25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல்

Feb 28, 2026

பரங்கிக்காய் பொரியல்.

தேவையான பொருட்கள்:மஞ்சள் பரங்கிக்காய் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டிகடுகு, உளுத்தம் பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் - 2 அல்லது 3கறிவேப்பிலை - சிறிதளவுவெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது - விருப்பப்பட்டால்)மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - 1 மேஜைக்கரண்டிசெய்முறை--ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துதாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.நறுக்கிய பரங்கிக்காய், மஞ்சள் தூள் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். மிகக் குறைந்த அளவு தண்ணீர்(3-4 ஸ்பூன்) தெளித்து, மூடி வைத்து 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்கவும். காய் மென்மையாக வெந்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.பரங்கிக்காய் சீக்கிரம் வெந்துவிடும் என்பதால், அதிக தண்ணீர் ஊற்ற வேண்டாம்.விருப்பப்பட்டால், சிறிதளவு வெல்லம் சேர்த்து இனிப்பு சுவையை கூட்டலாம்.இது சாதம், சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கு சிறந்த பக்க உணவாகும்.

Feb 28, 2026

.ப்ரோக்கோலி பொரியல்.

தேவையான பொருட்கள்-1கப் ப்ரோக்கோலி (150கி),1/2 கப்பெ.வெங்காயம் நறுக்கினது,1/4 கப்தக்காளி நறுக்கினது,1/4 கப்துருவின தேங்காய்,1டீ ஸ்பூன்கடுகு,1/2 ஸ்பூன் உ.பருப்பு,1/2 ஸ்பூன்க. பருப்பு,1 டீ ஸ்பூன் ம. தூள்,1ஸ்பூன்காஷ்மீரி மி.தூள்,1 கொத்து கறிவேப்பிலை, 1 டீஸ்பூன்சர்க்கரை,ருசிக்கு உப்பு, 1டேபிள்ஸ்பூன் ந.எண்ணெய், 2ஸ்பூன் ப.மிளகாய் நறுக்கினது,2சி.மிளகாய்,தண்ணீர் தேவைக்குசெய்முறை -வெங்காயம்,தக்காளியை நறுக்கிக் கொண்டு, தேங்காயை துருவிக் கொள்ளவும்.ப.மிளகாயை நறுக்கிக்கொள்ளவும்.ப்ரோக்கோலியில், உப்பு போடவும்.வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி ப்ரோக்கோலியை 5 நிமிடம் ஊறவிடவும்.தண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த தண்ணீரில் 2 முறை சுத்தம் செய்து பின்பு நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பை மீடியத்தில் வைத்து, கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், உ.பருப்பு,க.பருப்பு, தாளிக்கவும்.பிறகு, ப.மிளகாய், சி.மிளகாய் போடவும்.அடுத்து, வெங்காயம், ம.தூள், உப்பு போட்டு நன்கு வதங்கியதும், தக்காளி, மி.தூள் போடவும். ஒன்று சேர நன்குகலக்கவும்.கலந்து வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து,நறுக்கின, ப்ரோக்லி, சர்க்கரை போட்டு வதக்கவும்.வதங்கியதும், துருவின தேங்காயை போட்டு நன்கு கிளறி,கறிவேப்பிலையை போட்டதும் அடுப்பை நிறுத்திவிடவும். பிறகு, ஒன்று சேர கிளறி, பௌலுக்கு மாற்றவும்.இப்போது, மிகவும், சுவையான,*ப்ரோக்கோலி பொரியல்* தயார்.இது சுடுசாதம், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம்,அனைத்திற்கும்,சுவையாக இருக்கும்.

