தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே, தீயதை பேசாதே என்கிற கருத்துக்களை வலியுறுத்துகிற 3 குரங்கு பொம்மைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்த பொம்மைகள் ஒவ்வொன்றுக்கும் இருக்கக் கூடிய பெயர்களை அறிந்து கொள்வோம்!தீயதை பார்க்காதே என்று கண்களை மூடியிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மிசாரு. தீயதை கேட்காதே என்று காதுகளை மூடிக் கொண்டிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மிகாசாரு. தீயதை பேசாதே என்று வாயை பொத்தியிருக்கும் குரங்கு பொம்மையின் பெயர் மசாரு.
நாம் சமையலுக்கு எண்ணெயைத் தான் பயன்படுத்துகிறோம். நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவையே பிரதானமாக இருக்கின்றன. உலகின் பிற நாடுகளில் எண்ணெயை விட அதிகமாக வெண்ணெயே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சொல்லப்போனால் வெண்ணெய் தான் பல நேரங்களில் உணவின் சுவையைக் கூட்டுகிறது. ஆனால் இது ஆரோக்கியமானதா என்ற கேள்வி நீண்டகாலமாக இருந்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலைஉள்ளிட்ட சர்வதேச பல் கலைகள் இணைந்து ஒரு முக்கியமான ஆய்வை மேற்கொண்டன.2,21,054 பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர்.அவர்களுடைய 30 ஆண்டு மருத்துவ அறிக்கை பரிசோ திக்கப்பட்டது. அவர்கள் சமையலுக்குப் பயன்படுத்தியது வெண்ணெயா , எண்ணெயா என்பதும் கேட்டு அறியப்பட்டது.தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததில் யார் யாரெல்லாம் ஆலிவ், சோயா பீன்ஸ் முதலியவற்றில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தினார்களோ அவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படுகின்ற வாய்ப்பு 16 சதவீதம் ணந்து குறைவாக இருப்பது தெரிய வந்தது.அதேபோல யாரெல்லாம் வெண்ணெயைப் பயன் படுத்திச் சமைத்தார்களோ, அவர்களுக்கெல்லாம் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு 12 சதவீதம் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.எனவே ஒரு நாளில் நாம் பயன்படுத்தும் வெண்ணெயை வெறும் 10 கிராம் மட்டும் குறைத்துக் கொண்டு, அதற்குப் பதி லாக அதே 10 கிராம் அளவு தாவர எண்ணெய்களைப் பயன்படுத்தினால் பலவிதநோய்களிலிருந்து விடுபடலாம். இதனால் நமது ஆயுள் 17 சதவீதம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் தாவர எண்ணெய்களில் நிறைவுறாக் கொழுப்பு (Unsaturated fat) உள்ளது. வெண்ணெயில் நிறைவுற்றகொழுப்புகள் (Saturated fats) இருக்கிறது. இது ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட் ரால் அளவை அதிகரிக்கும். இதுவே இதய நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது. எனவே, தாவர எண்ணெய் வகைகளே சிறந்தவை என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.
