காமன்வெல்த் போட்டியில் இந்திய 'பாரா' வீரர்கள் மீது நம்பிக்கை.
கிளாஸ்கோவில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் இந்திய மாற்றுத்திறனாளி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல பதக்கங்களை வெல்வார்கள் என இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் 23வது காமன்வெல்த் விளையாட்டில், இந்தியா சார்பில் 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் என மொத்தம் 126 பேர் 8 விளையாட்டுப் பிரிவுகளில் களமிறங்குகின்றனர். இதில் 'பாரா' பிரிவும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து தேவேந்திர ஜஜாரியா கூறுகையில், "இந்திய 'பாரா' வீரர்கள் இந்த முறை சிறப்பாக செயல்பட்டு குறைந்தது 5 முதல் 6 பதக்கங்கள் வரை வெல்வார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது. அவர்கள் அதற்கான திறமையுடன் தயாராகியுள்ளனர்," என்றார்.
0
Leave a Reply