தேவையான பொருட்கள் - 2 கப் காய்ந்த மக்கா சோளம், 2கப் பச்சரிசி,1 கப் இட்லி அரிசி,1 கப் உளுந்து,2 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு,1 டீஸ்பூன் வெந்தயம்,தேவைக்கு உப்பு, தேவைக்குஎண்ணெய் அல்லது நெய்.செய்முறை -முதலில் மக்காசோளத்தை2-3 முறை நன்கு கழுவி,பிறகு அதை முழுகும் அளவு தண்ணீரில்7-8மணி நேரம். ஊற விடவும். அதேபோல் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் வெந்தயத்தை நன்றாக களைந்து தண்ணி விட்டு 4 மணி நேரம் ஊற விடவும்.மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரிசி மற்றும் சோளத்தை, தனி தனியாக அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு மாவும் நன்கு கலந்து விட்டு தேவையான உப்பு சேர்த்து 6-8 மணி நேரம் புளிக்க வைக்கவும்..ஸ்டவ்வில் தோசை தவாவை வைத்து நன்கு சூடான பிறகு மாவை எடுத்து மெல்லிசான தோசையாக பரத்தி விடவும்.ஒரு பக்கம் வெந்த பிறகு திருப்பி விட்டு சுற்றும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி பொன் நிறமானதும் எடுத்து விடவும்.. அருமையான மொறு மொறு மக்கா சோள தோசை தயார்..தோசை மிக கிறிஸ்பியா வர ஒரு பக்கம் மட்டும் போட்டு எடுக்கவும்.
தேவையான பொருட்கள்:ராகி, கம்பு, கோதுமை,வரகு, கறுப்பு உளுந்து - தலா 100 கிராம் கொள்ளு, கருப்பு கொண்டைக்கடலை - தலா 50 கிராம் வெந்தயம் -1 teaspoonஉப்பு, எண்ணெய், தண்ணீர்- தேவையான அளவு.செய்முறை:கருப்பு கொண்டைக்கடலை, ராகி, கம்பு, கோதுமை, வரகு, கொள்ளு, உளுந்து, வெந்தயத்தை தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும். பின் தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். உப்பு சேர்த்து மூன்று மணி நேரம் புளிக்க விடவும். தோசைக்கல் சூடானதும் எண்ணெய் தடவி, மாவை ஊற்றி தோசையாக்கவும்., 'தானிய தோசை!' தயார். சட்னியுடன் சாப்பிடலாம்.காலை உணவுக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்:அரிசி - இரண்டரை கப்,உளுந்தம் பருப்பு -1 கப்,அவல் - கால் கப்,சீரகம் - 2 தேக்கரண்டி,உப்பு, எண்ணெய் தேவையான அளவு.செய்முறை:அரிசி, உளுந்தம் பருப்பை ஐந்து மணி நேரமும், அவலை45 நிமிடமும், தனித்தனியாக ஊற வைக்கவும். இரவே அனைத்தையும், தோசை ஊற்றும் பதத்திற்கு மாவாக அரைத்து, எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.பிறகு, மாவில் உப்பு சேர்த்து, தோசை ஊற்றி, கார சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள்- அடை மாவு செய்ய 2 கப் முளைகட்டிய பயறு வகைகள் ,1 கப் இட்லி அரிசி,1கப்பச்சரிசி,3/4 கப் உளுந்து,சிறிதுகறிவேப்பிலை,4 வரமிளகாய்,10 பல் பூண்டு,2 ஸ்பூன் சீரகம்,1 ஸ்பூன் சோம்பு,2 துண்டு இஞ்சி,1 மூடி தேங்காய் துருவல்,தேவையான அளவுகல் உப்பு.அடை வார்க்க:4 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கவும். 2 பச்சை மிளகாய்,சிறிது கொத்தமல்லி தழை,2 கேரட் துருவியது, சிறிது எண்ணெய்.செய்முறை - பச்சை பயறு,வெள்ளை தட்டபயறு,சிகப்பு தட்டப்பயறு, கொள்ளு,கருப்பு சுண்டல், மொச்சை பருப்பு, சிவப்பு ராஜ்மா ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து எட்டு மணி நேரம் வரை ஊறவிடவும் .பின் கழுவி தண்ணீரை வடிகட்டி சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி வெயில் படுமாறு வைக்கவும். 12 மணி நேரம் கழித்து பார்த்தால் முளைத்து இருக்கும். இதை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து கொள்ளவும். அரிசி உளுந்து ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் .பின் கழுவி கூட முளைகட்டிய பயறு வகைகள் சேர்த்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.அடை மாவு பாதி அரைப் பட்டதும் ,சோம்பு, சீரகம் ,வரமிளகாய், கறிவேப்பிலை ,பூண்டு ,இஞ்சி சேர்த்து(தேங்காய் தவிர) அரைக்கவும். பின் ஓரளவிற்கு நைசானதும் தேங்காய் துருவல் சேர்த்து கல் உப்பு சேர்த்து ஒரு முறை அரைத்து எடுக்கவும் .பின் வெங்காயம் பச்சை மிளகாயை துருவிய கேரட் ஐ சிறிது எண்ணெய் விட்டு வதக்கி இதனுடன் சேர்த்து கொள்ளவும்.இந்த மாவை அரை மணி நேரம் வரை ஊறவிடவும். பின் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து சூடான தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றவும் .மிகவும் லேசாக தேய்க்க கூடாது. மெல்லிய தீயில் வைத்து இரண்டு புறமும் எண்ணெய் விட்டு நன்றாக வேகவைத்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான முளைகட்டிய பயறு அடை ரெடி.
