உலகின் மிகப் பெரிய காற்றாலையை நிறுவி சீன நாடு சாதனை செய்துள்ளது.டோங்பாங் (Dongfang) எனும் நிறுவனத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காற்றாலை மின்சார உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு சீனா. அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்காவும், ஜெர்மனியும் உள்ளன. அதிகரித்து வரும் தன்னுடைய மின் தேவைகளை, சுற்றுச் சூழலைப் பெரிய அளவு பாதிக்காத வகையில் ஈடு செய்வதற்குச் சீனாமுயன்று வருகிறது. புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த பூசௌ என்னும் இடத்தில் இது நிறுவப்பட்டுள்ளது. இதன்மொத்த உயரம் 1,115 அடி. அதாவது, இது பாரிஸ் ஈபில் கோபுரத்தை விட உயரமானது. இது எளிதில் துருப்பிடிக்காதபடி அமைக்கப்பட்டுள்ளது. சூறாவளிகள் வந்தாலும் கூட இது தாக்குப் பிடிக்கும். அந்தளவுக்கு வலுவானது என்று இதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.இந்தக் காற்றாலை மணிக்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகின்ற காற்றில் இருந்து 100 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.இது 55,000 வீடுகளுக்குப் போதுமானது. இந்த ஒரு காற்றாலை 30,000 டன் நிலக்கரி பயன்பாட்டையும், 80,000 டன்கரியமில வாயு உமிழ்வையும் குறைக்கும்.
வாகனப் போக்குவரத்துக்கு உதவும் உலகின் உயரமான சாலை நம் நாட்டில் தான் உள்ளது. இது, கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கிறது.இதற்கு முன், இந்த பெருமையை தென் அமெரிக்க நாடான பொலிவியா தக்க வைத்திருந்தது. பொலிவியாவில், உட்டுருங்கு எரிமலையை இணைக்க, 18 ஆயிரத்து, 953 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. இது உலக அளவில் தனித்துவ அடையாளத்தோடு விளங்கியது.தற்போது, காஷ்மீர், லடாக்கில் ,19 ஆயிரத்து, 24 அடி உயரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாகனப் போக்குவரத்தும் நடக்கிறது. தற்போது, காஷ்மீர், லடாக் சாலை தனித்தன்மை பெற்றதாக இருக்கிறது.உலகின் மிக உயரமான வாகனப் போக்குவரத்து சாலை என, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
சூரிய ஒளியால் கண்கள் உலர்ந்து போகாமலும், சூரிய ஒளியில் எளிதாக பார்க்க உத வும் 'கூலிங் கிளாஸ்' என்ற கண்ணாடிகள் எப்போது கண்டறியப்பட்டது என்ற துல் லியமான தகவல் இல்லை.18-ம் நூற்றாண்டின் வெனிஸ் நகரில் சிலர் சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்க கண்ணாடி போன்ற ஒன்றை அணிந்து கொண்டதாக ஆதாரங்கள் உள்ளன.இதற்கெல்லாம் முன்பே,ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள் சூரியனின் உக்கிரமான வெளிச்சத்தில் இருந்து கண் களை தற்காத்துக்கொள்ள கண்களை சுற்றி மூலிகை சாறுகள், சாயங்களை பூசிக் கொண்டனர். அரசர்கள், தங்க ளின் கண்களின் முன் மெல் லிய கண்ணாடி ரத்தினங் களை அணிந்து கொண்ட தாக சில வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.ஆர்க்டிக் துருவ பகுதி களில் வாழ்ந்த மக்கள் எலும் புத்துண்டுகள், மரத்துண்டு களை வெட்டி தங்கள் கண்க ளின்மீது அணிந்து கொண்ட னர்.