25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சர்வதேச செய்திகள்

Sep 13, 2026

ஏலத்திற்கு வரும் தங்கக் கழிப்பறை!

கலை உலகில் வித்தியாசமான படைப்புகளுக்குப் பெயர் பெற்ற இத்தாலிய கலைஞர் மவுரிசியோ கட்டெலன், 18 காரட் தங்கத்தால் உருவாக்கிய கழிப்பறை மீண்டும் ஏலத்திற்கு வர உள்ளது.‘America’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படைப்பு, வெறும் தங்கக் கழிப்பறையாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. செல்வம், அதிகாரம், சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் நுகர்வுக் கலாசாரத்தை நையாண்டி செய்யும் கலைப்படைப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.உலகப் புகழ்பெற்ற ஏல நிறுவனமான Sotheby’s மூலம் இது ஏலத்திற்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு சாதாரண பயன்பாட்டுப் பொருளை கோடிக்கணக்கான மதிப்புள்ள கலைப்படைப்பாக மாற்றியிருப்பதே இந்தப் படைப்பின் மிகப்பெரிய தனிச்சிறப்பு.கழிப்பறைதான்... ஆனால் விலை மட்டும் சாதாரணமாக இருக்காது!

Sep 13, 2026

நிலாவில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் தயாராகிறது!

நிலவில் மனிதர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்துவதற்கான திட்டங்களும் வேகமெடுத்து வருகின்றன.அமெரிக்காவைச் சேர்ந்த Interlune நிறுவனம், இயந்திர உற்பத்தியாளரான Vermeer நிறுவனத்துடன் இணைந்து நிலவில் மண்ணை அகழ்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று நிலவின் மண்ணில் காணப்படும்ஹீலியம்-3 (Helium-3)போன்ற ஐசோடோப்புகளை ஆய்வு செய்வதும், எதிர்காலத்தில் அவற்றை பிரித்தெடுக்கும் சாத்தியத்தை ஆராய்வதும் ஆகும்.பூமியில் அரிதாகக் காணப்படும் ஹீலியம்-3, சூரியக் காற்றின் தாக்கம் காரணமாக நிலவின் மேற்பரப்பு மண்ணில் சேர்ந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எதிர்கால அணுக்கரு இணைவு (Fusion) ஆற்றல் தொழில்நுட்பத்தில் இது பயன்படக்கூடிய வளமாக ஆராயப்பட்டு வருகிறது.Interlune உருவாக்கும் அகழ்வு தொழில்நுட்பம், நிலவின் மண்ணை தோண்டி எடுத்து, அதில் உள்ள வளங்களைப் பிரித்தெடுக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.இந்த முயற்சியின் மூலம் நிலவில் ஹீலியம்-3 எந்த அளவுக்கு உள்ளது, அதை பொருளாதார ரீதியாகப் பிரித்தெடுப்பது சாத்தியமா என்பதையும் எதிர்காலத்தில் மதிப்பிட முடியும்.எனினும், நிலவில் இருந்து ஹீலியம்-3-ஐ பெரிய அளவில் அகழ்ந்து எடுத்து பூமியின் ஆற்றல் தேவையை பூர்த்தி செய்வது இன்னும் எதிர்கால இலக்காகவே உள்ளது.இதற்கு பல தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சவால்கள் உள்ளன.நிலவில் தண்ணீர் தேடுவதிலிருந்து வளங்களை அகழ்வது வரை... மனிதர்களின் அடுத்த பெரிய ஆராய்ச்சி களமாக நிலா மாறி வருகிறது!

Sep 11, 2026

சிங்கப்பூரில் செப். 15-ல் சைரன் ஒலி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

சிங்கப்பூர் முழுவதும் உள்ள ‘பப்ளிக் வார்னிங் சிஸ்டம்’ செப்டம்பர் 15-ம் தேதி மாலை 6.20 மணிக்கு சோதனைக்காக ஒலிக்க உள்ளது.அப்போது ‘Important Message’ என்ற சிக்னல் ஒலிக்கும். அதே நேரத்தில், SGSecure செயலியின் அறிவிப்புகளை இயக்கி வைத்துள்ள செல்போன்களுக்கும் எச்சரிக்கை தகவல் வரும். Singtel நெட்வொர்க் பயன்படுத்துவோருக்கு SG Alert அறிவிப்பும் கிடைக்கும்.இது உண்மையான அவசரநிலை எச்சரிக்கை அல்ல. சைரன் மற்றும் எச்சரிக்கை அமைப்புகள் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் வழக்கமான சோதனை ஆகும். இந்த சிக்னல் பொதுவாக ஆண்டுதோறும் பிப்ரவரி 15 மற்றும் செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் ஒலிக்கப்படுகிறது.

Sep 11, 2026

புதிய டிஜிட்டல் டாலர்.

கோல்ட்மேன் சாக்ஸ், பாங்க் ஆஃப் அமெரிக்கா, சிட்டி, டாய்ச் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து புதிய நிறுவனத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இந்த நிறுவனம் அமெரிக்க டாலரின் மதிப்புடன் இணைக்கப்பட்ட ‘ஸ்டேபிள்காயின்’ ஒன்றை 2027-ம் ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.சர்வதேச பணப்பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் சொத்து பரிவர்த்தனைகளை வேகமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளும் வகையில், பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.மேலும், எதிர்காலத்தில் யூரோ உள்ளிட்ட பிற ஜி7 நாடுகளின் நாணயங்களுடன் இணைக்கப்பட்ட ஸ்டேபிள்காயின்களையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sep 10, 2026

25 கி.மீ. கடல் பாலம்... சவுதியிலிருந்து நேராக பஹ்ரைன்!