பிரபஞ்சம் மிகவும் அதிசயமானது. நமது சூரியக் குடும்பத்தில் இருக்கின்ற எண்ணற்ற விஷயங்களையே இன்னும் முழுதாகக் கண்டுபிடிக்கப்பட வில்லை. பூமிக்கு இருக்கும் நிலவு ஒன்றுதான். நமது சூரிய குடும்பத்திலேயே மிக அதிகமான நிலவுகளைக் கொண்ட கிரகம் சனி. சமீபத்தில் சனி கோளைச் சுற்றி வரும் 128 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தைவான், கனடா, அமெரிக்கா பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தப் புதிய கோள்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சர்வதேச விண்வெளி ஒன்றியம் இந்தக் கண்டுபிடிப்பை மார்ச் 11ஆம் தேதி அங்கீகரித்துள்ளது.கனடா பிரான்ஸ் ஹவாய் டெலஸ்கோப் (சிஎஃப்ஹச்டி) எனும் தொலைநோக்கி கொண்டு சனிக்கோளை 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த ஆய்வில் 62 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல் அடுத்தடுத்த ஆண்டு களிலும் தொடர்ந்து சனிக்கோள் கண்காணிக்கப்பட்டு வந்தது. கண்டுபிடிக்கப்பட்ட நிலவுகளில் சில மிகவும் சிறியவை. சில கிலோமீட்டர் மட்டுமே அகலம் கொண்டவை. இவை பெரிய நிலவுகள் மோதிக் கொள்ளும்போது உடைந்து உருவான துகள்கள். இந்த ஆய்வு முடிவில் சனிக் கோளுக்கு மொத்தம் 274 நிலவுகள் உள்ளன என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலை மேற்கொண்ட ஆய் வில், நம் உடல்செல்கள்ஆரோக்கியமாகஇயங்க, மெதில் அடாப்டோஜென் எனும் சேர்மம் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மஞ்சள், பூண்டு, பொரி, ரோஸ்மேரி கிரீன் டீ ஆகிய உணவுகளில் அதிகமாக உள்ளது.
இயற்கையில் ஒவ்வோர் உயிரும் மற்றோர் உயிரைச் சார்ந்து தான் வாழ்கிறது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். விலங்குகள், தாவரங்கள் ஏதேனும் ஒரு வகையில் தங்களுக்குள் உதவிக் கொள்கின்றன. இதேபோல இரண்டு வெவ்வேறு விலங்குகள் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குள் உதவிக் கொள்ளும்.சமீபத்தில் வரிக்குதிரைகள் ஒட்டைச்சிவிங்கி களுக்கு இடையே இப்படியான நட்பு இருப்பது முதன்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள புல்வெளிகளில் வாழும் வரிக்குதிரைகள் இடையே ஓர் ஆய்வை உயிரியலாளர்கள் மேற் கொண்டார்கள். ஆறு வரிக்குதிரைகளின் கழுத்துகளில் வீடியோ கேமரா வைக்கட்டி வைத்தார்கள். இதன்மூலம் அவை எங்கெல்லாம் செல்கின்றன, எந்த விலங்குகளுடன் எல்லாம் ஒருங்கிணைந்து வாழ்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகளுடன் இணைந்து வரிக்குதிரைகள் புல் மேய்வது, தண்ணீர் குடிப்பதுமாக இருந்தது தெரிய வந்தது.ஆனால் இவற்றை விட அதிகமான நேரத்தை ஓட் டகச் சிவிங்கிகளுடன் தான் வரிக்குதிரைகள் செலவிட்டுள்ளன.ஏன் இந்த இரண்டு விலங்குகளுக்கு இடையே மட்டும் இப்படியான நெருக்கம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அப்போதுதான் இந்த விஷயம் தெரிய வந்தது. அதாவது ஒட்ட கச்சிவிங்கிகள் உயரமாக இருப்பதால் துாரத்தில் வரும் ஆபத்தை முதலி லேயே கண்டு உணர்ந்து எச்சரித்து விடுகின்றன.அதேபோல் வரிக் குதிரைகள் பொதுவாகக் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிவதால், எதிரி விலங்குகள் அவ்வளவு சுலபமாகத் தாக்க முற்படுவதில்லை.இதனால் இவற்றுடன் சேர்ந்திருக்கும் ஒட்டகச் சிவிங்கிகளும் பாதுகாப்பு பெறுகின்றன. இந்த வகையில் இரண்டு விலங்குகளும் ஒன்றுக்கொன்று உதவி வாழ்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது
உலகின் மிக ஒல்லியான கார் இத்தாலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பெயர் 'பிளான் பான்டா', சாதாரண கார்களை போல நான்கு சக்கரங்கள் உள்ளன. ஆனால் இதன் அகலம் வெறும் 50 செ.மீ., மட்டுமே. ஒருவர் மட்டுமே உட்கார்ந்து, அவரே ஓட்டிச் செல்லவும் வேண்டும். ஓட்டுநர் இருக்கையின் இருபுறமும் கதவு உள்ளது. பின்புறம் சிறிய இடம் மட்டுமே உள்ளது. மின்சாரத்தில் இயங்கும். இதன் எடை 264 கிலோ. உயரம் 145 செ.மீ. நீளம் 340 செ.மீ. இது மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் தான் செல்லும். இது விற்பனைக்கு அல்ல என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலைNH 44 மிக நீளமானது, மொத்த நீளம் சுமார்4,112 கிலோமீட்டர்கள். இருப்பினும், உலகின் மிக நீளமான சாலையைப் பற்றிப் பேசும்போது,அதன் நீளம் மிக அதிகமாக இருப்பதால், ஒரு நாளைக்கு500 கிலோமீட்டர் வேகத்தில் சென்றாலும், அதை முடிக்க இரண்டு மாதங்களுக்கும் மேலாகும். இந்தச் சாலை, ஒரு யூடர்ன் கூட இல்லாமல் மொத்தம்14 நாடுகளைக் கடந்து செல்கிறது. பான்அமெரிக்கன் நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும், இந்த சாலை அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாதை வட அமெரிக்காவை தென் அமெரிக்காவுடன் இணைக்கிறது. இது வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ப்ருதோ விரிகுடாவில் தொடங்கி அர்ஜென்டினாவின் உஷுவாயா நகரில் முடிகிறது. ஒட்டுமொத்தமாக, இதன் நீளம் 30,600 கிலோமீட்டர்கள் அல்லது 19,000 மைல்கள்..பான்அமெரிக்கன் நெடுஞ்சாலை என்பது கனடா, அமெரிக்கா, மெக்சிகோ, குவாத்தமாலா, பனாமா, கொலம்பியா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, ஈக்வடார், பெரு, சிலி மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட மொத்தம் 14 நாடுகளின் வழியாகச் செல்லும் ஒரு சாலையாகும். இது வெறும் சாலை அல்ல; இது பல்வேறு நாடுகளின் பாரம்பரியத்தையும் வாழ்க்கை முறையையும் இணைக்கும் ஒரு வரலாற்று மற்றும் கலாச்சாரப் பயணமாகும். இந்த நெடுஞ்சாலையைப் பராமரிப்பது அமெரிக்காவின் பொறுப்பு மட்டுமல்ல; அது கடந்து செல்லும்14 நாடுகளும் அதன் பராமரிப்பில் பங்கேற்கின்றன.இந்தப் பாதையில் பயணிக்கும்போது,எல்லா வகையான இயற்கைக் காட்சிகளையும், சில சமயங்களில் பாலைவனங்களையும், சில சமயங்களில் உயர்ந்த மலைகளையும், அடர்ந்த காடுகளையும், சில சமயங்களில் கடலின் கரைகளையும் காண முடிகிறது. பயணம் மிகவும் அழகாக இருப்பதால், பயணம் எப்படி செல்கிறது என்பதை நீங்கள் உணரவே மாட்டீர்கள்பான்..அமெரிக்க நெடுஞ்சாலையின் கட்டுமானம்1920களின் முற்பகுதியில் தொடங்கியது. அமெரிக்காவில் சுற்றுலாவை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். 1937 ஆம் ஆண்டில், இந்த சாலையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக 14 நாடுகளும் பரஸ்பர உடன்பாட்டை எட்டின, இறுதியாக இது 1960 இல் பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் ரயில் சேவைகளை ஒரே செயலியில் ஒருங்கிணைக்கும் விதமாக ரயில்வே துறைRailOne செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.புறநகர் ரயில்களுக்கு டிக்கெட் புக் செய்யUTS செயலி, வெளியூர் முன்பதிவுகளுக்குIRCTC,RailConnect என ஒவ்வொன்றுக்கும் பல செயலிகள் பயன்படுத்த வேண்டியிருந்த நிலையில் தற்போது அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து RailOne செயலி அறிமுகமாகியுள்ளது. இதை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். Rail One செயலியில் உள்ள வசதிகள்:முன்பதிவு டிக்கெட்டுகள், முன்பதிவில்லா டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளும் வசதிரயில் வந்து சேரும் நடைமேடை எண், கோச் வரிசை, ட்ராக்கிங், பிஎன்ஆர் நிலை சரிபார்த்தல் உள்ளிட்ட வசதிகள்பயண திட்டமிடுதல், ரயில் சேவை உதவி எண்கள் மற்றும் விவரங்கள்ரயிலில் உணவு முன்பதிவு செய்தல், ஆன்லை ஆர்டர் செய்யும் வசதிரயில் டிக்கெட்டுகளை யுபிஐ, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி பெறும் வசதிரயில்வே இ வாலெட்டில் பணத்தை சேமித்து வைத்துக் கொண்டு எளிதாக டிக்கெட் புக் செய்யும் வசதிMPIN மற்றும் பயொமெட்ரிக் லாக் இன் வசதிகள், கெஸ்ட் லாக் இன் வசதிகள்.