இப்படி பல பரிணாம வளர்ச் சிகளை கண்ட கண்ணாடி 19-ம் நூற்றாண்டில் விதவித மான நிறங்களை கொண்டு மக்களிடம் பரவலாக புழக்கத் தில் வந்தது.எட்வின் 1930- களில் லேண்ட் என்ற ராக் இசைக்க லைஞர் போலராய்டு என்ற வகை கூலிங் கிளாஸ்களை அறிமுகம் செய்தபின் மிகப்பெ ரிய அளவில் விற்பனையை எட்டியது.வழக்கமான 'கூலிங்கிளாஸ்'லென்ஸ்கள்மீதுஒருசிறப்புவடிகட்டியைவைப்பதுகண்ணைகூசுவதைகுறைத்து,பார்வைதிறனைஅதிகரிப்பதாக லேண்ட் கண் டறிந்தார். இதுவேபோலராய்டு கண் கண்ணாடிகள் என்ற பெயரில் உலகின் பல்வேறு நாடுகளில் பிரபலமானது.இன்றைக்கு, சன் கிளாஸ் அல்லது கூலிங்கிளாஸ் என்ற கண்ணாடி தயாரிப்பு தொழில் நுட்பம் பல்வேறு நவீன அம்சங் களை கொண்டுள்ளன. குறிப் பாக, இன்றைய 'சன் கிளாஸ் கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் அல்ட்ரா வய லட் கதிர்வீச்சுக்களில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன. இதனால், கண் புரை, கண் விழிப்படல சிதைவு, கண் சார்ந்த தசைகளில் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.தகிக்கும் வெயிலை கண்கள் தாங்கிக்கொள்ள கூலிங் கிளாஸ் உதவுகிறது என்பதில் மாற்றமில்லை.
அலுவலகத்தில் கணினியில் பணியாற்றும்போது சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கண் எரிச்சல் மட்டுமல்ல, கண் சிவப்பாக மாறுதல், கண்களில் அரிப்பு உணர்வு ஏற்படுதல்.இப்படி பல பிரச்சினைகளை சந்தித்திருப்போம். இதை கண் உலர் பாதிப்பு என்கிறார்கள். ஆரம்பத்தில் நடுத்தர வயதினரிடம் தென்பட்ட இந்த பாதிப்பு, இப்போது கல்லூரி, அலுவலகம் செல்லும் ' இளைஞர்களையும், கணினி அதிகமாக உபயோகிப்பவர்களையும் பாதிக்கிறது. கண்ணில் உள்ள கண்ணீர் சுரப்பிகளில் கண்ணீர் போதுமான அளவு உற்பத்தி ஆகாதது மற்றும் வேகமாக ஆவி ஆவதால் இந்த கண் உலர் பாதிப்பு ஏற்படுகிறது. இது கண்களில் அசவுகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தும். குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருத்தல், கணினித் திரையை அதிக நேரம் பார்த்தல், மோசமான வெளிச்சம் அல்லது அதிக வெளிச்சம் போன்றவற்றால் கண்களில் ஈரப் பதம் இருக்காது.ஒரு சில மருத்துவக் காரணங்களான ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அலர்ஜி மற்றும் முதுமை போன்றவை கூட கண்ணின் வறட்சிக்கு காரண மாக அமையும். இந்த பிரச்சினை நீண்ட நாட்கள் இருந்தால் அது கண்களில் வலியை ஏற்படுத்துவதோடு, வாழ்க்கைத் தரம் மற்றும் பார்வைத் திறனையும் பாதிக்கும். கண்ணின் மேற்பரப்பு பகுதி சரியாக செயல்பட வேண்டுமெனில் அந்தப் பகுதியில் உடலில் தகுந்த அளவு நீரேற்றம் இருக்க வேண்டும். கண்களைச் சுத்தப்படுத்தவும், பாதுகாக்கவும் தேவையான திரவங்களை வெளியிடும் லாக்ரிமல் சுரப்பி சரியாக செயல்பட வேண்டுமெனில் நீரேற்றமாக இருப்பது மிகவும் அவசியம். தேவையான. அளவு தண்ணீரைக் குடிப்பதன் மூலம் தான் கண்களால் கண்ணீர் மற்றும் எண்ணெய்களை உற்பத்தி செய்ய முடியும். தர்பூசணி, பீச், வெள்ளரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். இது கண்கள் வறட்சியாவதை தடுக்கும்.
