தேவையான பொருட்கள் :-1கப் தினை புட்டு மாவு,1/4 கப் துருவிய தேங்காய்,2 சிட்டிகை உப்பு,தேவையானஅளவு வெந்நீர்.செய்முறை :-தினை புட்டு மாவில் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும் .இதில் வெண்ணெய் சேர்த்து ஈரப்பதம்பருவம் வரை பிசைந்து கொள்ளவும். இந்த மாவை மூடி போட்டு 5 நிமிடம் வைக்கவும்.புட்டுக் குழாயில் துருவிய தேங்காய் கொஞ்சம் போட்டு ,அதற்கு மேல் புட்டு மாவை சேர்க்கவும்.அதன் மேல் மீண்டும் தேங்காய் துருவியது ,இவ்வாறு மாற்றி குழாய் நிரம்பும் வரை சேர்க்கவும்.இதனை மூடி போட்டு சூடான புட்டுக் குழாயில் வைத்து, நன்கு ஆவி வரும் வரை வேகவிட்டுஎடுக்கவும்.இது ஆரோக்கியமான திணை புட்டுடன் நெய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடசுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :1 கப்கோதுமை மாவு,1/2 கப் தேங்காய்,1/4 கப் நாட்டு சர்க்கரை,1 ஸ்பூன் நெய்,2ஏலக்காய்,சிறிது உப்பு ,செய்முறை :கோதுமையை வறுத்து அரைத்து கொள்ளவும் வறுத்த மாவுடன் உப்பு,தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவும்.10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். வேகவைத்த மாவில்சர்க்கரை,தேங்காய், நெய்,ஏலக்காய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தேவையான பொருட்கள் :200 கிராம் பாசிப்பருப்பு,5 டேபிள்ஸ்பூன் நெய்,10 முந்திரிப் பருப்பு,1/2 மூடி துருவிய தேங்காய்,100 கிராம் சக்கரை,தேவையான அளவு உப்பு,தேவையான அளவு தண்ணீர்.செய்முறை :முதலில் 200 கிராம் பாசிப்பருப்பை நாம் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே தண்ணீரில் ஊறவைத்து விட வேண்டும்.மூன்று மணி நேரம் கழித்து தண்ணீர் முழுவதையும் நன்றாக வடித்து விட்டு வெறும் பருப்பைமட்டும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு நாம் இட்லி ஊற்றுவது போல் இட்லி சட்டியில் அரைத்த பாசிப்பருப்பு மாவை இட்லி போல்வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.இட்லி வெந்ததும் அதனை தனியாக எடுத்து ஒரு ப்ளேட்டில் வைத்து நன்றாக ஆற வைத்துக்கொள்ள வேண்டும். இட்லி ஆறியதும் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.அடுத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி பல்ஸ் மோடில் வைத்து இட்லி துண்டுகளை தூளாகஉதிர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கடாயில் 5 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து அதனுடன் 10 முந்திரி பருப்புகளைஉடைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதனுடன் அரை கப் துருவிய தேங்காய் சேர்த்து தேங்காய் நெய்யில் நன்றாக வதங்கும் வரைவதக்க வேண்டும்.பிறகு நாம் உதிர்த்து வைத்திருக்கும் பாசிப்பருப்பு இட்லி துருவலை அதனுடன் சேர்த்து நன்றாககலக்கி பிறகு அதனுடன் 100 கிராம் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.இனிப்பை இன்னும் தூக்கி கொடுப்பதற்காக ஒரு பின்ச் அளவிற்கு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட்டு ஒரு 5 நிமிடம் வரை சிம்மில் அடுப்பை வைத்து கிளறி விட வேண்டும்.மிகவும் ருசியானஆரோக்கியமான சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும் பாசிப்பருப்பு புட்டு தயார்.புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்த பாசிப்பருப்பில் நாம் மிகவும் சுவையான இனிப்பு புட்டு செய்து சாப்பிடலாம்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :சிவப்பரிசி - 2கப், தேங்காய் துருவல்- 1 1/2 கப், உப்புதேவைக்கு. செய்முறை :ஒரு பாத்திரத்தில் புட்டு மாவு, அத்துடன் தேவையான உப்பு, சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகதண்ணி தெளித்து கட்டி இல்லாமல் மாவு உதிரியாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைத்துவிடவும்.தேங்காயை துருவி வைத்துக்கவும். புட்டு பானையை ஸ்டவ்வில் வைத்து தண்ணி விட்டு சூடுபண்ணவும்.புட்டு குழலில் கொஞ்சம் தேங்காய் துருவல், அதற்க்கு மேல் அரிசி மாவு, என்று குழாய்முழுவதுமாக நிறைத்து புட்டு பானையில் 10நிமிடம் வேக விட்டு எடுக்கவும்.சுவையான ஆரோக்கியமான சிவப்பாரிசி குழாய் புட்டு தயார்..இந்த சுவைமிக்க புட்டை கடலை,பச்சை பயறு, தட்டை பயறு குருமாவுடன் பரிமாறவும்.இது ஒரு அருமையான காலைஉணவு.குழந்தைகள் சக்கரை, பழம் சேர்த்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்1 கப் சத்துமாவு,4 ஸ்பூன் தேங்காய் துருவல்,2 ஸ்பூன் சர்க்கரை,1/2 ஸ்பூன் உப்பு,வாழைப்பழம் தேவைக்கேற்ப,1/4ஸ்பூன் ஏலக்காய் தூள்.செய்முறை :முதலில் சத்துமாவை கடாயில் சேர்த்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.தேவையான அளவு உப்புசேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.கையில் பிடித்தால் கொழுக்கட்டை பதத்திற்கும் உதிர்த்து விட்டால் தூளாகும் அளவுக்கு இருக்கவேண்டும்.இப்பொழுது இதை ஒரு இட்லி தட்டில் துணி போட்டு அதன் மேல் புட்டு மாவை சேர்த்து 5 நிமிடம்ஆவியில் வேக வைக்க வேண்டும்.5 நிமிடம் கழித்து வெந்தவுடன் இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் சர்க்கரை தேங்காய்துருவல் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கலந்தால் புட்டு ரெடி.அப்படியே பரிமாறலாம்.அல்லது 1 ஸ்பூன் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து பரிமாறலாம்.அல்லது 1 வாழைப்பழத்தை மசித்து இதனுடன் சேர்த்து பரிமாறலாம்.குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு புட்டு தயார்.