தேவையான பொருட்கள்-50 கிராம்சோளம்,50 கிராம்கம்பு, 50 கிராம்கவுனி அரிசி, 50 கிராம் கோதுமை,50 கிராம் கேழ்வரகு,50 கிராம்திணை,50 கிராம்வரகு,50 கிராம் சாமை,50 கிராம் குதிரைவாலி,100 கிராம்உளுந்து,25 கிராம்குழம்பு கடலை பருப்பு,தேவையான அளவுஉப்பு.செய்முறை - ஒரு பாத்திரத்தில் உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிறு தானியங்கள் அனைத்தையும் நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.உளுந்தையும் சிறு தானியத்தையும் கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும் அதை 8 மணிநேரம் உப்பு சேர்த்து கரைத்து ஊறவைத்துக் கொள்ளவும்.பின்னர் தோசைக்கல்லில் குழந்தைகளுக்கு விரும்பிய வடிவத்தில் வார்த்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் சுவையான சத்தான சிறுதானிய பருப்பு அடை ரெடி.குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவாக அமைந்துள்ளது.சிறுதானியம் சாப்பிடுங்கள் உடல் எடையை குறைக்கலாம் .விரைவில் பசி எடுக்காது.உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறையும். ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:வெந்தயக்கீரை - 1கட்டுபாசிப்பருப்பு- அரை கப்சிறிய வெங்காயம்- கால் கப்காய்ந்த மிளகாய்- 2கறிவேப்பிலை -சிறிதளவுஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை:பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மிக்சியில் பாசிப்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். அதில், வெந்தயக்கீரை, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, திடமான மாவு தயாரிக்கவும்.தோசைக்கல்லில் தேவையான எண்ணெயை தடவி, மாவை ஊற்றி மூடி வேக விடவும். சுவையான, வெந்தயக்கீரை பாசிப்பருப்பு அடை தயார். உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த தோசையை, குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள் -1 கப் திணை அரிசி,1/4 கப் உளுந்து,தேவையானஅளவு உப்பு,தேவையானஅளவுஎண்ணெய்.தாளிப்பதற்கு -1 பெரிய வெங்காயம்,1/4 தேக்கரண்டி கடுகு,1மேஜைக் கரண்டிகடலை பருப்பு,3 காய்ந்த மிளகாய்,2மேஜைக் கரண்டி எண்ணெய்,1/2 தேக்கரண்டி சீரகம்,கருவேப்பிலை,செய்முறை - திணை அரிசி மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ,நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளித்து வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், தயார் செய்துள்ள மாவில் சேர்த்து கலக்கவும்.மாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்து குழி பணியாரம் மாவு பதத்திற்கு தயார் செய்யவும்.குழிப் பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து மாவை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு முறுகலாக சுட்டு எடுக்கவும்.மிகவும் ஆரோக்கியமான திணை அரிசி குழிப்பணியாரம் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்-1 கப்அவல்,1/2.கப்ரவை,1/4 கப்தயிர்,2வெங்காயம்,2 பச்சை மிளகாய்,1/4 டீஸ்பூன்சோடா உப்பு,தேவையான அளவுஉப்பு,தேவையான அளவுஎண்ணெய்,சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி .செய்முறை -அவலை அலசி வடிகட்டி வைக்கவும். மிக்சியில் அவல் ,ரவை, தயிர் சேர்க்கவும்.பின்னர் அதில் உப்பு சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவில் சோடா உப்பு வெங்காயம் சேர்த்து கலக்கவும்.பின்னர் அதில் பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலக்கவும்.பின்னர் பணியார சட்டியில் எண்ணெய் ஊற்றி சுட்டெடுக்கவும். இப்போது சுவையான அவல் குழி பணியாரம் தயார்.
தேவையான பொருட்கள்--1 கப் ரவை3/4 கப் தயிர்தேவைக்கு ஏற்பஉப்பு1 சிட்டிகை சோடா உப்பு½ பெரியவெங்காயம் பொடியாக நறுக்கியதுகருவேப்பிலை ,மல்லி தழை பொடியாக நறுக்கியது- சிறிதளவு1/4 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியதுதேவைக்கு ஏற்பதண்ணீர்தேவைக்கு ஏற்பஎண்ணெய்செய்முறை – எண்ணெய் தவிர்த்து எல்லாவற்றையும் கலந்து குறைந்தது 20 - 30 நிமிடம் ஊற வைக்கவும்.பணியார சட்டியை அடுப்பில் வைத்து தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் விட்டு கலந்து வைத்திருக்கும் மாவை ஊற்றி வேகவிடவும்.ஒரு புறம் வெந்ததும் ,மறுபுறம் திருப்பி நன்றாக வேக விட்டு எடுத்து, சூடாக பரிமாறவும். வித்தியாசமான சுவையில் ரவா பணியாரம் ரெடி.
தேவையான பொருட்கள்-1 கப் பச்சரிசி1 கப் இட்லி அரிசி1 கப் உளுத்தம்பருப்புதேவையான அளவு பொரிக்க எண்ணெய்1 தேங்காய்தேவையானஅளவு சர்க்கரை3 ஏலக்காய்செய்முறை -முதலில் ஒரு கப் அளவு பச்சரிசி, இட்லி அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை நன்றாக சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.ஊறிய அரிசி மற்றும் பருப்பை கிரைண்டரில் சேர்த்து அளவாக தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.ஒரு முழு தேங்காய் துண்டுகளாக, தேவையான அளவு சர்க்கரை, மூன்று ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.பிறகு அரைத்த மாவை வாணலியில் எண்ணெய் காயவைத்து, சிறிய உருண்டை கரண்டியை வைத்து, சிறு சிறு பணியாரமாக உருண்டைகளாக ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.பணியாரங்களை தேங்காய்ப் பாலில் ஊற வைத்து பரிமாறவும்.சுவையான பால் பணியாரம் தயார்..