தேவையான பொருட்கள்-ஒரு கப் கோதுமை மாவுமுக்கால் கப் வெல்லம்4 ஏலக்காய்அரை கப் தேங்காய் துருவல்செய்முறை -முதலில் வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதில் ஏலக்காயை இடித்துப் போட்டுக் கொள்ள வேண்டும்.வெல்லம் கரைந்ததும் அதை கோதுமை மாவில் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.அதில் துருவிய தேங்காயை போட்டு நன்கு கிளற வேண்டும்.15 நிமிடங்கள் அதை ஊற வைக்கவேண்டும். பிறகு அதை பணியார சட்டியில் ஊற்றி எடுக்க வேண்டும்.இப்போது சுவையான கோதுமை பணியாரம் தயார்.
தேவையான பொருட்கள்:கேழ்வரகு மாவு - 1 கப்அரிசி மாவு- கால் கப்வெல்லம் - 1 கப்தேங்காய் துருவல், முந்திரி, நெய்.ஏலக்காய் துாள், தேவையான அளவுஉப்பு -சிறிதளவு.செய்முறை:ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவையும், அரிசி மாவையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின், துருவிய வெல்லம் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் கலக்கவும். இந்தக் கலவையில் கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கலக்கவும். சிறிதளவு உப்பு, ஏலக்காய் தூள், நறுக்கிய முந்திரி ஆகியவற்றைச் சேர்த்து கலக்கி,10 நிமிடங்கள் ஊற விடவும்.பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய் தடவி, குழிகளின் முக்கால் பாகம் மாவை நிரப்பவும். ஒரு நிமிடம் கழித்து, பணியாரத்தைத் திருப்பிப் போட்டு, மறுபுறமும் வேக விடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வெந்ததும், சூடான பணியாரத்தை எடுத்துப் பரிமாறலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான 'ராகி பணியாரம்!' தயார்.
தேவையான பொருட்கள்: குதிரைவாலி அரிசி -500 கிராம், பச்சைபட்டாணி -50 கிராம், கேரட், பீன்ஸ் -50 கிராம், நெய் -50 கிராம், மீல்மேக்கர் எண்ணெய் -50 கிராம், முந்திரிப்பருப்பு -10, இஞ்சி-பூண்டு விழுது -3 மேஜைக்கரண்டி, மஞ்சள்தூள் -1 ஸ்பூன், கறிமசாலா -2 ஸ்பூன், பெரிய வெங்காயம் -1, தக்காளி -2, பச்சை மிளகாய் -5, வர மிளகாய் -3, புதினா, கொத்தமல்லி தழை -1 கைப்பிடி, உப்பு தேவையான அளவுசெய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரிப்பருப்பு, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து லேசாக வதக்கவும்.பின் நறுக்கிய வெங்காயம், புதினா தழை மற்றும் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.இதில் கறிமசாலாதூள், மஞ்சத்தூள் சேர்த்து1/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்றாக கொதித்ததும், குதிரைவாலி அரிசியை சேர்த்து கிளறி மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும்.அரிசி நன்றாக வெந்ததும் அடுப்பை அனைத்து, மேலே மேலே கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும். இதனுடன் கத்திரிக்காய் பச்சடி அல்லது வெங்காய பச்சடியுடன் சேர்த்து பறிமாறினால் சுவையாக இருக்கும்.சாதாரண அரிசிக்கு மாற்றாக, சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசியில் செய்யப்படும் இந்த வெஜ் பிரியாணி சுவைக்கும், உடல் ஆரோக்கியத்திற்கும், இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க சிறந்த தேர்வாகும்.