Feb 21, 2026

.சப்பாத்தி வெஜ்ரோல் 

தேவையான பொருட்கள் -1/2கப் பட்டாணி,1/2கப் கேரட்,1/2கப்பீன்ஸ்,1/2கப் கேப்சிங்கம், 1வெங்காயம்,2தக்காளி,1/2ஸ்பூன் இஞ்சி, பூண்டு பேஸ்ட், 1கொத்து கறிவேப்பிலை ,சிறிது கொத்தமல்லி,1/2ஸ்பூன் மஞ்சள் பொடி,1/2ஸ்பூன் மிளகாய் பொடி,1/2 ஸ்பூன் மல்லி பொடி ,1/2 ஸ்பூன் சோம்பு ,50 கிராம் பட்டர், ஆயில்,உப்பு - தேவையான அளவு.செய்முறை ஒரு வாணலியில் ஆயில், பட்டர் விட்டு, சோம்பு போட்டு தாளிக்கவும்.பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, போட்டு வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டுபேஸ்ட் போட்டு ,அடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி சிறிது வதங்கியதும்,நறுக்கிய காய்கள், உப்பு சேர்த்து வதக்கவும்.ஸ்டவ்வை சிம்மில் வைத்து, ஒரு மூடி போட்டு வைக்கவும். ஒரு பத்து நிமிடத்தில் காய்வெந்துவிடும். காய் கொஞ்சம் கிரன்ச்சியாக இருந்தால் நல்லது.பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். நன்கு பச்சைவாசனை போகும் வரை வதக்கி. கடைசியாக கொத்தமல்லி இலை தூவவும்.பிறகு சப்பாத்தி செய்யவும். பட்டர் சேர்த்தால் சுவையாக இருக்கும்.இப்பொழுது சப்பாத்தியின் நடுவில் மசாலாவை வைத்து, முதலில் வலது புறமும், பிறகு இடதுபுறமும் மடிக்கவும். இப்போ சூப்பரான சப்பாத்தி வெஜ் ரோல் ரெடி,

Feb 21, 2026

வெஜ் கோலா

தேவையான பொருட்கள் -100 கிராம் மீல் மேக்கர்,கால் கப் பொரிகடலை,சிறியதுண்டு இஞ்சி,3 பச்சை மிளகாய்,பட்டை, கிராம்பு,லவங்கம் – சிறிதளவு,ஒரு டீஸ்பூன்சோம்பு,ஒன்றுபெரிய வெங்காயம்,கருவேப்பிலை, கொத்தமல்லி,தேவைக்கேற்ப உப்பு,பொறிப்பதற்கு கடலை எண்ணெய்,ஐந்து பல்பூண்டு, ஒரு டீஸ்பூன்கான்பிளவர் மாவு.செய்முறை - மீல் மேக்கரை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் மீல் மேக்கரை வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்ஸி ஜாரில் மீல்மேக்கரை போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.பின்னர் இக்கலவையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து வைத்துக் கொண்டு, சிறு சிறுஉருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இக்கலவையை தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து வைத்துக் கொண்டு, சிறு சிறுஉருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன்பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு உருண்டைகளை போட்டு மிதமானதீயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.சுவையான வெஜ் கோலா ரெடி. டொமேட்டோ சாஸ் கெட்சப் போன்றவற்றுடன் சாப்பிட்டால்மிகவும் சுவையாக இருக்கும்.

Feb 21, 2026

வெஜ் ரோல் தோசை

தேவையான பொருட்கள் -2 கரண்டி தோசை மாவு, 3 ஸ்பூன் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது,2 ஸ்பூன் குடை மிளகாய் பொடியாக நறுக்கியது,4 ஸ்பூன் துருவிய சீஸ்,3 ஸ்பூன் துருவிய கேரட்,சில்லி ப்ளேக்ஸ் கால்ஸ்பூன்,3 ஸ்பூன் தக்காளி சாஸ்.செய்முறை -தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்றாக காய்ந்ததும் இரண்டு கரண்டி மாவு ஊற்றி சற்றுமொத்தமான தோசையாக வார்த்து கொள்ளவும். ஒருபுறம் நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டுமற்றொருபுறம் நன்றாக வேகவிடவும்.ஒரு ஸ்பூன் ஆயில் ஊற்றவும். அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.இருபுறமும் வெந்தவுடன் தோசையின் உள்பகுதியில் தக்காளி சாஸ் தடவவும் .பின்பு வெங்காயம்,கேரட், குடை மிளகாய் ,ஆகியவற்றை ஒவ்வொன்றாக தூவவும். அதன்பின் இறுதியாக சீஸைதூவி அடுப்பை அணைத்து விடவும்.இளம் சூட்டிலேயே தோசையை ரோல் செய்து குறுக்கில்வெட்டி பரிமாறவும்.

