25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Dec 20, 2025

ராகி இடியாப்பம்.

தேவையான பொருட்கள்:2கப் ராகி மாவு - 2கப்,தண்ணீர்- 2கப்,2ஸ்பூன் எண்ணெய்- 2ஸ்பூன்,உப்பு- தேவையானஅளவு,தேங்காய் துருவல் - தேவையான அளவு, சர்க்கரை- தேவையான அளவு.செய்முறை:1கப் மாவுக்கு 1கப் தண்ணீர் தான் அளவு.முதலில் காடாயில்,2கப் தண்ணீர் சேர்த்து, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் 2ஸ்பூன் எண்ணெய் கலந்து விட்டு நன்றாக கொதிக்க விடவும்.கொதித்ததும்,அடுப்பை சிறு தீக்கு மாற்றி,மாவு சேர்த்து கிளறவும்.முதலில் தண்ணீர் போதாதது போல் தோன்றும். கிளற கிளற சரியாகிவிடும்.திருப்தியாக இல்லையெனில்,1-2ஸ்பூன் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.2நிமிடங்களில் மாவு வெந்து திரண்டு வந்துவிடும்.அடுப்பை அணைத்து,2-3நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும்.பின் இளஞ்சூடாக இருக்கும் போது,சூடு பொறுக்க கையில் சிறிதளவு தண்ணீர் நனைத்துக் கொண்டு 1நிமிடத்திற்குப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.பின் இட்லி குக்கரில்,2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கும் நேரத்தில்,இடியாப்ப அச்சில் ஒவ்வொரு உருண்டைகளாக வைத்து பிழிந்து கொள்ளவும்.பின்,குக்கரில் வைத்து15 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஆறியதும் இதனுடன் தேங்காய் துருவல் மற்றும் நாட்டு சர்க்கரை கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.வேக வைக்கும் போது,தேங்காய் துருவல் சேர்த்தும் வேக விடலாம்.சுவையான, ராகி இடியாப்பம் ரெடி.

Dec 20, 2025

ரவா இடியாப்பம்.

தேவையான பொருட்கள்:வறுத்த அல்லது வறுக்காத வெள்ளை ரவை - 2கப்,தண்ணீர் - 4கப்,உப்பு தேவையான அளவு, தேங்காய் துருவல் – தேவையானஅளவு, சர்க்கரை – தேவையானஅளவு, இரண்டரை ஸ்பூன் எண்ணெய் ,செய்முறை :1கப் ரவைக்கு2கப் தண்ணீர் தான் அளவு.கடாயில்4கப் தண்ணீர் சேர்த்து,அதனுடன் உப்பு மற்றும்2ஸ்பூன் எண்ணெய் கலந்து கொதிக்க விடவும்.கொதிக்க ஆரம்பித்ததும்,சிறு தீக்கு மாற்றி,ஒரு கையால் ரவை சேர்த்து,மறு கையால் கிளறவும்.சில நிமிடங்களில் ரவை தண்ணீரை உறிஞ்சிக்கொள்ளும்.2-3 நிமிடங்களில் நன்றாக வெந்து,கடாயில் ஒட்டாமல் திரண்டு வரும்.இனி,அடுப்பை அணைத்து,மூடி போட்டு 3 நிமிடங்களுக்கு வைக்கவும்.பின் கையில்1/2ஸ்பூன் எண்ணெய் தடவி1 நிமிடத்திற்கு மாவை(கையால் அல்லது கரண்டியால் அழுத்திவிட்டு)நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.உருட்டிய உருண்டைகளை அதே கடாயில்(சூடாக இருக்கும்) போட்டு மூடி வைக்கவும்.ஆறும் முன் இடியாப்ப அச்சில் போட்டு பிழியவும்.ஆறினால், பிழிய கடினமாகும் வாய்ப்பு உள்ளது.இட்லிகுக்கரில்2டம்ளர்தண்ணீர்விட்டுகொதிக்கவிடும்நேரத்தில்,உருண்டைகளை அச்சில் விட்டுப் பிழியவும்.பின் குக்கரில் வைத்து 7-10 நிமிடங்கள் வேக வைக்கவும்.ஆறிய பின் எடுத்தால் பூப்பூவாக வரும்.சுவையான, மெது மெதுவான ரவா இடியப்பம் ரெடி.எப்பொழுதும் போல், தேங்காய் துருவல் மற்றும் சர்கரை அல்லது தேங்காய்ப் பால் கலந்து சாப்பிடலாம்.

Dec 13, 2025

மிளகு - பூண்டு குழம்பு.

தேவையானவை:மிளகு - 4 தேக்கரண்டி,சீரகம் - ஒரு தேக்கரண்டி,பூண்டு - 10 பல்,தோலுரித்தசின்ன வெங்காயம் - 10,கறிவேப்பிலை சிறிதளவு,புளி எலுமிச்சை அளவு,கடுகு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி,உப்பு, நல்லெண்ணெய்- தேவையான அளவு,செய்முறை: புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம், பூண்டு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து கிளறவும். பின்னர் புளிக்கரைசல், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். மிளகு , பூண்டு குழம்பு ரெடி.

Dec 13, 2025

திரிகடுக குழம்பு.

தேவையானவை:சுக்கு - சிறிய துண்டு.மிளகு - ஒரு தேக்கரண்டி.திப்பிலி - நான்கு.புளி - நெல்லிக்காய் அளவு,சின்ன வெங்காயம் - 10 பல் மிளகாய் தூள்-  ஒரு தேக்கரண்டி.கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா கால் தேக்கரண்டி.மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை நல்லெண்ணெய்,உப்பு - தேவையான அளவு.செய்முறை:வாணலியில் வெறும் வாணலியில் சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்து ஆறியதும் அதனுடன், ஐந்து சின்ன வெங்காயம், ஐந்து பல் பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும். எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்து, மீதமுள்ள வெங்காயம், பூண்டு, மஞ்சள் துாள் சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும். இத்துடன், அரைத்த விழுதையும்,மிளகாய் துாளையும் சேர்த்து, கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Dec 13, 2025

பூண்டு சட்னி( garlic chutney ).