சீன பாரம்பரிய மருத்துவத்தில் நீண்ட காலப் பயன்பாட்டில் இருப்பது ஹிமாலய காளான். இதிலுள்ள கார்டிசெபின் எனும் வேதிப் பொருளை புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கடலிலேகரையக்கூடிய பிளாஸ்டிக்கை ஜப்பானைச் சேர்ந்த ரிக்கென் ஆய்வு மைய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.உணவுப் பொருட்களில் பயன்படும் சோடியம் ஹெக்ஸா மெட்டா பாஸ் பேட் உரத்தில் பயன்படும். குவானிடியம் அயனிகள் இரண்டையும் இணைத்து ஒரு புதுக் கலவையை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதை வேண்டிய வடிவில் திரட்டி, தேவைப்பட்ட பொருட்களைச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்தக் கலவையைக் கொண்டு செய்யப்படும் பொருட்கள் அப்படியே பிளாஸ்டிக் போலவே இருக்கும். எளிதில் தீப்பிடிக்காது. நிறமற்றதாக, ஒளிபுகக் கூடியதாக இருக்கும்.உப்புத் தண்ணீரில் போட்டு விட்டால் எட்டரை மணி நேரத்தில் கரைந்துவிடும். எனவே இது வழக்கமான பிளாஸ்டிக்கை விட மிகவும் நல்லது.இந்தக் கலவையால் செய்யப்பட்ட குவளைகள் அல்லது தண்ணீர்ப் பாத்திரங்களில் தண்ணீர் ஒட்டாத வகையில் சில வேதிப் பொருட்களைப்பூசி விடுவார்கள். இதனால், இவற்றில் ஊற்றப்படும் தண்ணீர் இவற்றைப் பாதிக் காது. இவற்றைப் பயன்படுத் தித் துாக்கி எறியும்போது லேசாகக் கீறிவிட்டால் போதும். இந்தக் கீறல் வழியாகக் கடலின் உப்பு நீர் உள்ளே சென்று குவளையைக் கரைத்து விடும்.அதேபோல இவற்றை நிலத்தில் போட்டாலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத் தாது. உப்புத் தண்ணீர் பட்டுக் கரைந்து நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகியவற்றை வெளிப்படுத்தும்இவை இரண்டும் தாவரங்களுக்குத் தேவையான சத்துக்கள் என்பதால் சுற்றுச் சூழலுக்கு நன்மையே. விரைவில் இவற்றாலான பிளாஸ்டிக் பொருட் கள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐபிஎம் நிறுவனத்தில் சுமார் 8,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இதில் பெரும்பாலும் HR துறையைச் சார்ந்தவர்களே பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.ஒரு நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுக்கவோ, அல்லது ஊழியரை நீக்கவோ HRன் முக்கிய பணி என்ற நிலையில், "நான் HRஐயே ஐபிஎம் நிறுவனம் வேலைவிட்டு நீக்கியுள்ளது" என கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, 200க்கும் மேற்பட்ட HRகளை கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நீக்கம் செய்த ஐபிஎம் நிறுவனம், தற்போது மேலும் HR துறையை சேர்ந்தவர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.தற்போது ஏ.ஐ. (AI) மூலமாகவே பெரும்பாலும் பணியமர்த்தல் நடைபெறுவதால், HR வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதில்லை என்றும், அதனால் தான் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.இன்னும் சில ஆண்டுகளில், முழுக்க முழுக்க HR துறையை ஏ.ஐ. ஆக்கிரமித்து விடும் என கூறப்படுவது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவில் 100 வருடப் பழமையான பூஷ்பபந்த அரண்மனை ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை டாடா குழுமத்தின் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் முன்னெடுக்கிறது.