Feb 21, 2026

மினி வெஜ்ரோல்

தேவையான பொருட்கள்:மைதா - 2 தேக்கரண்டிகுடைமிளகாய்,கோஸ். கேரட்,வெங்காயம்,பீன்ஸ்-  தலா, 100 கிராம்எண்ணெய், உப்பு,மிளகுத் துாள் - தேவையான அளவு.செய்முறை:கேரட், குடைமிளகாய், கோஸ்,வெங்காயம் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை, மெல்லியதாகநீளவாக்கில் நறுக்கவும் . வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்கறி கலவையைபோட்டு வதக்கி உப்பு, மிளகு துாள் சேர்த்து இறக்கவும். ஆறியதும், சிறிய சிறிய ரோல்களாகஉருட்டி வைக்கவும்.மைதாவில் தண்ணீர் சேர்த்து, கெட்டியாக கரைக்கவும். உருட்டிய ரோல்களை மைதாகலவையில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். மினிவெஜ்ரோல், தயார்.சாஸுடன் சேர்த்து சாப்பிட, அருமையாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும்விரும்பி உண்பர்.

Feb 21, 2026

.வெஜிடபுள் பன்னீர் ரோல்ஸ்

தேவையான பொருட்கள்:சப்பாத்தி/ரோட்டி - 4 (தயாரானது)பன்னீர் - 100 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)வெங்காயம், குடைமிளகாய், கேரட் - பொடியாக நறுக்கியதுஇஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்கரம் மசாலா/மிளகாய் தூள் - தேவையான அளவுஎண்ணெய்/வெண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை:கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், காய்கறிகளை வதக்கவும். பின்பன்னீர் மற்றும் மசாலாக்களை சேர்த்து 2-3 நிமிடங்கள் வதக்கி தனியே வைக்கவும்.சப்பாத்தியின் மீது தக்காளி சாஸ் தடவி, தயார் செய்த பன்னீர் கலவையை நடுவில் வைக்கவும்.சப்பாத்தியை இறுக்கமாக ரோல் செய்து, தேவைப்பட்டால் தவாவில் சிறிது வெண்ணெய் தடவிசூடாக்கி பரிமாறவும். இதனை பீட்ரூட் சப்பாத்தி கொண்டும் செய்யலாம். பன்னீர் புரதம் நிறைந்தது, எனவே இது உடலுக்கு மிகவும் நல்லது.

