யா.இப்போட்டி30வது நகர்த்தலில்'டிரா' ஆக, இருவரும்0.5,0.5 என சம புள்ளி பெற்றனர்.இன்று அரையிறுதி இரண்டாவது போட்டி நடக்கிறது. இதில் வெற்றி பெறும் வீராங்கனைகள் பைனலுக்கு செல்லலாம். மாறாக, மீண்டும் 'டிரா' ஆனால், நாளை 'டை பிரேக்கர்' முறையில் வெற்றியாளர் முடிவு செய்யப்படுவர் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News