1. கிங் ஃபஹத் காஸ்வேசவுதி அரேபியாவையும் பஹ்ரைனையும் இணைக்கும் சுமார் 25 கி.மீ. நீளமுள்ள கடல் பாலம் இது.2. 30 நிமிடத்தில் பஹ்ரைன்!சவுதி அரேபியாவிலிருந்து காரிலேயே நேரடியாக மற்றொரு நாட்டிற்குச் செல்லும் வசதியை இந்தப் பாலம் வழங்குகிறது.3. கடலுக்கு நடுவே இமிக்ரேஷன்!பாலத்தின் நடுப்பகுதியில் பாஸ்போர்ட் மற்றும் விசா சோதனைகள் நடைபெறும் மையம் அமைந்துள்ளது.

Sep 09, 2026

இந்த சவுதி கட்டிடம் கண்ணுக்கே தெரியாது! (  Maraya Concert Hall, )

9,740 கண்ணாடிகளால் ஆன அதிசயம்.சவுதி அரேபியாவின் அல்-உலா பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள Maraya Concert Hall, முழுவதும் பிரதிபலிக்கும் கண்ணாடிப் பேனல்களால் சூழப்பட்டுள்ளது.பாலைவனத்தோடு ஒன்றாக மறையும்.சூரிய ஒளியில் சுற்றியுள்ள மலைகளின் பிம்பத்தை கட்டிடம் பிரதிபலிப்பதால், தொலைவில் இருந்து பார்க்கும்போது அது சுற்றுச்சூழலுடன் ஒன்றாகக் கலந்து, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.உலகின் மிகப்பெரிய கண்ணாடிக் கட்டிடம்.சுமார் 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம், உலகின் மிகப்பெரிய கண்ணாடிக் கட்டிடமாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது.

Sep 08, 2026

ஸ்பெயினில் கடல் எல்லைக்கு புதிய பாதுகாப்பு ஏற்பாடு!

Ceuta எல்லைப் பகுதியில் எதிர்காலத்தில் சட்டவிரோத ஊடுருவல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஸ்பெயின் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. Tarajal கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் தடுப்பு அமைப்பு, கடல் வழியாக நடைபெறும் ஊடுருவல்களைத் தடுப்பதுடன், எல்லைக் கண்காணிப்பையும் வலுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Sep 07, 2026

அபுதாபியில் பாலைவனத்தை பசுமையாக்கும் மெகா திட்டம்.

பாலைவனப் பகுதிகளை மீண்டும் இயற்கை வளம் நிறைந்த நிலங்களாக மாற்றும் முயற்சியில் அபுதாபி சுற்றுச்சூழல் முகமை புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக சுமார் 1 கோடி உள்ளூர் தாவர விதைகள் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பரப்பப்பட உள்ளன. பாலைவனத்தின் இயற்கை சூழலை மீட்டெடுப்பதே இந்தப் பெரிய முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

Sep 05, 2026

Singapore-ல் இருக்கீங்களா? இந்த 10 Apps இருந்தால் பல வேலைகள் Easy.

சிங்கப்பூரில் வசிப்பவர்களுக்கு அன்றாட தேவைகளை எளிதாக்கும் சில முக்கியமான செயலிகள்:Singpass – அரசு சேவைகள், Digital IC மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை அணுக உதவும்.MyICA Mobile – SG Arrival Card மற்றும் குடிவரவு தொடர்பான சேவைகளுக்கு பயன்படும்.MyTransport.SG – பேருந்து நேரம், MRT சேவை மற்றும் போக்குவரத்து நிலவரங்களை தெரிந்துகொள்ளலாம்.SimplyGo – Bus/MRT  கட்டணம், பயண வரலாறு, கார்டு இருப்பு உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.OneService – சாலை பிரச்சினை, குப்பை, லிஃப்ட் கோளாறு, சத்தம் உள்ளிட்ட அக்கம்பக்கப் பிரச்சினைகளை புகார் செய்யலாம்.HealthHub – மருத்துவ சந்திப்புகள், பரிசோதனை முடிவுகள், மருந்துகள் உள்ளிட்ட சுகாதார தகவல்களை பார்க்கலாம்.Healthy 365 – உடற்பயிற்சி சவால்களில் பங்கேற்று Healthpoints மற்றும் rewards பெறலாம்.LifeSG – அரசு சலுகைகள், திட்டங்கள் மற்றும் குடும்ப சேவைகள் பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் பெறலாம்.Price Kaki – உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் விலைகளை ஒப்பிட்டு குறைந்த விலையை கண்டறியலாம்.ScamShield – சந்தேகத்திற்கிடமான அழைப்புகள், SMS மற்றும் இணையதள இணைப்புகளை அடையாளம் காண உதவும். 

Sep 04, 2026

UAE-யில் உள்ள இந்தியர்களுக்கு வங்கி எச்சரிக்கை!

இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய வங்கி விதிமுறைகள் குறித்து UAE-யில் வசிக்கும் NRI-க்கள் கவனம் செலுத்த வேண்டும். கூட்டுறவுவங்கிகளின் மூலதன விதிமுறைகள், KYC மற்றும் கணக்கு பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், தங்களது இந்திய வங்கி கணக்குகள் தொடர்பான விதிகளை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News