25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Oct 30, 2026

குழந்தைகளைப் பாராட்டிப் பழக்குங்கள்.

பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் காட்டும் அக்கறையை, அவர்களின் நல்ல செயல்களையும் பாராட்டுவதில் காட்ட வேண்டும்.வீட்டில் ஒரு சிறிய உதவி செய்தாலும், பிறரிடம் அன்பாக நடந்துகொண்டாலும் அவர்களின் முயற்சியை மனதாரப் பாராட்டுங்கள். இதனால் குழந்தைகள் நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்ய ஊக்கம் பெறுவார்கள்.உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து விளையாடவும், பொருட்களைப் பகிர்ந்துகொள்ளவும் அவர்களை ஊக்குவியுங்கள். இது அவர்களிடையே அன்பு, ஒற்றுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையை வளர்க்கும்.

Oct 30, 2026

பொன்னான 'பொடி' மற்றும் ஊறுகாய் தொழில்.

வீட்டிலிருந்தே தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு நொறுக்குத்தீனி, பொடி மற்றும் ஊறுகாய் தயாரிப்பு சிறந்த தேர்வாகும்.தேவை அதிகம்: முறுக்கு, சீடை போன்ற தின்பண்டங்கள் மட்டுமின்றி இட்லிப்பொடி, சாம்பார்பொடி, ரசப்பொடி மற்றும் மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களுக்கு எப்போதும் சந்தையில் நல்ல கிராக்கி உண்டு.தேவையானவை: அரிசி மாவு, பருப்பு, மசாலாப் பொருட்கள், ஒரு நல்ல மிக்ஸி மற்றும் கடாய் போன்ற குறைந்தபட்ச உபகரணங்களே போதுமானது.பாரம்பரிய சமையல் திறன் கொண்டவர்கள் வீட்டிலிருந்தே இந்தத் தொழிலைத் தொடங்கி நல்ல வருமானம் ஈட்டலாம்.

Oct 30, 2026

ஹெட்போன் பயன்படுத்துகிறீர்களா? '60/60' விதியை மறக்காதீங்க.

தினமும் ஹெட்போன் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால், ஒலியின் அளவையும் பயன்படுத்தும் நேரத்தையும் கவனிப்பது அவசியம்.60/60 விதி: அதிகபட்சம் 60% சத்தத்தில், தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.அதிக சத்தத்தில் நீண்ட நேரம் கேட்பது காது கேட்கும் திறனைப் பாதிப்பதோடு, காதில் தொடர்ந்து இரைச்சல் ஏற்படும் Tinnitus பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.

Oct 29, 2026

இனி செல்போன் எண்ணுடன் டிரைவிங் லைசென்ஸ்.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், ஓட்டுநர் உரிமம்(DrivingLicense) வழங்கும்நடைமுறையில் பல்வேறு முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.வண்ணக் குறியீடுகள்: இந்தியக் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு வெவ்வேறு நிறங்கள் அல்லது வடிவங்களில் ஓட்டுநர் உரிமம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.PVC அட்டைகள்: புதிதாக வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் உரிமங்கள் கட்டாயம் லேமினேட் செய்யப்பட்ட அல்லது PVC அட்டைகளாகவே இருக்க வேண்டும்.முக்கிய விவரங்கள் சேர்க்கை: ஓட்டுநர்களின் ரத்த வகை, செல்போன் எண் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டு எண் (EmergencyContact) ஆகியவை உரிமத்தில் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.எளிய ஆவண நடைமுறை: வயது மற்றும் முகவரி முறைகேட்டைத் தடுக்க பிரமாணப் பத்திரம் அல்லது ஆயுள் காப்பீட்டுப் பாலிசி ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். நோட்டரி பத்திரம் உள்ளிட்ட கூடுதல் ஆவணங்கள் இனி தேவையில்லை.

Oct 29, 2026

ஏ.ஐ.யின் அடுத்த பரிமாணம்.

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி கணித மேதைகளுக்குச் சவாலாக இருந்து வந்த ‘நேவியர்-ஸ்டோக்ஸ் சமன்பாடு’ (Navier-Stokes equation) தொடர்பான ஒரு மிகப்பெரிய கணிதப் புதிருக்கு ஏ.ஐ. தீர்வு கண்டுபிடித்துள்ளது. 10,000 ஏ.ஐ.க்கள் இணைந்து இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளதாக ஓபன் ஏ.ஐ. (OpenAI) நிறுவனம் அறிவித்துள்ளது.

Oct 29, 2026

தேவையில்லாத பொருட்களை அகற்றும் முறைகள்.

