25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 08, 2025

பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

இந்நிலையில் பெட்ரோல், டீசல் கார்களின் அடுத்தக்கட்டமாக எலெக்ட்ரானிக் கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் கார் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. ஆனால் சீன கார் நிறுவனங்களோ ஒருபடி மேலே போய் எலெக்ட்ரானிக் கார்களை பறக்கும் கார்களாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளன.  விமானங்கள் பறக்கும் தொலைவுக்கு அல்லாமல் பூமி பரப்பிலிருந்து சில கிலோ மீட்டர் Low Altitiudeல் பறக்கும்படி இந்த கார்களின் திறன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பறக்கும் கார் தயாரிப்பு போட்டியில் சீனாவை சேர்ந்த செர்ரி என்ற நிறுவனம் தனது ப்ரோட்டோடைப் eVTOL பறக்கும் காரை அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த கார் மாடல் வெற்றிகரமாக பறந்து நிரூபணமான நிலையில், பறக்கும் கார்களுக்கான அனுமதி கோரி சீன அரசிடம் விண்ணப்பித்திருக்கின்றனர்.வரும் அக்டோபர் மாதத்தில் செர்ரி நிறுவனம் தனது பறக்கும்  eVTOL கார்களை கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியில் போக்குவரத்துக்கான அடுத்தக்கட்டமாக இந்த பறக்கும் கார்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. சாலையில் செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போன்ற தொல்லைகளை இது வெகுவாக குறைப்பதுடன், சாலையில் செல்லும் கார்களை விட விரைவாக குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியும் என்கிறார்கள்.

Jul 07, 2025

துணியிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறையை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிரேஸ் தொழில்நுட்ப பல்கலை கண்டறிந்துள்ளது.

அன்றாடம் பயன் படுத்தும் அத்தியா வசியப் பொருட்களில் ஒன்று காகிதம். காகித உற்பத்திக்காக மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுகின் றன.இதற்கு மாற்றாகக் கரும்புச் சக்கை உள்ளிட்ட கழிவுப் பொருட்களிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது.மற்றொரு பக்கம் பயன் படுத்தப்பட்ட உடைகள் மறுசுழற்சி செய்யப்படா மல் பெரும்பாலும் நிலத் தில் புதைக்கப்படுகின்றன அல்லது எரிக்கப்படுகின் றன. இதனால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறது. இப்படி வீணாக்கப்படுகின்ற துணிகளில் இருந்து பேப்பர் தயாரிக்கும் முறையை ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிரேஸ் தொழில்நுட்ப பல்கலை கண்டறிந்துள்ளது.முதலில், பருத்தித் துணிகள் சிறு துண்டுகளாக வெட்டப்படுகின்றன. பிறகு சில வேதிப்பொருட்கள் இவற்றுடன் கலக்கப்படுகின்றன.இதனால் துணியிலிருந்து பருத்தி இழைகள் தனியாகப் பிரிகின்றன. பிரியும் பருத்தி இழைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்துமுடிச்சு விழுந்து விடாத படி தனியாகச் சேகரிக்கப் படுகின்றன.இவ்வாறு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டதும் இவற்றை நேரடியாகக் காகித் உற்பத்திக்குப் பயன்படுத்த முடியும். இந்த காகிதங்கள் எழுது வதற்குப் பயன்படுபவை அல்ல. மாறாகப் பொட்ட லம் கட்டுவதற்கு (பேக்கே ஜிங்) பயனுள்ளவையாக இருக்கும்.இந்த வகையான காகிதங்கள் நல்ல அடர்த்தியானவை, எளிதில் கிழியாது. எனவே, பேக்கேஜிங்கில் உபயோகமாகும். அட் டைப் பெட்டிகள் செய்யவும் பயன்படுத்த முடியும். இந்த செயல்முறை வருங் காலத்தில் இன்னும் மேம் படுத்தப்படும். அப்போது வீணாகக் கொட்டப்படும் துணிக்கழிவுகள் முழுவதும் காகிதங்களாக மாற்றப்படும்.துணிகளில் உள்ள இழைகள் ஒட்டாமல் கிடைப்பதற்கு சில நொதிகள் உதவும். அவற்றைக் கண்டறியும் ஆராய்ச்சியில் ஆய்வாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Jul 05, 2025

ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்றால் உங்கள் வயதிற்கு ஏற்ப சரியான உடல் எடையில் இருப்பது அவசியம்.

  பெண்கள் அந்த வயதிற்கு குறிப்பிட்ட எடைக்கு கூடுதலாகவோ, குறைவாகவோ இருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்றால் உங்கள் வயதிற்கு ஏற்ப சரியான உடல் எடையில் இருப்பது அவசியம்.12 முதல் 14 வயது வரை உள்ள சிறுமிகள் 32-36/ கிலோ எடை இருக்க வேண்டும்.15 முதல் 20 வயதுடைய இளம் பெண்கள் 45-50 கிலோ எடையில் இருப்பது அவசியம்.21 முதல் 30 வயது வரை இளம் பெண்கள் 50-60 கிலோ எடையில் இருப்பது ஆரோக்கியமானதாகும்.31 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் 60-65 கிலோ எடையில் இருக்க வேண்டும்.41 முதல் 60 வயது முதிர்ச்சி அடையும் பெண்கள்தங்கள் உடலை  ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள 59- 63 கிலோ  எடை இருக்க வேண்டும்.பெண்களின் உடல் உயரத்தை பொறுத்து உடல் எடையின் அளவு மாறும்.கோடை வெயிலின் தாக்கம் இனி நாளுக்கு நாள் அதிகரிக்கும் எளிதில் நோய் தெற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Jul 05, 2025

விமானங்களின்  வகைகள்

விமானங்களில் சில வகை உள்ளன. ஆரம்பத்தில் பொதுப்போக்குவரத்து விமானங்கள் மணிக்கு 100 முதல் 350 மைல்கள் வரை மட்டுமே பறக்கும் திறன் வாய்ந்தவையாக இருந்தன. தற்போதுகூட இவை சிறிய ரக விமானம் என்ற அளவில் புழக்கத்தில் உள்ளன. வெளிநாடுகளில் பணக்காரர்கள் பயன்படுத்தும் 2 மற்றும் 4 இருக்கைகள் கொண்ட விமானங்கள் இந்த ரகத்தை சேர்ந்தவை. அடுத்ததாக, போயிங்-747 என்ற ரக விமானங்கள் சப்-சோனிக் விமானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மணிக்கு 350 முதல் 750 மைல்கள் வேகத்தில் பறக்கும். தற்போது புழக்கத்தில் உள்ள பல விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் இந்த வகையை சேர்ந்தவை.இந்த விமானங்களின் வேகம் ஒலியின் வேகத்தைவிட சற்று குறைவாகும். இதன் என்ஜின்கள் இலகு ரகத்தை சேர்ந்தவை என்றாலும், அதிக சக்தி வாய்ந்தவை. மற்றொரு வகை விமானங்கள் என்பது,கான்கார்டு எனப்படும் சூப்பர் சோனிக் விமானங்கள். இவை மணிக்கு 760 முதல் 3,500 மைல்கள் தொலைவை எட்டும். 760 மைல்கள் என்பது ஒலியின் வேகம். எனவே சூப்பர் சோனிக் விமானங்களால் ஒலியின் வேகத்தைவிட அதிக வேகத்தில் பறக்க முடியும். அடுத்ததாக, ஹைபர் சோனிக் ராக்கெட்டுகள். இவை மணிக்கு 3500 முதல் 7 ஆயிரம் மைல்கள் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தவை.

Jul 05, 2025

பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க பெருமளவு உதவும் சணல் பைகள்.

சணல் என்பது 'கோர் கோரஸ்' நார் இழைகளை கொண்ட தாவரம் ஆகும். சணல் இழைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த, செலவுகுறைந்த இயற்கை இழை ஆகும். சணல் இழையை பயன்படுத்தி பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில், சணல் பைகள் மிகவும் பிரபலமானவை. நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் காற்று ஊடுருவும் இயல்பு காரணமாக, பல்வேறு பொருட்களை கையாள உதவும் மிகச்சிறந்த தேர்வாக உள்ளது.பிளாஸ்டிக் பைகளால், நிலம், நீர் மாசுபடுகிறது. சுற்றுச்சூழலுக்கு மிகவும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது.பிளாஸ்டிக்பைகளுக்கு மாற்றாக மக்கள் பயன்பாட்டுக்கு உலக நாடுகள் பலவும் சணல் பைகளை முன்னிறுத்தி வருகின்றன. பிளாஸ்டிக் பைகள் மண்ணில் வீசப்படும் போது அவை மக்குவதில்லை. மேலும், பிளாஸ்டிக் கழிவு மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களை மடிந்து போக செய்வதுடன், மண் மலடாகும் நிலையும் உள்ளது. ஆனால், சணல் உடனே மக்கி உரமாகிவிடும். எனவே, கட்டுப்பாடற்ற பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க பெருமளவு சணல் பைகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். பொதுவாக, சணல் இந்திய துணைக்கண்டத்தில்தான் பெருமளவு பயிரிடப்படுகிறது. சணல் மூலம் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ற பைகளை உருவாக்கும்போது, உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.இதனால், இந்தியாவில் சணல் சாகுபடி செய்யும் பல லட்சம் விவசாயிகள் பொருளாதார வளர்ச்சியை எட்ட மிகப்பெரிய வாய்ப்பும்,சணல் பைகள் உற்பத்தி செய்யும் பல ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சணல் பயிர் வெறும் 4 மாதங்களில் விளைந்து அறுவடை பருவத்தை எட்டும். மிகக்குறைந்த நீர் போதும். உரத்துக்கான தேவையும் பெரிய அளவில் இருக்காது.