தேவையான பொருட்கள்:புழுங்கல் அரிசி - 1 கப்,வெல்லம் - 1 கப்,பால் - 200. மி. லி, கடலைப்பருப்பு,தேங்காய் துருவல் - தலா கால் கப்,ஏலக்காய்துாள் - சிறதளவு ,வெண்ணெய்,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:புழுங்கல் அரிசியை ஊற வைத்து, கெட்டி மாவாக அரைக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில்வேக வைக்கவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். அதில் பால் ஊற்றிகொதித்ததும், அரைத்தமாவைசேர்த்துகிளறவும்.பின்,வெந்தகடலைப்பருப்பு, உப்பு, தேங்காய்துருவல் மற்றும் ஏலக்காய்துாள் துாவி கிளறி இறக்கவும். பெரிய தட்டில் வெண்ணெய் தடவி,கலவையை ஊற்றி ஆறியதும் துண்டுகளாக்கவும். சுவைமிக்க, 'வெண்ணெய் புட்டு!' தயார்.அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
தேவையான பொருட்கள்:சோள மாவு - 2 கப்எண்ணெய் - 4 தேக்கரண்டிஉப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:சோள மாவுடன் உப்பு, எண்ணெய், தண்ணீர் சேர்த்து பிசையவும். அதை இடியாப்ப குழலில் பிழிந்து,15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.சுவையான,'சோள இடியாப்பம்!' தயார். தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். இனிப்பு பிரியர்கள் தேங்காய் துருவல், நாட்டு சர்க்கரை சேர்த்து உண்ணலாம். சுவை அபாரமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: கவுனி அரிசிமாவு (அல்லது ஊறவைத்த கவுனி அரிசி) - 1 கப்,தண்ணீர் - தேவையான அளவு (மாவு பிசைய),உப்பு - தேவையான அளவு,நெய் - 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்),தேங்காய் துருவல் - சிறிதளவு (விருப்பப்பட்டால்) ,செய்முறை:கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி4 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, நிழலில் உலர்த்தி மாவாக அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் கவுனி அரிசி மாவை எடுத்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கொதிக்கும் வெந்நீரை சிறிது சிறிதாக ஊற்றி, கெட்டியாக பிசையவும்(சப்பாத்தி மாவை விட சற்று மென்மையாக). நெய் சேர்த்து பிசைந்தால் மென்மையாக இருக்கும்.இடியாப்ப அச்சில் பிழிந்து, இட்லி தட்டில் வைத்து ஆவியில்5-7 நிமிடங்கள் வேகவைக்கவும்.சுவையான கவுனி அரிசி இடியாப்பத்தை தேங்காய் பால், நாட்டுச் சர்க்கரை அல்லது குருமாவுடன் சேர்த்து பரிமாறவும். இது ஆரோக்கியமான, சத்தான காலை அல்லது இரவு உணவு.
தேவையான பொருட்கள்:அரிசி மாவு - 2 கப், பீட்ரூட் சாறு - அரை கப், கொதி நீர் - 2-3 கப்,உப்பு - தேவையான அளவு .செய்முறை :ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு எடுத்து அதில் உப்பு கலந்து கொள்ளவும்.கொதி நீரை சிறிது சிறிதாக ஊற்றி, மாவை கிளறவும்.இடை இடையே பீட்ரூட் சாறை ஊற்றி மாவை கிளறவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றியதும் மாவு வெந்துவிடும். எல்லா மாவையும் ஒன்றாக திரட்டி கொள்ளவும்.தேவையான சிறிது மாவு எடுத்து இடியாப்ப அச்சில் போட்டு, இட்லி குழியில் பிழியவும்3-4 நிமிடம் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.பீட்ரூட் இடியாப்பம் ரெடி. குழம்பு அல்லது தேங்காய் பாலுடன் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:கோதுமை மாவு- 500 கிராம்,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு. செய்முறை:முதலில் கோதுமை மாவை15 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்க வேண்டும். அல்லது கோதுமை மாவைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாகப் பிசைந்து கொண்டு, இடியாப்ப உழக்கில் இட்டுப் பிழிந்து ஆவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். இதற்கு தொட்டுக் கொள்ள கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை ஏற்றது.