25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Jan 10, 2026

வத்தல் குழம்பு பொடி.

தேவையான பொருட்கள் :-  வத்தல் 1 கப், மல்லி விதை 1 கப், துவரம்பருப்பு கால் கப், கடலை பருப்பு கால் கப், உளுந்து 2 டேபிள் ஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், சீரகம் 1 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன், அரிசி 1 டீஸ்பூன், பெருங்காயம் 1 டீஸ்பூன், எண்ணெய் 2 முதல் 3 டீஸ்பூன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்,செய்முறை :- அனைத்தையும் சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து ஆறியவுடன் நைஸாக மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். குழம்பு வைக்கும் பொழுது வத்தக் குழம்பு பொடி சேர்த்து சமைத்தால் ரெம்ப ருசியாக இருக்கும். சுண்ட வத்தல், கடுகு, கருவேப்பிலை, தாளித்து வெங்காயம், பூண்டு, பச்ச மிளகாய் சேர்த்து புளி கரைத்து ஊற்றி தேவையான அளவு வத்தக் குழம்பு பொடி போட்டு நன்றாக எண்ணெய் பிரிந்ததும் எடுத்து வைக்க வேண்டும். 

Jan 10, 2026

பூண்டு சாதப் பொடி (2 கப் சாதத்திற்கு)

தேவையான பொருட்கள் :- பூண்டு 15 பல், மல்லிவிதை 1 டீஸ்பூன், வத்தல் 2 எண்ணம், கடலைபருப்பு 1 டீஸ்பூன், உளுந்து 1 டீஸ்பூன், (பதிலாக) பொரிகடலை அல்லது நிலக்கடலை சேர்க்கவும், எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, காயப்பொடி கால் டீஸ்பூன், தாளிக்க கடுகு, கருவேப்பிலை. செய்முறை:- அனைத்தையும் சேர்த்து சிறிதளவு எண்ணெய் விட்டு 5 முதல் 6 நிமிடங்கள் நன்றாக வறுக்கவும், பின் நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை, தாளித்து சிறிதளவு, நெய் சேர்த்து, பூண்டு பொடி சேர்த்து சாதத்தில் விரவி கலந்து சாப்பிட்டால் சுவையான பூண்டு சாதம் ரெடி

Jan 10, 2026

கருவேப்பிலை பொடி.

தேவையான பொருட்கள் :- கருவேப்பிலை உருவியது 1 கப், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு 1 டேபிள் ஸ்பூன, வத்தல் 4 முதல் 5, தனியா 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், பூண்டு 6 பல், எண்ணெய் 3 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.செய்முறை :- அனைத்தையும் தனி தனியாக வறுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளவும், கருவேப்பிலையை தனியாக வறுத்து கடைசியில் சேர்த்து பின் பொடி செய்யவும்உதிறி சாதத்திற்கு கடுகு, உளுந்து, தாளித்து இப்பொடியை சேர்த்தால் சுவையானகருவேப்பிலை சாதம் ரெடி. 

Jan 10, 2026

கத்தரிக்காய் சாதம் பொடி.

தேவையான பொருட்கள் - பிஞ்சு கத்தரிக்காய் 10 முதல் 12 வரை, பெங்களுர் தக்காளி 2 பெரியது, தனியா 2 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன், உளுந்து 2 டேபிள் ஸ்பூன், வத்தல் 4 முதல் 5, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், வெந்தயம் கால் டீஸ்பூன், பெருஞ்சீரகம் அரை டீஸ்பூன், பட்டை 2 இஞ்ச், தேங்காய் துருவல் 4 டேபிள் ஸ்பூன், எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் உப்பு தேவையான அளவு.செய்முறை:- பலசரக்கு அனைத்தையும் வெறும் வாணலியில் நன்றாக வாசம் வரும் வரை வறுத்து பொடி செய்து கொள்ளவும். பின் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு,உளுந்து தாளித்து கருவேப்பிலை சேர்த்து வதக்கியதும், கத்தரிக்காயை நீளவாக்கில் நைஸாக வெட்டி, உப்பு சேர்த்து வதக்கவும், அரை வேக்காடு வெந்தவுடன் இப் பொடியை சேர்த்து நன்றாக வெந்ததும் சாதத்தில் கலந்து பரிமாறவும். 

Jan 03, 2026

பொட்டுகடலை,நெய் உருண்டை.