தேவையான பொருட்கள்2 கப் காலிஃப்ளவர்,2 கேரட், 4 பீன்ஸ்,1வெங்காயம்,1தக்காளி,4 பச்சை மிளகாய்,1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,2 கப் பாஸ்மதி ரைஸ்,2 பட்டை,4லவங்கம்,1 அண்ணாச்சி பூ,2 ஏலக்காய்,1ஸ்பூன் சோம்பு,2பிரிஞ்சி இலை,1 ஸ்பூன்கரம் மசாலாத்தூள்,2 ஸ்பூன் நெய்,தேவைக்கு ஆயில்,தேவைக்கு புதினா கருவேப்பிலை,தேவைக்கு உப்புதேவைக்கு தண்ணீர்.செய்முறை -முதலில் தேவையான காய்கறிகள் மற்றும் மசால் பொருட்களை எடுத்து வைக்க வேண்டும்.பின்பு காலிஃப்ளவரை 2 நிமிடம் சுடுதண்ணீரில் போட்டு எடுக்க வேண்டும்.காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.முதலில் அடுப்பில் குக்கரை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துமசாலா பொருட்களில் தாளிக்க வேண்டும்.பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.பின்பு காய்கறிகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.புதினா கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற விட வேண்டும்.ஊறிய பாஸ்மதி அரிசிஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கடாயில் லேசாக வதக்கவும்.பின்புநான்கு கப் தண்ணீர் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து காய்கறி கலவை நன்கு கொதி வந்தவுடன்வதக்கிய பாஸ்மதி அரிசி சேர்க்க வேண்டும்.குக்கரை மூடி 2 விசில் வந்தவுடன் 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்க வேண்டும்.சுவையான சத்தான காலிஃப்ளவர் புலாவ் ரெடி.
தேவையான பொருட்கள்-2 கப் பண்ணை கீரை இலைகள்,1 கப் திணை அரிசி,பட்டை, கிராம்புஏலக்காய், ஸ்டார்,பிரிஞ்சி இலை,1வெங்காயம்,3 பச்சை மிளகாய்,1 தக்காளி பழம் அல்லது காய்,1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,உப்பு தேவைக்கேற்ப,1டேபிள்ஸ்பூன் நெய்.செய்முறை -பண்ணைக்கீரையை இலைகள் மட்டும் பிரித்தெடுத்து நன்கு கழுவி வைக்கவும். திணை அரிசியை கழுவி தண்ணீரில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.வெங்காயம், தக்காளி,கீரை,பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.ஒரு கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து,கிராம்பு,ஏலக்காய், ஸ்டார்,பட்டை,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம், பச்சை மிளகாய்,தக்காளி,கீரையை சேர்த்து வதக்கவும்.எல்லாம் நன்கு வதங்கியதும் ஊற வைத்து வைத்துள்ள திணை அரிசியை சேர்த்து நன்கு கலந்து, தேவைக்கேற்ப தண்ணீர்,உப்பு சேர்த்து மூடி வைக்கவும். மூன்று கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானது.பத்து நிமிடங்கள் கழித்து ஒரு முறை கலந்து மிதமான சூட்டில் பதினைந்து நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும்.பின்னர் திறந்து நன்கு கலந்தால் சுவையான பண்ணைக்கீரை திணை அரிசி புலாவ் தயார்.
தேவையான பொருட்கள்: ப்ரோகோலி -வெங்காயம் -1, இஞ்சி-பூண்டு விழுது -1/4 கரண்டி, மிளகாய் வற்றல் - 2, மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன், கடுகு - 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் - 1, உப்பு தேவையான அளவு, கறிவேப்பிலை சிறிதளவுசெய்முறை:ப்ரோகோலியை சுடுநீரில் நன்றாக கழுவி, மிக்ஸியில் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.ஒரு கனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி சூடான சூடானதும். கடுகு, கறிவேப்பில்லை, மிளகாய் வற்றல், இஞ்சிபூண்டு விழுது மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து தாளிக்கவும்அரைத்த ப்ரோகோலியை அதனுடன் சேர்த்து5-7 நிமிடங்கள் மட்டும் வதக்கினால் போதும். அதிக நேரம் கொதிக்கவைத்தால் சுவை மாறிவிடும். சுவையான ப்ரோகோலி மசியல் ரெடி.இந்த மென்மையான சுவையுள்ள ப்ரோகோலி மசியல், புல்கா,பரோட்டா அல்லது புளிப்பு உள்ள உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :சாமை அரிசி -1 கப் (15 நிமிடம் ஊறவைக்கவும்), பெரிய வெங்காயம் -1, பச்சை மிளகாய் -3, பிரியாணி இலை -1, பட்டை, இலவங்கம், ஏலக்காய்-சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன், கரம் கரம் மசாலர் -1 ஸ்பூன், பீன்ஸ், கேரட், பட்டாணி, காலிப்ளவர், குடமிளகாய் எல்லா காய்கறிகளும் நறுக்கியது -1 கப், எண்ணெய் & உப்பு தேவையான அளவுசெய்முறை: ஒரு குக்கரில் எண்ணெய்ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், இலவங்கம், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கவும்.இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலா, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.ஊறவைத்த சாமை அரிசியை வடிகட்டி குக்கரில் சேர்த்து, 1 1/2 பங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 1 நிமிடம் கொதிக்கவைத்து, குக்கரை மூடி வேகவைக்கவும்.ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக 'வதக்கிக்கொள்ளவும்.குக்கரில் 1 விசில் வந்ததும் திறந்து, வதக்கிய காய்கறிகளை அதில் சேர்த்து கலக்கவும். 5 நிமிடம் சூட்டில் மூடி வைத்து ஆவியில் ஊறவிடவும். பின்னர் கொத்தமல்லி இலையை தூவி சூடாக பரிமாறவும்.இந்த சாமை வெஜிடபிள் புலாவ் லேசானதும், சத்தானதும் உணவில் சேர்த்துக்கொள்ள ஏற்ற உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி 'சாப்பிடக்கூடியது.உடல் ஆரோக்கியத்திற்கும் எடை கட்டுப்பாட்டிற்கும் மில்லெட் உணவுகள் மிகவும் முக்கியமானவை. அதில் சாமை அரிசியில் செய்யப்படும் உணவுகள் மிக இலகுவாக ஜீரணமாகும் சத்தான உணவு.