பழைய காலத்தில் அரசர்கள் நாட்டை ஆட்சி செய்த போது, அவர்களதுஅரண்மனைகள் ராஜா-ராணிகளின் ஆடம்பர மாளிகைகளாக இருந்தன. அந்த அரண்மனைகள் இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மாபெரும் கட்டிடங்களின் அடையாளமாக உள்ளன.இந்த ஹோட்டல் தயாராகும் போது, அதை "தாஜ் பூஷ்பபந்த அரண்மனை" என அழைக்க வேண்டும் என்று , இந்த மாற்றத்திற்கு முன், திரிபுர அரசு டாடா குழுமத்துடன் வ்ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்தது. இதில் 100 அறைகள் மற்றும் 5 ரீகல் ஸ்டைல் சூட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த அரண்மனையை 1917-ஆம் ஆண்டு மஹாராஜா பிரேந்திர கிஷோர் மனிக்யா பகதூர் கட்டியுள்ளார். இதை குஞ்ஜாபான் அரண்மனையாகவும் அறியப்படும். இது பல ஆண்டுகளாக அரச குடும்பவாழ்விடம் ஆக இருந்தது. பின்னர் 2018-ஆம் ஆண்டில் இது ஆளுநரின் இல்லமாக பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு 2018-ல் ராஜ்பவனத்தை வேறு இடத்திற்கு மாற்றியதும், இந்த அரண்மனை பயன்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது 5 நட்சத்திர ஓட்டலாக மாறியுள்ளது.
பழங்களைச் சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியதிற்கு மிகவும் நல்லது. பழங்களில் உள்ள சில சத்துகளைத் தனியாகப் பிரித்து அவற்றை மருந்தாகப் பயன் படுத்த முடியும், அவற்றுக் கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில், பிரேசில் நாட்டில், உள்ள எஸ்.ஓ.ஆர்.சி., என்கின்ற ஆய்வு மையம் ஒரு முக்கிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.இந்த ஆய்வு வாயிலாக, பலவிதமான நாள்பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடிய தன்மை பெக்டின் எனும் நார்ச்சத்துக்கு உள்ளது தெரியவந்துள்ளது. இந்த நார்ச்சத்து பழங்கள் காய்கறிகளின் செல் சுவர்களில் நிறைந்துள்ளன. பப்பாளிப் பழம், தாட் பூட் எனப்படுகின்ற பேஷன் பழம், ஆரஞ்சு ஆகியவற்றில் இந்தச் சத்து அதிகமாக இருக்கிறது.பப்பாளிப்பழம் பழுப்பதற்கு முன்பாக இந்த நார்ச்சத்து அதில் அதிக அளவில் இருக்கும். பழுத்துவிட்டால் இதனுடைய தன்மை மாறி விடும். எனவே ஆய்வாளர்கள் பப்பாளியை விடுத்து ஆரஞ்சு, பேஷன் பழங்களை எடுத்துக்கொண்டார்கள். அவற்றின் சதைப்பகுதிக்கும் தோலுக்கும் இடையே இருக்கின்ற வெள்ளைப் பகுதியில் பெக்டின் நிறைந்துள்ளது.இதை விலங்குகள் மீது பரிசோதித்தபோது, அவற்றின் உடலில் நல்ல மாற்றம் தந்தது. வருங்காலத்தில் குடல்புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இது பயன்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பொதுவாக ஆரஞ்சு முதலிய பழங்களில் சாறு எடுக்கும் போது சதைப் பகுதி வீணாகத் துாக்கி எறியப்படுகிறது. இதிலிருந்து பெக்டின் நிறைந்த வெள்ளைப் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து மாவு போல் செய்யலாம்.எனவே மருந்தாக மட்டும் இன்றி, இன்று நாம் பயன் படுத்துகின்ற புரோட்டின் பவுடர் போல் இந்த பெக்டின் மாவைப் பயன்படுத்த முடியும்.
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் வாழும் ஒரு பறவை சூப்பர் டார்லிங்ஸ். பொதுவாக 13 முதல் 41 பறவைகள் வரை குழுவாக வாழும். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இவை மனிதர்கள் போலவே நண்பர்களை உருவாக்கிக் கொள்வதாகத் தெரியவந்துள்ளது.