25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


எலான் மஸ்க் எச்சரிக்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எலான் மஸ்க் எச்சரிக்கை.

 பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனபிரபல தொழிலதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து, செலவுகளை குறைக்கவும், பிற நாடுகளுக்கு வழங்கப்படும் தேவையில்லாத நிதி உதவிகளை நிறுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த நான்காயிரம் கோடி ரூபாய் நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதுஎன்பதைகுறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அடுத்த கட்டமாக அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தாமாகவே முன்வந்து ராஜினாமா செய்பவர்களுக்கு எட்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், அரசு ஊழியர்கள் தாங்கள் வேலை செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.எலான் மஸ்க் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்கள் கணிசமான அளவில் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுவதால், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News