போர்ச்சுகலில் பொது இடங்களில் புர்கா, நிகாப் உள்ளிட்ட முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பெண்களை முகத்தை மூட வற்புறுத்துபவர்களுக்கும் கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் Healthy 365 செயலி மூலம் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் Healthpoints மற்றும் Rewards வழங்கப்படுகின்றன.🚶 தினசரி Steps பதிவு செய்வதற்கு புள்ளிகள்.😴 போதுமான நேரம் தூங்குவதற்கும் Healthpoints.🏃 வாராந்திர உடற்பயிற்சி இலக்குகளை அடைந்தால் கூடுதல் புள்ளிகள்.🥗 சில பங்கேற்கும் கடைகளில் Healthy Food வாங்கும்போதும் Rewards கிடைக்கலாம்.🎁 சேகரித்த புள்ளிகளை தகுதியான eVoucher மற்றும் பிற Rewards-ஆக மாற்றிக்கொள்ளலாம்.உங்கள் Steps, Sleep, Exercise மற்றும் Rewards ஆகியவற்றை ஒரே செயலியில் கண்காணிக்க முடியும்.
பல நூற்றாண்டுகளாக நிலைத்து நிற்கும் சீனப் பெருஞ்சுவர், அக்கால கட்டுமான நுட்பத்தின் அற்புதமான எடுத்துக்காட்டு.சில பகுதிகளில் சுண்ணாம்பு கலவையுடன் அரிசிக் கஞ்சி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தக் காலத்திலேயே இயற்கை சூழல், கட்டுமான வலிமை உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு கட்டப்பட்டதே அதன் நீடித்த தன்மைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று
PhonePe நிறுவனம் UAE-ல் தனது சர்வதேச சேவைகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. UAE Central Bank-ன் அனுமதியுடன், அந்நாட்டில் Wallet, Gift Cards மற்றும் International Money Transfer உள்ளிட்ட சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
சிங்கப்பூரில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், தினமும் 15 நிமிடங்கள் புத்தகம் படிப்பவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் முயற்சியை தேசிய நூலகம் தொடங்கியுள்ளது. டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைத்து வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம். ஆன்லைனிலும் புத்தகங்களை வாசிக்கலாம்.
சீனாவின் CIFTIS வர்த்தகக் கண்காட்சியில் BG-5 Golden Dragon Fishஎன்ற ரோபோ மீன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையான மீனைப் போல நீந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இது, நீருக்கடியில் ஆய்வு, கண்காணிப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி போன்ற பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
Gulf நாடுகளில் பயணம் செய்யும்போது புகைப்படம் எடுப்பதில் எச்சரிக்கை அவசியம். விபத்து நடந்த இடங்கள், போலீஸ் நடவடிக்கைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ராணுவப் பகுதிகளை புகைப்படம் எடுப்பது சில நாடுகளில் சட்ட சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே உள்ளூர் சட்ட விதிகளை தெரிந்து கொண்டு செயல்படுவது பாதுகாப்பானது.
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ADNOC நிறுவனம், வெறும் 24 மணி நேரத்தில் 6,428 அடி ஆழம் வரை துளையிட்டு புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் பணிகளை மேலும் வேகமாகவும், துல்லியமாகவும், திறமையாகவும் மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொழில்நுட்பமும் மனித திறனும் இணைந்தால் எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்!
2026-ல் சீனா உலகின் முதல் கர்ப்பத்தை தாங்கும் மனித வடிவ ரோபோட்டை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மனிதக் குழந்தை பிறப்பை சாத்தியமாக்கும் தொழில்நுட்பம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல்கள் தற்போது பெரும் கவனத்தை பெற்றுள்ளன.
அமெரிக்காவின் தேசியக் கடன் வரலாற்றில் முதன்முறையாக $40 டிரில்லியனைத் தாண்டியுள்ளது.2017-ல் ட்ரம்ப் முதன்முறையாக அதிபராக பதவியேற்றபோது சுமார் $20 டிரில்லியனாக இருந்த கடன், தற்போது இரட்டிப்பாகியுள்ளது. அதிகரிக்கும் வட்டி, அரசுச் செலவுகள் மற்றும் சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.