தேவையான பொருட்கள்: மஷ்ரூம் -250 கிராம், பாதாம் -5, தேங்காய் -1-1 மேஜைக்கரண்டி, இஞ்சி - 1 சிறு துண்டு, பூண்டு -10 பல், தனியா - 1 ஸ்பூன், சீரகம் - தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 ஸ்பூன், பச்சை மிளகாய் -3, பெரிய வெங்காயம் 1, தக்காளி -1, மஞ்சள்தூள் 1 ஸ்பூன், தயிர் -1/2 கப், நெய் - 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி அலங்கரிக்க.செய்முறை-கடாயில் நெய் ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு, வெந்தயம், தனியா, தக்காளி, பச்சை மிளகாய், தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கி, ஆறியபின் மைய அரைத்துக்கொள்ளவும்.மீண்டும் கடாயில் நெய் ஊற்றி சீரகம்,1/2 வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கி, அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கலக்கவும்.கொதிக்கும் மசாலாவில் மஷ்ரூம் துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து1 கப் அளவு தண்ணீர் விட்டு5-10 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய் பிரியும்போது தயிரை சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தேவையான பொருட்கள் :- மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், துவரம்பருப்பு 1 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன்,, சீரம் 2 டீஸ்பூன், மிளகு 1 டீஸ்பூன், பெருங்காயப் பொடி 1 டீஸ்பூன், வெந்தயம் 1 டீஸ்பூன் மல்லி விதை 3 டேபிள் ஸ்பூன், வத்தல் 15 எண்ணம், கருவேப்பிலை சிறிதளவு.செய்முறை :- அனைத்தையும் தனித் தனியாக வறுத்து பொடித்துக் கொள்ளவும், எண்ணெய்விட்டு வறுத்து வைக்கவும், கூட்டு இறக்கும் பொழுது 2 முதல் 3 சிட்டிகைஎடுத்து தூவினால் கூட்டு ருசியாக இருக்கும்,
தேவையான பொருட்கள் :- வறுத்த வேர்க்கடலை 1 கப், வெள்ளை எள் கால் கப், வத்தல் 6 முதல் 7 எண்ணம், பெருங்காயம் 2 இஞ்ச் துண்டு, உப்பு தேவையான அளவுகருவேப்பிலை சிறிதளவு.செய்முறை :- வறுத்த வேர்க்கடலையை சூடு பொறுக்கும் வரை வறுத்து எடுத்து கசக்கி தோலைநீக்கவும், வெள்ளை எள் வெடித்து வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும், பெருங்காயத்தை வறுத்து, பின் வத்தல், கருவேப்பிலை தனியாக வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து நன்றாகப் பொடித்துக் கொள்ளவும் கடைசியாக நிலக்கடலை, எள்ளை கொர கொரப்பாக அரைத்து உப்பு சேர்த்துக் கொள்ளவும், எல்லாவற்றையும் கலந்து வைக்கவும், உதிரி சாதம் (சூடாக இருக்க வேண்டும்)தேவையான அளவு கடுகு, கருவேப்பிலை, தாளித்து சாதம் சேர்த்து அதன் மேல்வேர்க்கடலை பொடி தேவையான அளவு தூவி கலந்தால் சூப்பர் நிலக்கடலை சாதம் ரெடி, இட்லி தோசைக்கு இப்பொடி நன்றாக இருக்கும்.