25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஐஸ்வரி பிரதாப் சிங், ஆசிய துப்பாக்கி சுடுதலில்  தங்கம் வென்றார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐஸ்வரி பிரதாப் சிங், ஆசிய துப்பாக்கி சுடுதலில்  தங்கம் வென்றார் .

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், ஆண்களுக்கான தனிநபர், 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' பிரிவு பைனலில் அசத்திய இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (462.5 புள்ளி) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

 'ரைபிள்-3 பொஷிஷன்' ஆண்கள் அணிகளுக்கான 50 மீ பிரிவில் ,ஐஸ்வரி பிரதாப் சிங், செயின் சிங், அகில் ஷியோரன் அடங்கிய இந்திய அணி, புள்ளிகளுடன் 1747.87 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது. 

தனிநபர் 50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்' ஜூனியர் ஆண்களுக்கான பிரிவில் இந்தியாவின்அட்ரியன் கர்மாகர் (463.8 புள்ளி) தங்கம் கைப்பற்றினார். மற்றொருஇந்தியவீரர் வேதாந்த் நிதின் (448.8) வெண்கலம் வென்றார்.

50 மீ., 'ரைபிள்-3 பொஷிஷன்'  ஜூனியர் ஆண்கள் அணிகளுக்கான பிரிவில் வேதாந்த் நிதின் அட்ரியன், ரோகித் கன் யான் அடங்கிய இந்திய அணி, 1733.69 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News