தேவையானவை:பூண்டு பற்கள்- ஒரு கப் சின்ன வெங்காயம்- கால் கப் காய்ந்த மிளகாய் -  எட்டு.கடுகு - கால் தேக்கரண்டி உளுத்தம் பருப்பு- ஒருதேக்கரண்டி கறிவேப்பிலை, புளி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.செய்முறை:பூண்டுடன், வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதனுடன் அரைத்த விழுது, நல்லெண்ணெய்,உப்பு சேர்த்து, சுருள கிளறி இறக்கவும். சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

Dec 13, 2025

சுக்கு - மிளகு சாதம்.

தேவையானவை:பச்சரிசி- ஒரு கப்,சுக்குத்தூள்- ஒரு தேக்கரண்டி,மிளகுத்துாள், சீரகம் - தலா 2 தேக்கரண்டி,முந்திரி - 10,இஞ்சித்துருவல்,கறிவேப்பிலை - சிறிதளவு,உப்பு,நெய் - தேவையான அளவுசெய்முறை:பச்சரிசியை வெறும் வாணலியில் வறுத்து குக்கரில் போட்டு, அதனுடன், சீரகம், இஞ்சி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். வாணலியில் நெய்விட்டு முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வேக வைத்த சாதத்துடன் சேர்க்கவும். மிளகுத்துாள், சுக்குத்துாள் தூவி பரிமாறவும்.

Dec 13, 2025

முட்டை மிளகு வறுவல்.

தேவையான பொருட்கள்:வேகவைத்த முட்டை - 4பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது),தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது),பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது,)இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,மிளகு - அரை டீஸ்பூன் (அல்லது தேவைக்கேற்ப),மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,சீரகத் தூள் - அரை டீஸ்பூன்,கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி,எண்ணெய் - தேவையான அளவு,உப்பு - தேவையான அளவு,செய்முறை:வேகவைத்த முட்டைகளை உரித்து, அவற்றின் மேல் லேசாக கீறிக்கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து, தக்காளி குழைந்து வரும் வரை வதக்கவும்.மஞ்சள் தூள், சீரகத் தூள், மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.கடைசியாக முட்டைகளைச் சேர்த்து, மசாலாவுடன் நன்றாகக் கலந்து, மசாலா முட்டையின் மேல் ஒட்டிக்கொள்ளும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.நறுக்கிய கொத்தமல்லி தழையைத் தூவி, சூடாக ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் பரிமாறவும்.

Dec 13, 2025

வேர்க்கடலை பூண்டுப்பொடி.

தேவையான பொருட்கள்:வேர்க்கடலை -1/2 கப் ,வற்றல் மிளகாய் - 4,கறிவேப்பிலை- 1டீஸ்பூன்,பூண்டு - 4 பல்,சீரகம் -1டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு. செய்முறை :தேவையான பொருட்கள் எல்லாம் தயாராக எடுத்து வைக்கவும்.கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வேர்க்கடலையை சேர்த்து வறுக்கவும்.பின்னர் வற்றல்,சீரகம்,பூண்டு, கல் உப்பு சேர்த்து வறுக்கவும்.சூடுஆறியவுடன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான வேர்க்கடலை பூண்டுப்பொடி தயார்.இந்த சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலை பூண்டுப்பொடி சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Dec 06, 2025

தூதுவளை கஷாயம்

தேவையான பொருட்கள்:10தூதுவளை இலை1டேபிள்ஸ்பூன் தனியா1டீஸ்பூன் மிளகு 2 ஏலக்காய்1 துண்டு சித்தரத்தை 1 சிறிய துண்டு அதிமதுரம்1டேபிள்ஸ்பூன் தேன்செய்முறை:தேவையான பொருட்களை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றும் பாதியாக அரைத்துக் கொள்ளவும்குறிப்பு சித்திரத்தையும் அதிமதுரத்தை தட்டிப்போட்டு அரைக்கவும் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து வைத்ததை போடவும்.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளர் தண்ணீர் ஆகவற்றும் வரை காத்திருக்கவும் அதன்பின் அடுப்பை அனைத்து விட்டு ஒரு வடிகட்டியால் வடிகட்டி தேன் கலந்து இளம் சூட்டில் பருகவும் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தூதுவளை கசாயம் தயார்.தூதுவளை கசாயம் சளியை கரைத்து வெளியே தள்ள கூடியது இந்த கஷாயத்தில் சேர்த்து இருக்கும் பொருள்கள் சளி இருமல் வராமல் பாதுகாக்கும் தொண்டைக்கு இதமானது.

Dec 06, 2025

சுக்கு - துளசி காபி!

தேவையானவை:தனியா- ஒரு கப்,சுக்குத்துாள்- அரை கப்,மிளகு-கால் கப்,ஏலக்காய் - 10,துளசி இலைகள் - ½  கப்.செய்முறை:வெறும் வாணலியில் தனியா, மிளகு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, சுக்குத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து சலிக்கவும். இதுவே, சுக்கு காபி துாள்ஒரு கப் தண்ணீருடன் சிறிதளவு பனங்கற்கண்டு, சுக்கு காபி பவுடர் மற்றும் துளசி இலைகள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி அருந்தலாம்.

1 2 ... 20 21 22 23 24 25 26 ... 72 73

AD's



More News