25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 25, 2026

தூத்துக்குடியில் ஹோலோசீன் கால புதைபடிமத் தளம் கண்டுபிடிப்பு.

தமிழகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் முக்கியமான கண்டுபிடிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 8,000 முதல் 12,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஹோலோசீன் காலத்தைச் சேர்ந்த புதைபடிமத் தளம் கண்டறியப்பட்டுள்ளது.இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (Zoological Survey of India) மேற்கொண்ட ஆய்வில், இந்தத் தளத்தின் முக்கியத்துவம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aug 25, 2026

சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது விஷமா?  .

சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் செரிமானம் பாதிக்கப்படும் என்பது பொதுவாகப் பரவும் கருத்து. ஆனால், சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பது விஷம் என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை.தாகம் ஏற்பட்டால் உணவுக்கு முன்போ, உணவின்போதோ அல்லது உணவுக்குப் பிறகோ தேவையான அளவு தண்ணீர் குடிக்கலாம். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை பராமரிப்பதே முக்கியம்.

Aug 25, 2026

அடிக்கடி மாற்ற வேண்டிய அன்றாடப் பொருட்கள்.

உள்ளாடை:தொடர்ந்து பயன்படுத்திய நிலையில் பழையதாகும் போது மாற்றவும்.பல் துலக்கும் பிரஷ்: பொதுவாக 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது அதன் நார்கள் சேதமடைந்தால் மாற்றவும்.குளியல் துண்டு: அடிக்கடி துவைத்து நன்றாக உலர்த்தி பயன்படுத்தவும்.தலையணை உறை: வாரத்திற்கு குறைந்தது ஒருமுறை மாற்றி துவைப்பது நல்லது.மொபைல் திரை: அடிக்கடி சுத்தம் செய்து கிருமி பரவலைத் தவிர்க்கவும்.பெட் ஷீட்: வாரத்திற்கு ஒருமுறை துவைப்பது நல்லது.சமையலறை ஸ்பாஞ்ச்: அடிக்கடி சுத்தம் செய்து, துர்நாற்றம் அல்லது சேதம் ஏற்பட்டால் மாற்றவும்.

Aug 25, 2026

மூளையின் ‘ஆட்டோ-டெலீட்’ வசதி.

நாம் வளர வளர மூளையில் தேவையற்ற அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படும் சில நரம்பு இணைப்புகள் குறைக்கப்படும் செயல்முறைக்கு ‘Synaptic Pruning’ என்று பெயர்.இதன் மூலம் மூளையின் செயல்பாடுகள் திறம்பட ஒழுங்குபடுத்தப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Aug 25, 2026

போர்டிங் பாஸில் குடியேற்ற முத்திரை இனி இல்லை.

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகளின் போர்டிங் பாஸில் குடியேற்ற அதிகாரிகள் முத்திரையிடும் நடைமுறை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது.இதற்கு பதிலாக, குடியேற்ற அனுமதியின்போது பயணிகள் தங்களது இ-போர்டிங் பாஸை ஸ்மார்ட்போன் மூலம் சமர்ப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.புதிய நடைமுறையால் வெளிநாட்டு பயணிகளுக்கான செயல்முறை மேலும் எளிமையாகவும், விரைவாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணம் இனி இன்னும் எளிதாகும்.

Aug 25, 2026

ஆவினை வலுப்படுத்தினால் தனியார் பால் நிறுவனங்களுக்கு சவால்: விஜய் அரசு.