தேவையான பொருட்கள் :4 கப் பொட்டுகடலை2கப்சர்க்கரை,6ஏலக்காய்,தேவைக்கு நெய்.செய்முறை  :முதலில்ஏலக்காய்,பொட்டுகடலையை மிக்ஸி ஜாரில்போட்டு அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.சர்க்கரையை அரைத்துக்கொள்ளவும்.பின்அரைத்த சர்க்கரை,பொட்டுகடலை மாவு இரண்டையும் கலந்துகொள்ளவும்.பின்வாணலியை அடுப்பில்வைத்து தேவைக்கு நெய்ஊற்றி,முந்திரிபருப்பு வறுத்து,நெய்கொஞ்சம்கொஞ்சமாக ஊற்றி உருண்டைகளாகப் பிடிக்கவும்.பொட்டு கடலைநெய்உருண்டைரெடி. சர்க்கரைகொஞ்சம் பிரியபட்டவர்கள்கூட்டிக் கொள்ளவும்.

Jan 03, 2026

வாழைப்பூ ஓட்ஸ் லட்டு உருண்டை.

தேவையான பொருட்கள்:வாழைப்பூ - 1 கப் ஓட்ஸ் - 1கப் தேங்காய் துருவல் - 4 கப் ஏலக்காய் பொடி,தேன்,நெய், முந்திரி - தேவையான அளவு.செய்முறை:வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, ஓட்ஸை நன்கு வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.அதே வாணலியில், மீண்டும் சிறிது நெய் சேர்த்து, நீர் எதுவும் இல்லாமல் வாழைப்பூ மசியும் வரை வதக்கவும்.அதில் தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறவும். பிறகு, வறுத்த ஓட்ஸை சேர்க்கவும். கடைசியாக சிறிதளவு தேன் ஊற்றி நன்கு கலந்து, கையால் உருட்டி லட்டு போல உருண்டை பிடிக்கவும்.பரிமாறும் போது, லட்டு உருண்டை மீது, வறுத்த முந்திரி வைக்கவும்.'வாழைப்பூ ஓட்ஸ் லட்டு!' தயார். சத்துடன், அபார ருசியும் இருக்கும்.

Jan 03, 2026

கடலை உருண்டை.

தேவையான பொருட்கள்:உடைத்த வேர்க்கடலை - இரண்டு கப்,பாகு வெல்லம் - ஒன்றரை கப், நெய் - இரண்டு தேக்கரண்டி.செய்முறை:வெல்ல பாகை, முற்றிய பதத்தில் எடுத்து, அதில் நெய் ஊற்றி உடைத்த வேர்க்கடலை போட்டு நன்கு கலந்து கொள்ளவும். இந்தக் கலவை சிறிது ஆறியவுடன், கைகளில் நெய்யை தொட்டுக் கொண்டு, உருண்டைகளாக பிடிக்கவும்.இளம் பாகாக இருந்தால் உருண்டை பிடிக்க வராது.

Jan 03, 2026

பொரி உருண்டை.

தேவையான பொருட்கள்:பொரி -ஒரு கப், வெல்லம் ஒன்றரை கப்,பொட்டுக்கடலை, வேர்க்கடலை -தலா ஒரு தேக்கரண்டி,செய்முறை:வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்சவும். பாகு. கம்பி பதம் வந்ததும், அதில் பொரி, பொட்டுக்கடலை மூன்றையும் போட்டு நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.பொட்டுக்கடலை, வேர்க்கடலை இரண்டையும் கொரகொரப்பாக துாள் செய்தும் சேர்க்கலாம்.

Jan 03, 2026

பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள் உருண்டை.

தேவையான பொருட்கள்:எள் -ஒரு கப், வெல்லம்- ஒன்றரை கப்,பொட்டுக்கடலை, வேர்க்கடலை- தலா ஒரதேக்கரண்டிசெய்முறை:எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் சிறிது வறுக்கவும். பிறகு. அத்துடன் பொரி உருண்டைக்கு பாகு வைத்தது போலவே பாகு எடுத்து அதில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை மூன்றையும் கலந்து உருண்டை பிடிக்கவும்.எள் படபடவென்று பொரிந்தவுடனே கீழே இறக்கி, ஒரு தட்டில் கொட்டிவிட்டால் தீய்ந்துப் போவதை தடுக்கலாம்.

Jan 03, 2026

.பாசிப்பருப்புஉருண்டை.

தேவையான பொருட்கள் :1/4 கிலோ பாசிப்பருப்பு1/4 கிலோ சீனி  10 முந்திரிபருப்பு150 மி.லி நெய் செய்முறை பாசிப்பருப்பை வறுத்து மாவு மில்லில் குடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.சீனியை மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும்காடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக்கொள்ளவும், பின் அதே கடாயில் மீதமுள்ள நெய்யை ஊற்றி சூடாக்கவும், பாசிப்பருப்பு மாவையும், சீனி மாவையும் சேர்த்துக்கொள்ளவும்.அந்த மாவில் வறுத்த முந்திரியையும், சூடான நெய்யையும் சேர்த்து கிளறி சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும், இப்போது சுவையான, சத்தான பாசிப்பருப்பு உருண்டை .

1 2 ... 18 19 20 21 22 23 24 ... 72 73

AD's



More News