சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம்
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நாராணாபுரம் ஜெய்ஶ்ரீமன் நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 176 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.6.17 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளையும், முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ.26.40 இலட்சம் மதிப்பில் வேலை உத்தரவுகளையும் என மொத்தம் 187 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6.42 கோடி மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் (20.04.2025) வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பு ஏற்று இருக்கக்கூடிய இந்த நான்கு ஆண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்கள் வாயிலாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் வெற்றிகரமாக இன்று செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டமும் ஒன்று. மனிதனாக பிறக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் அடிப்படையாக தேவைகளாக இருப்பது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம். இந்த இருக்க இருப்பிடம் என்பது இன்றைக்கு பலருக்கும் அது எட்டாக்கனியாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையாக இருக்கிறது.
தமிழ்நாட்டினுடைய பல பகுதிகளில் குடிசைகள் இருந்த சூழ்நிலையில் தமிழ்நாட்டை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற கனவு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு இருந்தது. அந்த வகையில் 1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், அவர்தான் சென்னை மாநகரம் முழுவதும் இருக்கக்கூடிய குடிசைகளை எல்லாம் மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், குடிசை மாற்று வாரியம் என்ற ஒன்றை உருவாக்கி குடிசையில் குடியிருந்த அனைவரும் அடுக்குமாடிகளில் குடியேற வீடுகளை உருவாக்கி தந்தார்.அது போல தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஆதிதிராவிட மக்களுக்கு வீடுகள் கட்டப்படக்கூடிய திட்டம் மூலம் காங்கிரீட் வீடுகளை உருவாக்கித் தந்தார்.
அதனுடைய வெற்றியின் தொடர்ச்சியாக தான், டாக்டர் கலைஞர் அவர்கள், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு முழுவதும் குடிசை பகுதிகளை கண்டறிந்து அவற்றை எல்லாம் காங்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டினுடைய தமிழ்க்குடிகள் அனைவரும் அவர்களுக்கு என்று ஒரு நிரந்தரமான கான்கிரீட் வீடு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் இருந்த திட்டத்தை செயல்படுத்தினார்.இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 360 சதுர அடி பரப்பளவில் காங்கிரீட் வீடுகள் கட்டப்படுவதற்கு ஏறத்தாழ ரூ.3.50 இலட்சம் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய இந்த திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை ஏழை மக்களுக்கு எல்லாம் வீடுகள் வழங்கக்கூடிய திட்டத்தை நாம் செய்ய வேண்டும் என்று செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், 2025-26 ஆம் ஆண்டில் 1 இலட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வீடு என்பது ஏழை எளிய மக்களின் வாழ்நாள் கனவு. அந்த கனவை நிறைவேறுவதற்கு அரசு இரண்டு மிக முக்கியமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒன்று நிலம் இல்லாத ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்குதல், அதன் தொடர்ச்சியாக அவர்கள் வீடுகள் கட்டுவதற்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அந்த திட்ட பயன்களை வழங்குவது. இந்த இரண்டிலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அதிகப்படியான பட்டாக்களை வழங்கிய மாவட்டம் நமது விருதுநகர் மாவட்டம் தான்.அதற்காக அரசினுடைய சிறப்பு அனுமதிகளை பெற்று, மாவட்ட நிர்வாகம் அனுப்பிய முன்மொழிவுகளுக்கு எல்லாம் உரிய அரசாணைகளை பெற்று சுமார் 40,000 பட்டாக்களை சாத்தியப்படுத்திய மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஆகியோர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்வதை கடமையாக கருதுகிறேன்.
அதேபோல இன்றைய தினம் வழங்கப்படக்கூடிய இந்த கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் பயன் என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில், நமது மாவட்டத்தில் சுமார் 3000 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைவிட மிக முக்கியம் இனிமேல் எத்தனை தகுதியுள்ள பயனாளிகள் இருந்தாலும், வீட்டுமனை இருக்கும் என்றால் அவர்களுக்கு வீடுகள் வழங்குவதற்குரிய அனுமதியும் அமைச்சர் பெருமக்கள் அவர்கள் பெற்றுத் தந்திருக்கிறார்கள். எனவே தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் அடுத்த கட்டங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் உடைய பயன்களை பொதுமக்கள் பெற, ஏழை எளிய மக்களின் வாழ்நாள் கனவாக இருக்கக்கூடிய காங்கிரீட் வீடுகளை கட்டுவதற்கு அனைத்துத் துறை அலுவலர்கள் குறிப்பாக ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்மாவட்டஊரகவளர்ச்சிமுகமைதிட்டஇயக்குநர்மரு.தண்டபாணி,முன்னாள்சிவகாசிஊராட்சிஒன்றியக்குழுத்துணைத்தலைவர் திரு. விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply