2030-க்குள் இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள் மற்றும் வாகன உதிரிபாகங்களை மறுசுழற்சி செய்யும் (Recycling) தொழில், எதிர்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகளில் ஒன்றாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
பற்பசை மற்றும் பழைய டூத் பிரஷ் கொண்டு மெதுவாக தேய்த்தால் சிறிய கறைகள் நீங்கும். பேக்கிங் சோடா மற்றும் வினிகர் கலவையை பயன்படுத்தி பிடிவாதமான அழுக்குகளை அகற்றலாம். கழுவிய பிறகு நேரடி வெயிலில் அல்லாமல் நிழலில் உலர்த்துங்கள். ஷூவின் உள்ளே செய்தித்தாள் வைத்து உலர்த்தினால் ஈரப்பதம் விரைவில் குறையும். புதிய ஷூவுக்கு Water & Stain Protector Spray பயன்படுத்தினால் அழுக்கு ஒட்டுவது குறையும். கறைகள் பட்டவுடன் உடனே சுத்தம் செய்வது நல்லது. பயன்படுத்தாத நேரங்களில் ஷூவை பை அல்லது பெட்டியில் வைத்து பாதுகாத்தால் நீண்ட நாள் நீடிக்கும்.
2026-ல் ஓய்வுபெற்றோருக்கு பாதுகாப்பான முதலீடு, நிலையான வருமானம் மற்றும் நல்ல வருவாய் தரும் அரசு திட்டங்கள், வங்கி FD-கள் மற்றும் குறைந்த ஆபத்து முதலீடுகள் சிறந்த தேர்வுகளாக உள்ளன.முதலீட்டிற்கு முன் கவனிக்க வேண்டியவை:உயில் (Will) தயாரித்து சொத்து உரிமையை தெளிவுபடுத்துதல்.போதுமான மருத்துவக் காப்பீடு பெற்று மருத்துவச் செலவுகளிலிருந்து பாதுகாப்பு பெறுதல். குறைந்தது 18 மாத செலவுக்கான அவசர நிதியை எளிதில் பணமாக்கக்கூடிய FD போன்ற திட்டங்களில் வைத்திருத்தல்.
இரண்டாம் உலகப்போரின் போது அவசர காலத்தில் குளுக்கோஸ் தட்டுப்பாடு ஏற்பட்டதால், உடைக்கப்படாத இளநீரின்இயற்கையான தூய்மையை நம்பி, காயமடைந்த வீரர்களுக்கு அதை நேரடியாக ஐவி திரவமாக நரம்பில் செலுத்தி மருத்துவர்கள் ராணுவ வீரர்களின் உயிரைக் காப்பாற்றினர்!
ரயில் பயணிகளுக்காக மேம்படுத்தப்பட்ட புதிய IRCTC இணையதளம் வரும் 15-ஆம் தேதி அறிமுகமாகிறது. இதன் மூலம், தட்கல் உள்ளிட்ட ரயில் டிக்கெட்டுகளை விரைவாக முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே தெரிவித்துள்ளது.புதிய அமைப்பில், நிமிடத்திற்கு 32 ஆயிரமாக இருந்த முன்பதிவு திறன் 1.5 லட்சமாக அதிகரிக்கிறது. மேலும், முன்பதிவின்போது CAPTCHA சரிபார்ப்பு தேவையில்லை. பயணிகள் உதவிச் சேவைகளையும் அதிகளவில் ஒரே நேரத்தில் பெறும் வகையில் தளம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் வலுவான வருவாய் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டைவிட 27% உயர்ந்து ரூ.1,910 கோடியாக உள்ளது. மேலும், 5 புதிய எரிவாயு நிலையங்கள் தொடங்கப்பட்டதால் மொத்த வலையமைப்பு 707 நிலையங்களாக விரிவடைந்துள்ளது. வீட்டு PNG இணைப்புகள் 11.14 லட்சமாகவும், தொழில் மற்றும் வணிக இணைப்புகள் 10,422 ஆகவும் உயர்ந்துள்ளன.அதானி பவர்: முதல் காலாண்டில் ரூ.4,866 கோடி நிகர லாபம்.அதானி பவர் நிறுவனம் 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் வலுவான நிதி செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது.ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 47.2 சதவீதம் உயர்ந்து ரூ.4,866.60 கோடியாக பதிவாகியுள்ளது.