Jul 04, 2025

குகை ஓவியங்கள்.

எழுத்து, சொற்கள் இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்த ஆதிகால மக்கள், தங்கள் வாழ்க்கையை பதிவு செய்ய எந்த வழியும் இல்லாததால், அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிவதற்கு இன் றைய ஆராய்ச்சியாளர்களுக்கு கடினமாக இருந்து வருகிறது.இந்த நிலையில், பல்வேறு குகைகளில் கண்டறியப்பட்ட கற்கால கருவிகள், வாழ்விடங்கள். விலங் குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகள், குகைகளில் வரையப்பட்ட வரைபடங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களை ஒன்றாக இணைத்ததன் மூலம் எப்படி வாழ்ந்தார்கள் என்பது பற்றி ஓரளவு அறியமுடிகிறது.ஆதிமனிதர்கள் குகை பாறைகளை தங்கள் ஓவிய தளமாக பயன்படுத்திக் கொண்டனர். இந்தியாவில், பல்வேறு இடங்களில் குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.அதில், தமிழ்நாட்டில் இருக்கும் சித்தன்னவாசல் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. பறவைகள், விலங்குகள், மீன்கள் மற்றும் இயற்கையை மதிக்கும் மக்கள் குறித்த ஓவியங்களை அங்கு காணலாம்.தமிழ்நாட்டின் வேலூர் பகுதியில் அமைந்துள்ள ஆர்மமலை குகை ஓவியங்கள் 8-ம் நூற்றாண்டை சேர்ந்தவை. இந்த பாறை ஓவியங்கள், சமண துறவிகளால் உருவாக்கப்பட்டவை.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலையில் தற்போது, ஒரு குகையில் இரும்புக்கால பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.விலங்குகளின் மீது மனிதன் ஏறி ஆயுதங்களுடன் சண்டையிடும் காட்சிகள் வரையப்பட்டு இருக்கின்றன. ஒருவர் சிறுத்தையை ஆயுதத்தால் தாக்குவதையும், மக்கள் நடனமாடுவது, போர் வெற்றிகளை கொண்டாடுவது, ஒருவரை பல்லக்கில் சுமந்து செல்வது போன்றும் வரையப்பட்டு உள்ளது.

Jul 02, 2025

2,600 வகையான பனை மரங்கள் உள்ளன.

பனை குடும்பத்தில் உலகம் முழுவதும் 200 இனங்களை சேர்ந்த 2,600 வகையான பனை மரங்கள் உள்ளன. இதில், இந்தியாவில் சுமார் 106 இனங்கள் பரவியுள்ளன.இந்தியாவில் பனை குடும்ப மரங்கள் பயிரிடப்பட்ட வகை, அலங்கார வகை, காட்டு வகை என 3 குழுக்களாக வகைப்படுத் தப்படுகின்றன. பயிரிடப்படும் பனை மரங்களில், கோகஸ் நுசி பெரா என்ற தாவரவியல் பெயர் கொண்டதென்னை மரம் இளநீர், தேங்காய்களை தருவதால் 'சொர்க்கத்தின் அதிசய பனை' என அழைக்கப்படுகிறது.இதற்கடுத்து, நுங்கு பதநீர் தரும் போராசஸ் பிளாபெல்லிபர் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பனை மரங்கள் தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வ மரம் ஆகும். இந்தியாவில் 8½ கோடி பனை மரங்கள் உள்ளன, அவற்றில் 4 கோடி தமிழ்நாட்டில் உள்ளன. பனை மரத்தை கற்பகதரு என அழைப்பர். அலங்கார பனையில், கோதை பனை என்ற பனையின் இலைகளில் விசிறிகள், பாய்கள், குடைகள் ஆகியவை தயார் செய்யப்பயன்படுகின்றன. தாலிபோட் பனை என்பது பனை மரக்குடும்பத்திலேயே 100 அடி உயரம் தாண்டி வளரும் அற்புதமான மரம் ஆகும்.கூந்தபனை என்பது மேற்கு தொடர்ச்சி மலைகளின் பசுமையான காடுகளில் வளர்கிறது. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் யானையின் விருப்பமான உணவாகும். இவ்வாறு பனை என்பது உலக அளவில் அதிசயமாக கருதப்படுகிறது.