இந்தியாவிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்பட்ட இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள், ஜூலை 8-ஆம் தேதி சந்தையில் ,நோவா 5ஜி மற்றும் நோவா பிளஸ்4ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்கள், உள்நாட்டுத் தயாரிப்பாக மட்டுமன்றி, உலக சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.இரண்டு மாடல்களுமே அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சங்களுடன் வரவிருப்பதுடன், அவற்றின் விலை ₹5,000-லிருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நோவா 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:செயலி: யூனிசோக் T8200 புராசஸர். இயங்குதளம்: நெக்ஸ்ட் குவான்டம் ஓஎஸ் (Next Quantum OS). கேமரா: பின்புறத்தில் இரட்டை 50MP கேமரா அமைப்பு. பேட்டரி: 5000mAh பேட்டரி திறன். நினைவகம்: 6GB ரேம் (உள் நினைவகம்), 128GB சேமிப்புத் திறன். விரிவாக்கக்கூடிய நினைவகம்: 1TB வரை மெமரி கார்டு மூலம் விரிவாக்கம் செய்யலாம். நிறங்கள்: கருப்பு, நீலம், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். நோவா பிளஸ் 4ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: செயலி: யூனிசோக் T7250 புராசஸர். கேமரா மற்றும் பேட்டரி: நோவா 5ஜி மாடலில் உள்ள அதே பேட்டரி மற்றும் கேமரா அம்சங்கள். இயங்குதளம்: நெக்ஸ்ட் குவான்டம் ஓஎஸ் (Next Quantum OS). இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன், இந்தத் தொழில்நுட்பத்தின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு என்பது தவறு செய்யவே செய்யாது என்றில்லை என்றும், அது தவறான தகவல்களையும், கணிக்க முடியாத முடிவுகளையும் உருவாக்கக்கூடியதே என்றும் ஆல்ட்மன் தெளிவாக விளக்கினார். எனவே அதை முழு அளவுக்கு மக்கள் நம்ப வேண்டாம்" என்று அவர் கேட்டுக்கொண்டார். சாட்ஜிபிடிக்கு சொந்தமான நிறுவனத்தின் தலைவரே இப்படிப் பேசியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. "மக்கள் சாட்ஜிபிடி மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஆனால், அவ்வாறு செய்யாதீர்கள். ஏனென்றால், செயற்கை நுண்ணறிவும் தவறுகளை செய்யும்" என்று அவர் நேரடியாகவே தெரிவித்துள்ளார்.சாட்ஜிபிடி எங்கள் தயாரிப்பாக இருந்தாலும் குறித்து சில உண்மைகளை நேர்மையாக பேச வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. தற்போதைய தொழில்நுட்பத்தின் உண்மை தன்மை என்பது மிக சிறப்பானது அல்ல" என்றும் அவர் கூறினார்.