தமிழ்நாட்டின் பால் சந்தையில் குஜராத்தின் அமுல், கர்நாடகாவின் நந்தினி, ஆந்திராவின் ஹெரிடேஜ் மற்றும் திருமலா, தெலங்கானாவின் டோட்லா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் கணிசமான சந்தைப் பங்கைப் பெற்றுள்ளன.தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 2.25 கோடி லிட்டர் பால் உற்பத்தியாகும் நிலையில், அதில் சுமார் 30 லட்சம் லிட்டர் மட்டுமே ஆவின் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையை மாற்ற, ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கூடுதல் பாலை கொள்முதல் செய்வதுடன், கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில், நுகர்வோருக்கு மலிவான விலையில் பால் மற்றும் பால் பொருட்களை வழங்குவதன் மூலம் ஆவினின் சந்தைப் பங்கை அதிகரிக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் குறைத்து, தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவினை மீண்டும் முன்னணி நிறுவனமாக நிலைநிறுத்த முடியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Aug 25, 2026

UPI பரிவர்த்தனையில் இந்தியாவின் வரலாற்றுச் சாதனை.

ஜூலை மாதத்தில் மட்டும் ரூ.2,366 கோடிUPI பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தியா புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. அதே மாதத்தில்UPI பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.29.88 லட்சம் கோடி என பதிவாகியுள்ளது.கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இது19% வளர்ச்சி எனNPCI அறிவித்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா தொடர்ந்து முன்னேறுகிறது.

Aug 25, 2026

பூகம்பம் குறித்து பரவும் முன் எச்சரிக்கை பதிவு.

27.08.2026 அன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.நியூஸிலாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தைவான், சீனா, மியான்மர், நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் 8.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், அன்றைய தினத்தில் அதிக எண்ணிக்கையிலான மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுவதுடன், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு, மேக வெடிப்பு, கனமழை, சூறாவளி மற்றும் வளிமண்டல வெப்பநிலை உயர்வு போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பு: நிலநடுக்கம் ஏற்படும் குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் ரிக்டர் அளவை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது தற்போது அறிவியல் ரீதியாக சாத்தியமில்லை. எனவே, இதுபோன்ற தகவல்களை அதிகாரப்பூர்வ ஆதாரங்களை சரிபார்த்த பின்னரே நம்பவும், பகிரவும்.

Aug 24, 2026

ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள் , இவை இருந்தால் பல அரசு வேலைகள் எளிதாகும்.  1.ஆதார் அட்டை - அடையாளத்திற்கு மிக முக்கியம். 2.குடும்ப அட்டை - அரசு நலத்திட்டங்கள் அனைத்திற்கும் அவசியம். 3.PAN கார்டு - வங்கி, வரி மற்றும் நிதி செயல்களுக்கு. 4.வாக்காளர் அட்டை - வாக்களிக்கும் உரிமைக்கு மிக முக்கியமானது. 5.பிறப்புச் சான்றிதழ் - கல்வி, பாஸ்போர்ட் மற்றும் அரசு பதிவுகளுக்கு.. 6.வருமானச் சான்றிதழ் - உதவித் தொகை, கல்வி மற்றும் அரசு சலுகைகளுக்கு. 7.சமூக சான்றிதழ் -  கல்வி,மற்றும்வேலைவாய்ப்பு  அரசு திட்டங்களுக்கு. 8.இருப்பிடச் சான்றிதழ் - முகவரி நிரூபிக்க அவசியமானது. 9.வங்கி PASSBOOK - அரசு நிதி உதவிகள் மற்றும் வங்கி செயல்களுக்கு. 10.DRIVING LICENCE / PASSPORT - ஓட்டுநர் உரிமம் / கடவுச்சீட்டுஅடையாளம் மற்றும் பயணத்திற்குத் தேவையானது.

Aug 24, 2026

பெண்களின் பருவப்பெயர்கள்.

பெண்களின் பருவப்பெயர்கள், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண். 5-7 வயது பெண் - பேதை 8-11 வயது பெண் - பெதும்பை 12-13 வயது பெண் -மங்கை 14-19 வயது பெண்-மடந்தை 20-25 வயது பெண் - அரிவை 26-31 வயது பெண்- தெரிவை 32-40 வயது பெண் - பேரிளம்பெண்

1 2 3 4 5 6 7 8 9 10 ... 129 130

AD's



More News