25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 11, 2026

ஆவணங்கள் தொலைந்தால் போலீஸ் நிலையம் செல்ல வேண்டாம்.

பாஸ்போர்ட், வாகன பதிவு சான்று (RC), ஓட்டுநர் உரிமம், ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் அல்லது பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்தால், காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.இதற்குப் பதிலாக, eservices.tnpolice.gov.in இணையதளத்தில் புகார் பதிவு செய்து, அதை உறுதிப்படுத்தி, பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aug 10, 2026

72 மணி நேரம் சீனப் படையை தடுத்து நிறுத்திய இந்திய வீரர்!

1962 இந்தியா–சீனா போரில் ரைஃபிள்மேன் ஜஸ்வந்த் சிங் ராவத் நூரானங் பகுதியில் அபார வீரத்தை வெளிப்படுத்தினார். அவரது தியாகத்திற்காக மரணத்திற்குப் பின் மகா வீர் சக்ராவிருது வழங்கப்பட்டது. 

Aug 10, 2026

அம்புஜா சிமெண்ட்ஸ் அசத்தல் வளர்ச்சி! 

அதானி குழுமத்தின் அம்புஜா சிமெண்ட்ஸ், 2026–27 முதல் காலாண்டில் ஒரு டன் EBITDA-வை 27% உயர்த்தி ₹931 ஆக பதிவு செய்துள்ளது. விற்பனை வளர்ச்சி, பிரீமியம் தயாரிப்புகள் மற்றும் செலவுக் கட்டுப்பாடே முக்கிய காரணங்கள்.

Aug 10, 2026

மறை கேமராவை மொபைலால் கண்டறிய முடியுமா?

உடை மாற்றும் அறைகளில் மறை கேமராவை மொபைல் அழைப்பு அல்லது வீடியோ மூலம் கண்டறியலாம் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. ஆனால், இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை.சந்தேகம் ஏற்பட்டால், அறையை கவனமாக ஆய்வு செய்வது, நிர்வாகத்திடம் உடனடியாக புகார் தெரிவிப்பது மற்றும் தேவையெனில் காவல்துறையை அணுகுவதுதான் பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழிமுறையாகும்.

Aug 10, 2026

எலக்ட்ரீஷியன்களுக்கு சூப்பர் டிமாண்ட்! AI காலத்தில் இவர்கள்தான் ஹீரோ! 

கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் எலக்ட்ரீஷியன்களுக்கான தேவை 242% உயர்ந்துள்ளது.AI டேட்டா சென்டர்களின் வளர்ச்சியால் 24×7 மின்சாரம் மற்றும் பராமரிப்பு அவசியமாகி, திறமையான எலக்ட்ரீஷியன்களுக்கு அதிக வேலைவாய்ப்பும் சம்பளமும் கிடைத்து வருகிறது

Aug 10, 2026

5G ஹாட்ஸ்பாட்: ஜியோ, ஏர்டெல் விதிமுறைகளில் மாற்றம்.

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், சில வரம்பற்ற 5G திட்டங்களில் ஹாட்ஸ்பாட் பயன்பாட்டுக்கான விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளன.எனவே, உங்கள் திட்டத்தில் ஹாட்ஸ்பாட் வசதி தொடருகிறதா என்பதை அறிய, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விதிமுறைகளை சரிபார்ப்பது அவசியம்.

Aug 10, 2026

மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆன்லைன் பதிவு வசதி.

மக்கள்தொகை கணக்கெடுப்பிற்காக பொதுமக்கள் குறிப்பிட்ட காலத்திற்குள்se.census.gov.in தளத்தில் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டத்தில் வீடுகள் மற்றும் வீட்டு வசதி விவரங்களும், இரண்டாம் கட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, மொழி உள்ளிட்ட தகவல்களும் சேகரிக்கப்படும்.

Aug 10, 2026

மிக்ஸி ஜாரின் அடிப்பகுதியை எளிதில் சுத்தம் செய்வது எப்படி?

மிக்ஸி ஜாரின் அடிப்பகுதியில் படியும் எண்ணெய் மற்றும் அழுக்கை அகற்ற, வெதுவெதுப்பான நீரில் பாத்திரம் கழுவும் திரவம் கலந்து மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்யலாம். மூலைப்பகுதிகளில் உள்ள அழுக்கை பழைய பல் துலக்கும் பிரஷ் மூலம் அகற்றலாம். பிடிவாதமான கறைகளுக்கு சமையல் சோடா பேஸ்ட் பயன்படுத்தலாம். சுத்தம் செய்யும்போது மோட்டார் இணைப்பில் தண்ணீர் செல்லாதபடி கவனிக்க வேண்டும். முழுவதும் காய்ந்த பிறகே பயன்படுத்துவது பாதுகாப்பானது.

Aug 08, 2026

வண்டிகளின் நம்பர் பிளேட் நிறங்களின் அர்த்தம் தெரியுமா?

சாலையில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் வெவ்வேறு நிறங்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள். ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு அர்த்தம் உள்ளது! வெள்ளைநாம் சொந்தமாகப் பயன்படுத்தும் கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகனங்களுக்கு வெள்ளை நிற நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது.மஞ்சள்டாக்ஸி, லாரி, பஸ் உள்ளிட்ட வாடகை மற்றும் வணிகப் பயன்பாட்டு வாகனங்களுக்கு மஞ்சள் நிற நம்பர் பிளேட் பயன்படுத்தப்படுகிறது. பச்சைமின்சார வாகனங்களுக்கு பச்சை நிற நம்பர் பிளேட் வழங்கப்படுகிறது.நீலம்வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களில் நீல நிற நம்பர் பிளேட் இருக்கும். இதில் ‘CD’, ‘CC’ போன்ற குறியீடுகள் இடம்பெறும்.சிவப்புஇந்திய ஜனாதிபதி, ஆளுநர் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களில் சிவப்பு நிற நம்பர் பிளேட் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Aug 08, 2026

கோவையில் உருவாகும் செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம்!

கோவையை தென்னிந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நகரமாக மாற்றும் நோக்கில், தமிழக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டாண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.இந்த மையத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவதுடன், உலகத் தரத்திலான ஆராய்ச்சி வாய்ப்புகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 129 130

AD's



More News