25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சர்வதேச செய்திகள்

Jun 18, 2026

பயணர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 6 முதல் புதிய விதி அமல்!

சிங்கப்பூரில் PayNow சேவையை பயன்படுத்தி பணம் அனுப்பும் மற்றும் பெறும் பயனர்களுக்கு முக்கியமான மாற்றம் ஒன்று ஜூன் 6 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.இதுவரை PayNow கணக்கில் பயனர்கள் அமைத்திருந்த custom nickname மற்றவர்களுக்கு காணப்பட்ட நிலையில், இனி அந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மையான பெயர் பகுதியளவு மறைக்கப்பட்ட (masked) வடிவில் மட்டுமே காட்டப்படும்.உதாரணமாக, "Van Chi Hew Mersilina" என்ற பெயர் "VaX ChX HeX MersiXXXX" போன்ற வடிவில் தோன்றக்கூடும்.இந்த புதிய மாற்றம், போலி அடையாளங்களை பயன்படுத்தி நடைபெறும் scam மற்றும் மோசடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வங்கிகள் சங்கம் (Association of Banks in Singapore) தெரிவித்துள்ளது.பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Jun 18, 2026

அனைத்து நாடுகளும் ஒப்புதல்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில காலமாக நிலவி வந்த போர்ச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஈரான் மீது இன்று நடத்ததிட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் அமெரிக்க அதிபர்டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார். மேலும், இந்த அமைதி ஒப்பந்தத்தின் இறுதி முடிவுகளுக்கு அமெரிக்கா, இஸ்ரேல், சவுதி அரேபியா உள்ளிட்ட "சம்பந்தப்பட்ட தரப்பினரும் ஒப்புதல் அனைத்து அளித்துவிட்டதாக" அவர் அறிவித்துள்ளார். பல மாத மோதலுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் அடுத்த சில நாட்களில் கையெழுத்தாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Jun 17, 2026

உலகின் முதல் டிரில்லியனர் எலான் மஸ்க்?

SpaceX நிறுவனத்தின் IPO காரணமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 1.1 டிரில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ₹104 லட்சம் கோடி) எட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் உலகின் முதல் “டிரில்லியனர்” என்ற சாதனையை அவர் படைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரது சொத்து மதிப்பு தைவானின் மொத்த பொருளாதார மதிப்பான 976.7 பில்லியன் டாலரையும் மிஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Jun 16, 2026

அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம்: இன்னும் முடிவு இல்லை.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜூன் 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தாலும், கடல்சார் முற்றுகை நீக்கம், முடக்கப்பட்ட நிதி விடுவிப்பு மற்றும் யுரேனியம் செறிவூட்டல் உரிமை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.எனவே, முழுமையான ஆய்வுக்குப் பிறகே அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

Jun 15, 2026

சவுதி அரேபியாமின்சாரம் ஏதுமின்றி சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி குளிர்ச்சியைத் தரும் 'நெஸ்கோட்' (NESCODT) எனும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஏசி சவுதி அரேபியாவின் கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (KAUST) விஞ்ஞானிகள், மின்சாரம் ஏதுமின்றி சூரிய ஒளியை மட்டுமே பயன்படுத்தி குளிர்ச்சியைத் தரும் 'நெஸ்கோட்' (NESCODT) எனும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தொழில்நுட்பம், காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, பின்னர் சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி அந்த ஈரப்பதத்தை ஆவியாக்குவதன் மூலம் குளிர்ச்சியான காற்றை உருவாக்குகிறது. குறிப்பாக, 50 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான கடும் வெப்பம் நிலவும் பாலைவனப் பகுதிகளிலும் இது மிகச் சிறப்பாகச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Jun 15, 2026

ட்ரம்ப் குடும்பத்தின் கிரிப்டோ வருவாய் சர்ச்சை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னெடுத்த கிரிப்டோகரன்சி திட்டங்கள் மூலம் சுமார் 2.3 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாக சமீபத்திய Reuters புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. ட்ரம்ப் குடும்பத்தின் பெயர் மற்றும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முதலீட்டாளர்களை ஈர்த்த இந்தத் திட்டங்கள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன. அதே நேரத்தில், இந்த முதலீடுகளில் பங்கேற்ற பல சாதாரண முதலீட்டாளர்கள், கணிசமான நிதி இழப்புகளை சந்தித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Jun 15, 2026

ஃபெங்லாய் தக்ஸி நதி கிராண்ட் பாலம்.உலகின் நீளமான ஸ்டீல் ஆர்ச் பாலம்.

