25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஆசிய ஜூனியர் பாட்மின்டன்  (கலப்பு அணி)..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் (கலப்பு அணி)..

 ஆசிய ஜூனியர் பாட்மின்டன் (கலப்பு அணி) இந்தோனேஷியாவில், சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. அணிகளுக்கு இடையிலான லீக் சுற்றில் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, கலப்பு இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் விஷ்ணு கேதர், ரெஷிகா ஜோடி 11-5 என இலங்கையின் கெனத், இசுரி ஜோடியை வீழ்த்தியது. பெண்கள் இரட்டையர் முதல் போட்டியில் இந்தியாவின் காயத்ரி, மான்சாரவாத் ஜோடி 11-9 என இலங்கையின் இசுரி, சிதுமி டி சில்வா ஜோடியை வென்றது.

  இந்தியாவின் தன்வி சர்மா 11-7 என  பெண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் இலங்கையின் சிதுலி ரணசிங்கேவை வென்றார். இந்தியாவின் பிரனவ் ராம் 11-7 என ஆண்கள் ஒற்றையர் முதல் போட்டியில் ,இலங்கையின் திடாசாவை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் ராஜுலு ராமு 11-9 என இலங்கையின் ரணித்மா லியனகேவை வென்றார்.இந்திய அணி 110-69 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி, தனது 2வது போட்டியில் இன்று ஐக்கிய அரபு எமிரேட்சை (யு.ஏ.இ.,) சந்திக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News