25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


படுக்கைப்புண்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

படுக்கைப்புண்

படுக்கைப்புண் என்பது அழுத்தப்புண். அதாவது தொடர்ந்து ஏற்படும் அழுத்தத்தினால் திசுக்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் பிராணவாயுவும், ஊட்டச்சத்தும் திசுக்களுக்குக் குறைகிறது. தசைகளிலிருந்து கழிவுப் பொருட்கள் வெளியேறுவது குறைந்து அங்குள்ள திசுக்கள் இறந்து புண்ணாகிவிடும். முதலில் தோலில் நிற மாற்றம் இருப்பதைக் காணலாம். பிறகு புண்ணாகி மிகவும் ஆழமானதாக மாறிவிடும். இது உடலில் பெரும்பாலும் எலும்புகள் புடைத்துக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஏற்படும். அந்த இடங்கள் படுக்கைகளில் அழுத்தப்படும் போது அழுத்தம் அதிகரித்து, ரத்த ஒட்டம் குறைந்து திசுக்கள் இறந்து அழுத்தப்புண் உண்டாகிறது.

தோலில் ஏதாவது ஒரு அசாதாரணமான மாற்றம் ஏற்பட்டால் உடனே அதை மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

புண் ஏற்பட்டுள்ள பகுதியில் அழுத்தம் ஏற்படாமல் இருக்கத் தலையணை அல்லது காற்றுத் தலையணை வைத்து அழுத்தத்தைக் குறைக்கலாம்.

சுமார் 2 மணி நேரத்திற்கு ஒருமுறையாவது புண் இருக்கும் இடத்திற்கு அழுத்தம் ஏற்படாமல் நிலையை மாற்றிப் படுக்கவைக்க வேண்டும். (Change of position).

தேவையானால் கிருமிநாசினி மருந்து மூலம் புண்ணைச் சுத்தம் செய்து தகுந்த மருந்துகளை வைத்துக் கட்டுப்போட வேண்டும்.

உடல்நலம் தேறத் தேவையான கலோரி, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற உணவு வகைகளைக் கொடுக்கலாம்.

 புண் மிகவும் ஆழமாகவோ, அழுகியோ இருந்தால் அதை மருத் மருத்துவரின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அதற்குத் தக்க சிகிச்சை அளிக்க வேண்டும்.

முதியோர் கவனிப்பில் பொதுக் கவனிப்பும், அடிப்படை வசதிகளுமே மிகவும் முக்கியமானவை. இவற்றைச் செவிலியர் மிக கவனமாகக் கடைப்பிடித்தால் பலதொல்லைகள் வராமலேயே தவிர்க்க முடியும் அல்லது ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தக்க சிகிச்சை அளிக்க முடியும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News