Jul 01, 2025

இந்திய யூட்யூபர்களுக்கு மூன்று ஆண்டுகளில் 21 ஆயிரம் கோடி வருமானம்.

 21 ஆயிரம் கோடி ரூபாய் இந்தியாவில் இருக்கும் யூட்யூப் க்ரியேட்டர்களுக்கு கடந்த3 ஆண்டுகளில் கொடுத்திருப்பதாக யூட்யூப் தெரிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் ஸ்மார்ட்போன் வசதியும், இணைய வசதியும் பெருகிவிட்ட நிலையில் பலரும் யூட்யூப் சேனல் தொடங்குவதை குடிசைத் தொழில் போல ஆரம்பித்து வருகிறார்கள். ஆரம்பத்தில் கல்வி, பொழுதுபோக்கு, சமையல் என ஒவ்வொரு துறை சார்ந்தும் சில சேனல்கள் செயல்பட்டு வந்தன. ஆனால் குறைந்த விலையில் மைக், கேமரா கிடைப்பதால் புற்றீசல் போல தினம்தோறும் ஆயிரக்கணக்கான யூட்யூபர்கள் இந்தியாவில் உருவாகி வருகின்றனர். இதில் பெரும்பாலும் ஃபுட் வ்லாக், ட்ராவல் வ்லாக் செய்பவர்களே அதிகம்.சமீபத்தில் இந்தியயூட்யூபர்களின்வருமானம்குறித்துபேசியயூட்யூப்சிஇஓநீல்மோகன், இந்தியாவில்இருக்கும்யூட்யூப்க்ரியேட்டர்கள், ஆர்ட்டிஸ்டுகள், மீடியாகம்பெனிகள்உள்ளிட்டவற்றிற்குகடந்த 3 ஆண்டுகளில்மட்டும்வருவாயாகரூ.21,000 கோடியைவழங்கியுள்ளதாககூறியுள்ளார். இதிலிருந்தேஇந்தியாவில்யூட்யூப்எவ்வளவுபெரியவருமானமாகஇருக்கிறதுஎன்பதுதெரியவருகிறது.ஆனால் இவற்றில் பெரும்பாலும் வருமானம் ஈட்டுபவர்கள் மீடியா கம்பெனிகளும், ஒரு சில இன்ப்ளூயன்சர்களும்தான். எந்த வித திட்டமிடலும் இல்லாமல் மனம் போன போக்கில் வீடியோ போடும் சேனல்கள் வருமானம் ஈட்ட முடியாமல் காணமல் போவதும் யூட்யூபில் அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Jun 30, 2025

புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பெண் ஒருவர் தனக்கு புற்றுநோய் இருப்பதை ஏஐ உதவியுடன் தெரிந்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவம், கல்வி, பொருளாதாரம் என பல துறைகளிலும் ,ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி தகவல் தொழில்நுட்ப துறை மட்டுமல்லாது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முன்பெல்லாம் ஏதாவது தகவல் தேட வேண்டியிருந்தால் கூகிளுக்கு செல்வதை தாண்டி, எல்லாமும் ஏஐயிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலை வந்துவிட்டது.சமீபத்தில் ஒரு பெண் சாட் ஜிபிடியிடம் பேசி தனக்கு கேன்சர் இருப்பதை கண்டறிந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரான்ஸை சேர்ந்த மார்லி என்ற பெண் சமீபமாக இரவில் அதிகமாக வியர்ப்பது, சருமத்தில் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து மருத்துவ பரிசோதனை செய்தபோதும் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அதன் பின்னர் அவர் இதுகுறித்து சாட்ஜிபிடியிடம் பேசியுள்ளார். அது வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் மருத்துவரை அணுகியபோது அவருக்குHodgkinLymphoma என்ற அரியவகை புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Jun 30, 2025

உலகின் மிக சோம் பேறியான விலங்கு என்று கருதப்படுவது 'ஸ்லாத்'.

உலகின் மிக சோம்பேறியான விலங்கு என்று கருதப்படுவது 'ஸ்லாத்'. தற்போது இவற்றில் இரண்டு இனங்கள் மட்டுமே உள்ளன. இதுவரை கிடைத்த இவற்றின் தொல் எச்சங்களை ஆராய்ந்த விஞ்ஞானிகள் 3.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆசிய யானை அளவு பெரிய ஸ்லாக்கள் வாழ்ந்துள்ளன என்கிறார்கள். இவை சராசரி யாக 3.63 டன் எடை கொண்டிருந்தனவாம்.

1 2 ... 96 97 98 99 100 101 102 ... 129 130

AD's



More News