25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சர்வதேச செய்திகள்

Oct 06, 2026

 பட்டம் பெற்ற ரோபோக்கள்.

சீனாவின் ஹாங்சோ ரோபோ பள்ளியில் 2 மாத பயிற்சியை முடித்த 4 ரோபோக்கள் அதிகாரப்பூர்வமாக பட்டம் பெற்றுள்ளன. வழிகாட்டுதல், ஆய்வு மற்றும் இசை உள்ளிட்ட பணிகளில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Oct 06, 2026

சவுதி அரேபியாவின் புதிய மின்சார கார்.

சவுதி அரேபியா உள்நாட்டில் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் CEER EXOBOT மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. EXOBOT SUV-யில் 112 kWh பேட்டரி, 850 HP சக்தி மற்றும் Dual-Motor AWD வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oct 05, 2026

ஈரானிய ரியால் மதிப்பு கடும் வீழ்ச்சி.

ஈரானிய ரியாலின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரியாலின் மதிப்பு 25 லட்சத்தை கடந்துள்ளது. போர் சூழலால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

Oct 05, 2026

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு சர்வதேச விருதுகள்.

2026 ஸ்கைட்ராக்ஸ் விருதுகளில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உலகின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசியாவின் சிறந்த விமான நிறுவனம் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளது. அதன் துணை நிறுவனமான Scoot, தொடர்ந்து 6-வது ஆண்டாக சிறந்த நீண்ட தூர பட்ஜெட் விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது

Oct 03, 2026

விண்வெளியில் அடுத்த உலகப்போர்: சீன ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட விண்வெளி மண்டலமே உலக வல்லரசு நாடுகளின் எதிர்காலப் போர்க்களமாக மாறும் என்று சீனாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.தாக்குதல் உத்திகள்: நிலவின் சிக்கலான ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி விண்கலன்களை எதிரிகளுக்குத் தெரியாமல் மறைத்து வைத்து தாக்குதல் நடத்தவும், விண்வெளியின் முக்கியப் பாதைகளைக் கைப்பற்றி எதிரி நாட்டு விண்கலன்களை வழிமறிக்கவும் முடியும்.விண்வெளி அதிகாரம்: பூமி-நிலவு இடைப்பட்ட மண்டலத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் விண்வெளியின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றி எதிரி நாடுகளை அச்சுறுத்த முடியும் என இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் டாங் ஜாஹுய் தெரிவித்துள்ளார்.வெளியீடு: இந்த ஆய்வுச் கட்டுரை 'ஜர்னல் ஆஃப் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல்' (Journal of Command and Control) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Oct 03, 2026

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல்.

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் விளாடிமிர் புதினுடன் தொடர்புடைய யுனைடெட் ரஷ்யா கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Oct 02, 2026

நிலவில் சோலார் மின்சாரம் தயாரிக்க புளூ ஆர்ஜின் திட்டம்.

நிலவில் சூரிய ஒளி தொடர்ந்து கிடைக்காததால், அங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்க அமெரிக்காவின் 'புளூ ஆர்ஜின்' தனியார் நிறுவனம் தீர்வுகண்டுள்ளது.திட்டம்: நிலவின் தென் துருவப்பகுதிக்கு அருகே 66  அடி உயரத்தில் 'பவர் டவர்' (Power Tower) என்ற சோலார் டவரைச் செங்குத்தாக நிறுவுதல்.இலக்கு: 10 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்தல்.இடம் தேர்வு: தென் துருவப்பகுதியில் நீண்ட நேரம் சூரிய ஒளி படும் உயரமான இடங்கள் இருப்பதால் இப்பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.எதிர்காலத் திட்டம்: மேலும் பல சோலார் டவர்களை நிறுவி, லேண்டர் மட்டுமன்றித் தொலைவில் உள்ள மற்ற உபகரணங்களுக்கும் மின்சாரம் வழங்குவது.