Feb 21, 2026

.வெஜ் கபாப்,

தேவையான பொருட்கள் –4 உருளைக்கிழங்கு,2 டேபிள்ஸ்பூன் கேரட்,2 டேபிள்ஸ்பூன் பீன்ஸ்,2 டேபிள்ஸ்பூன் குடைமிளகாய்,2 வெங்காயம்,1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1/4 ஸ்பூன் சில்லி சாஸ்,1ஸ்பூன் தக்காளி சாஸ்,1/2 ஸ்பூன் சோயா சாஸ்,1/8 ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 ஸ்பூன் சீரகத்தூள்,1/4 ஸ்பூன் மல்லித் தூள்,1/4 ஸ்பூன் சாட் மசாலா தூள்,1/4 ஸ்பூன் கரம் மசாலா தூள்,2 சிட்டிகை பெருங்காயத்தூள்,உப்புதேவையான அளவு,4 டேபிள்ஸ்பூன் எண்ணெய், 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி தழை. மாவு கரைக்க - 2 டேபிள்ஸ்பூன் மைதா,2 ஸ்பூன் கார்ன் ப்ளார்,1/2 ஸ்பூன் அரிசி மாவு ,உப்பு ஒரு சிட்டிகை மேற்புறம் கோட்டிங் செய்ய -1/2 கப் ப்ரட் க்ரம்ஸ்,எண்ணெய் பொரிப்பதற்கு.செய்முறை –உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து பொடித்து கொள்ளவும், காய்கறிகளை மிகவும்பொடியாக நறுக்கி கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் .வெங்காயம்வதங்கியதும் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள்,சாட் மசாலா தூள், பெருங்காயத்தூள், மல்லித்தூள்,சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.பின் சில்லி சாஸ் ,தக்காளி சாஸ் ,சோயா சாஸ், சேர்த்து வதக்கவும். வேகவைத்த கார்ன் சேர்த்துநன்கு வதக்கி, பொடித்த கிழங்கு, நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறவும்.எல்லாம் சேர்ந்து வரும் போது இறக்கி ஆறவிட்டு பிசைந்து கைகளில் சிறிது எண்ணெய் தடவிகொண்டு சின்ன சின்ன உருண்டைகளாக நீளவாக்கில் உருட்டி கொள்ளவும்.மாவு கரைசல்: மைதா, கார்ன் ப்ளார் ,அரிசி மாவு ,ஆகியவற்றை உப்பு சிறிதளவு சேர்த்து நன்குதண்ணீராக கரைத்து கொள்ளவும்.மற்றொரு தட்டில் அதனுடன் ப்ரட் க்ரம்ஸ் சேர்த்து நன்கு கலந்து தனியாக எடுத்துவைக்கவும்உருட்டிய கலவையை மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸ் ல் புரட்டி எடுக்கவும்.தனியாக அடுக்கி பிரிட்ஜில் 1 மணி நேரம் வரை வைக்கவும்.பின் சூடான எண்ணெயில் போட்டுபொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.மிதமான தீயில் வைத்து நிதானமாக பொரித்துஎடுக்கவும்.தக்காளி கெட்சப் உடன் சூடாக பரிமாறவும்.

Feb 14, 2026

பீட்ரூட் தேங்காய் பர்பி.

தேவையான பொருட்கள்:பீட்ரூட் – 1,தேங்காய் துருவல் - அரை மூடி,சர்க்கரை - 1 கப்,ஏலக்காய் துாள்,முந்திரி,நெய் - தேவையான அளவு.செய்முறை - பீட்ரூட்டின் தோலை சீவி, துருவிக் கொள்ளவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் பீட்ரூட் துருவல், தேங்காய் துருவலை போட்டு வதக்கவும். பச்சை வாசனைபோனதும், சர்க்கரை சேர்த்து கிளறவும்.சிறிதளவு நெய்யில் முந்திரியை வறுத்து, பீட்ரூட் கலவையில் சேர்க்கவும். வாணலியில்ஒட்டாமல் இறுகி வந்ததும், நெய் தடவிய தட்டில் கொட்டி, விருப்பமான அளவில் துண்டுகள்போட்டால், பீட்ரூட் தேங்காய் பர்பி தயார். குழந்தைகள் கேட்டு வாங்கி ருசிப்பர்.

Feb 14, 2026

கேரட் பர்பி.

தேவையான பொருட்கள்:1 கப் கேரட் துருவல்,1/2 கப் சர்க்கரை,1/4 கப்மில்க்மெய்ட்,3 ஸ்பூன்பால்,10 பாதாம் & முந்திரி,2 ஏலக்காய், 1/4 கப் நெய்செய்முறை: கடாயில்நெய்ஊற்றி,கேரட்டைநன்குவதக்கி,பால்சேர்த்து,வேகவைத்துகொள்ளவேண்டும்.அதனுடன்சர்க்கரை,மில்க்மெய்ட்,ஏலக்காய்,முந்திரி,பாதாம் சேர்த்து நன்கு சுருண்டு வரும்வரைகிளறி தட்டில் கொட்டி வெட்டி கொள்ளவும். கேரட் பர்பி ரெடி.

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 72 73

AD's



More News