சீனாவின் சோங்சிங் நகரில் கட்டப்பட்டு வரும் ஃபெங்லாய் தக்ஸி நதி கிராண்ட் பாலத்தின் முக்கிய ஸ்டீல்-கான்கிரீட் இணைப்பு பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. 1,136.7 மீட்டர் நீளம், 310 மீட்டர் உயரம் மற்றும் 580 மீட்டர் பிரதான இடைவெளியுடன், இது உலகின் மிக நீளமான ஸ்டீல் ஆர்ச் பாலமாக உருவாகியுள்ளது.

Jun 13, 2026

"எலான் மஸ்க்கிற்கு பெரும் பின்னடைவு: முக்கிய முடிவால் சரிவைச் சந்தித்தது."

அமெரிக்காவில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் மீது 5% வருடாந்திர சொத்து வரி (Wealth Tax) விதிப்பதற்கான புதிய மசோதா அந்நாட்டுச் செனட் சபையில் தீவிர விவாதத்தில் உள்ளது. "Make Billionaires Pay Their Fair Share Act" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க் மட்டுமே ஆண்டுக்குச் சுமார் 24.8 பில்லியன் டாலர் முதல் 42 பில்லியன் டாலர் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்த வரியின் மூலம் திரட்டப்படும் பல டிரில்லியன் டாலர் நிதி, சாமானிய மக்களின் கல்வி, மருத்துவம், குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டுவசதித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jun 13, 2026

பில் கேட்ஸ்  (Bill Gates) நிதியுதவியுடன் 3 கோடி கொசுக்களை உற்பத்தி செய்து காற்றில் பறக்கவிடுகிறது.

 கொலம்பியா நாட்டில் பில் கேட்ஸ்  (Bill Gates) நிதியுதவியுடன் இயங்கி வரும் ஒரு பிரத்யேக ஆய்வகம், வாரந்தோறும் சுமார் 3 கோடி கொசுக்களை உற்பத்தி செய்து காற்றில் பறக்கவிடுகிறது. இது விசித்திரமாகத் தோன்றினாலும், டெங்கு, ஜிகா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் ஒரு அறிவியல் முயற்சியாகும். இந்த கொசுக்கள் 'வோல்பாக்கியா' (Wolbachia) எனப்படும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளன; கொசுக்களுக்குள் இந்த வைரஸ்கள் பாக்டீரியா வளர்வதைத் தடுக்கிறது. இந்த ஆய்வகக் கொசுக்கள் காட்டில் உள்ள சாதாரண கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்போது, அந்தப் பண்பு அடுத்த தலைமுறைக்கும் பரவி, காலப்போக்கில் நோய் பரப்பும் திறன் கொண்ட கொசுக்களின் எண்ணிக்கை குறைகிறது

Jun 12, 2026

ஈரானின் அதிரடி மிரட்டல்: முடங்கியது ஹோர்முஸ் ஜலசந்தி!

சொத்துக்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், லெபனான் மீதான தாக்குதல்களைக் கண்டித்து அமெரிக்காவுடனான தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை ஈரான் உடனடியாக ரத்து செய்துள்ளது.மேலும், இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தின் மிக முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz)முழுமையாக மூடுவதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. ஈரானின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பும் அச்சமும் தொற்றிக் கொண்டுள்ளது.செய்தி நாள்: 11.06.2026

1 2 3 4 5 6 7 8 9

AD's



More News