6 மாத விதி: கடந்த 6 மாதங்களாகப் பயன்படுத்தாத பொருட்கள் (உடை, புத்தகம், பொம்மைகள்) எவையாக இருந்தாலும் அவற்றை உடனே அகற்றவும்.பயன்படுத்திய பொருட்கள்: நல்ல நிலையில் உள்ளவற்றைத் தானம் செய்யவும் அல்லது விற்கவும். பழுதான மற்றும் காலாவதியான பொருட்களை (மருந்துகள், அழகு சாதனங்கள்) தூக்கி எறியவும்.தங்க விதி: ஒரு புதிய பொருள் வாங்கினால், அதற்குப் பதிலாக ஒரு பழைய பொருளை அகற்றுங்கள். வாரம் ஒருமுறை 15 நிமிடம் வீட்டைச் சுத்தப்படுத்துவதை வழக்கமாக்குங்கள்.பலன்கள்: வீடு சுத்தமாகும், மன அழுத்தம் குறையும், இடமும் நேரமும் மிச்சமாகும்.

Oct 28, 2026

தமிழ்நாட்டில் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் விண்வெளித் துறையை ஊக்குவிக்கவும், புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையமான IN-SPACe உடன் இணைந்து, விண்வெளித் துறைக்கான பொதுவான தொழில்நுட்ப வசதிகளையும் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விண்வெளி சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் வளர்ச்சி பெறவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளது.

Oct 28, 2026

சமையலறையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க உதவும் சில எளிய குறிப்புகள்.

 அடுப்பைச் சுத்தம் செய்ய: வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு பேக்கிங் சோடா கலந்து, அடுப்பின் மீது தடவி சில நிமிடங்கள் கழித்து மென்மையான துணியால் துடைக்கலாம். முதலில் அடுப்பு அணைக்கப்பட்டு குளிர்ந்திருப்பதை உறுதிசெய்யவும்.பர்னரில் உள்ள கறையை நீக்க: பர்னர் உற்பத்தியாளர் வழிகாட்டுதலின்படி, பொருத்தமான சுத்தம் செய்யும் முறையைப் பின்பற்றவும். நீக்கக்கூடிய பாகங்களைச் சுத்தம் செய்த பிறகு, அவற்றை முழுமையாக உலர்த்திப் பொருத்தவும்.பர்னர் துளைகளைப் பராமரிக்க: துளைகளில் அடைப்பு இருப்பதாகத் தெரிந்தால், கூர்மையான ஊசியால் குத்துவதைத் தவிர்க்கவும். இதனால் துளைகள் சேதமடையலாம். உற்பத்தியாளர் பரிந்துரைக்கும் முறையில் சுத்தம் செய்வது பாதுகாப்பானது.சின்னச் சின்ன பராமரிப்பு நடவடிக்கைகள், சமையலறையைச் சுத்தமாக வைத்திருக்க உதவும்!

Oct 27, 2026

விண்வெளித் துறையில் புதிய மைல்கல்: கோவையில் L&T-யின் அதிநவீன மையம்.

இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சியில் கோவை மேலும் ஒரு முக்கியப் படியை எட்டியுள்ளது.L&T நிறுவனம், கோவையில் உள்ள Precision Manufacturing & Systems Complex (PMSC) வளாகத்தில் அதிநவீன செயற்கைக்கோள் அசெம்பிளி மற்றும் ஒருங்கிணைப்பு வசதியைத் தொடங்கியுள்ளது.இதன் மூலம் செயற்கைக்கோள்களை ஒன்றிணைத்தல், அவற்றின் பல்வேறு பாகங்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட முக்கியப் பணிகளில் கோவை முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த புதிய வசதி, இந்தியாவின் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவையான உள்நாட்டு உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதுடன், கோவையின் தொழில்துறை வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.

Oct 27, 2026

தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடி வரிப்பகிர்வு நிதி.

மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.4,466 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக நிதி பெற்ற மாநிலங்கள்உத்தரப் பிரதேசம் – ரூ.19,208 கோடிபீகார் – ரூ.10,845 கோடிமத்தியப் பிரதேசம் – ரூ.8,010 கோடிதமிழ்நாடு – ரூ.4,466 கோடிமொத்தம் 28 மாநிலங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மாநில வளர்ச்சிக்கு நிதி உதவிமாநில அரசுகளின் மூலதனச் செலவுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில் வரிப்பகிர்வு நிதி வழங்கப்படுகிறது. சாலை, குடிநீர், பொதுச் சேவைகள் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்கு இந்த நிதி உதவியாக அமையும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 152 153

AD's



More News