Oct 01, 2026

உலகப் பொருளாதாரம் & சர்வதேசச் செய்திகள்

ஹாங்காங்கைக் கைப்பற்றிய 100 டன் ரஷ்யத் தங்கம்: 2026-ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் ரஷ்யாவிலிருந்து சுமார் 100 டன் தங்கம் ஹாங்காங்கிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகம். 2022 மேலைநாடுகளின் தடைகளுக்குப் பிறகு, ரஷ்யா தன் தங்க ஏற்றுமதியை ஆசியாவை நோக்கித் திருப்பியுள்ளது. இதில் 2022 முதல் இதுவரை சுமார் $35 பில்லியன் மதிப்பிலான ரஷ்யத் தங்கத்தை ஹாங்காங் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக Financial Times செய்தி வெளியிட்டுள்ளது."நிலா எங்களுடையது!" - சர்ச்சையைக் கிளப்பிய டிரம்ப்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது  'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில், நிலவில் அமெரிக்கக் கொடி இருப்பது போன்ற படத்தைப் பகிர்ந்து "THE MOON IS OURS" (நிலா எங்களுடையது) எனக் குறிப்பிட்டது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தின்படி எந்த ஒரு நாடும் நிலவின் மீது தனி உரிமை கொண்டாட முடியாது என்ற சூழலில், டிரம்பின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Sep 30, 2026

Gulf-க்கு புதிதாக செல்கிறீர்களா? இந்த 4 விஷயங்களில் கவனம் தேவை.

முதல் சம்பளத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலைபுதிய வேலைக்குச் சென்றவுடன் முதல் சம்பளம் உடனடியாக கிடைக்காமல் போகலாம். சில சூழ்நிலைகளில் 45 நாட்கள் வரை ஆகக்கூடும். எனவே ஆரம்ப நாட்களுக்குத் தேவையான செலவுக்குப் போதுமான பணத்தை வைத்திருப்பது நல்லது.உடனடியாக வேலை மாற்றுவது வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே கம்பெனி மாற்ற முடிவு செய்வதற்கு முன், உங்கள் Employment Contract மற்றும் அங்குள்ள தொழிலாளர் விதிமுறைகளை சரிபார்க்கவும். Public Wi-Fi-ல் Banking செய்யாதீர்கள். Wi5 Airport அல்லது பிற இடங்களில் கிடைக்கும் Free Wi-Fi மூலம் Bank App-ல் Login செய்வதை தவிர்ப்பது பாதுகாப்பானது. முக்கியமான தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்.அங்கீகரிக்கப்படாத வாகனங்களில் பயணம் உரிய அனுமதி இல்லாத வாகனங்களில் பணம் கொடுத்து பயணம் செய்வதை தவிர்க்கவும். விதிமுறைகளை மீறினால் அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் ஏற்படலாம். Gulf-ல் புதிதாக இருப்பவர்கள், உள்ளூர் சட்டங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ விதிமுறைகளை தெரிந்து கொண்டு செயல்படுவது மிகவும் முக்கியம்.

Sep 29, 2026

போர்க்களத்தில் களமிறங்குமா மனித உருவ ரோபோக்கள்?

மனிதர்களைப் போல இயங்கும் Humanoid Robots எதிர்காலத்தில் போர்களிலும் பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.சீனாவில் நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ போட்டிகளில் பங்கேற்ற ரோபோக்கள் ஓட்டம், நடனம் மற்றும் குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை செய்து பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.இதைத்தொடர்ந்து, ராணுவப் பயன்பாடுகளுக்காக மனித உருவ ரோபோக்களை உருவாக்குவது தொடர்பாக சீனாவில் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆபத்தான பகுதிகளில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்களை அனுப்புவது, கண்காணிப்பு மற்றும் பிற ராணுவப் பணிகளில் அவற்றைப் பயன்படுத்துவது போன்ற வாய்ப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்கள் பாதுகாப்புத் துறையில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.பட்டம் பெற்று வேலைக்கு செல்லப்போகும் ரோபோக்கள்சீனாவின் ஹங்சோ ரோபோ பள்ளியில் 2 மாத கடுமையான பயிற்சிக்கு பிறகு 4 ரோபோக்கள் அதிகாரப்பூர்வமாக பட்டம் பெற்றுள்ளன.வழிகாட்டி, ஆய்வு மற்றும் பியானோ வாசிக்கும் இந்த ரோபோக்கள் சீனா. தென்கொரியாவின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட உள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News