செவ்வாய் கோளில் பவளப்பாறையை ஒத்த அமைப்புடைய பாறை ஒன்றை நாசாவின் கியூரியாசிட்டி (Curiosity) ஆய்வு ஊர்தி கண்டறிந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் நீர் ஓடியிருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரமாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.பூமிக்கு அடுத்துள்ள கோள்களில் செவ்வாய், ஆராய்ச்சிக்குப் பொருத்தமான சூழலைக் கொண்டிருப்பதால், பல ஆண்டுகளாக உலக நாடுகள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாசா 2011-ஆம் ஆண்டு கியூரியாசிட்டி ஆய்வு ஊர்தியை செவ்வாய்க்கு அனுப்பியது. தற்போது அது கேல் (Gale) பள்ளத்தில் கற்கள் மற்றும் மண் மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறது.அண்மையில் பதிவு செய்யப்பட்ட படங்களில், பவளப்பாறையைப் போன்ற தோற்றமுடைய பாறை அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் விளக்கப்படி, பண்டைய காலத்தில் நீர் பாறைகளின் மீது ஓடியதால் உருவான தடங்கள், பின்னர் நீர் வற்றிய பிறகும் நீடித்து இருக்கலாம். காலப்போக்கில் சுற்றியுள்ள மண் மற்றும் மென்மையான பாறைகள் காற்றால் அரிக்கப்பட்டாலும், உறுதியான பகுதிகள் மட்டும் எஞ்சுவதால் இவ்வாறான வடிவங்கள் உருவாகின்றன.பூமியிலும் இதுபோன்ற பாறை அமைப்புகள் காணப்படுவதால், இந்தக் கண்டுபிடிப்பு செவ்வாயின் புவியியல் வரலாற்றை புரிந்துகொள்வதற்கும், அங்கு நீர் இருந்ததற்கான ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
HUAWEI நிறுவனம் தனது புதியFreeClip 2 S ஓப்பன்-இயர் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 10.8mm டூயல் டிரைவர், AI நாய்ஸ் கேன்சலேஷன், Bluetooth 6.0 மற்றும் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை இணைக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரமும், சார்ஜிங் கேஸுடன் மொத்தம் 38 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும். IP57 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் வசதியுடன், இதன் விலை சுமார் ரூ.21,273 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, LIC மற்றும் செயலற்ற EPF கணக்குகளில் மொத்தம் ரூ.16,649.06 கோடி வரை கோரப்படாமல் உள்ளது. LIC வாடிக்கையாளர்கள், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர், பிறந்த தேதி அல்லது PAN எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு நிலுவைத் தொகை உள்ளதா என்பதை அறியலாம். தேவையான ஆவணங்கள் மற்றும் வங்கி NEFT விவரங்களை சமர்ப்பித்து அந்தத் தொகையை பெறலாம். மேலும், ஆதாருடன் இணைக்கப்பட்ட ரூ.1,000 அல்லது அதற்கும் குறைவான செயலற்ற EPF கணக்குகளில் உள்ள தொகையை, தனியாக கோரிக்கை அளிக்காமலேயே வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் திட்டத்திற்கும் EPFO ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டம் பின்னர் அதிக இருப்புத் தொகை கொண்ட கணக்குகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
Bowerbird இனத்தில், ஆண் பறவை தனது உடல் வலிமையையோ அல்லது தோற்ற அழகையோ காட்டி பெண் பறவையை ஈர்க்காது.அதற்குப் பதிலாக, பல வாரங்கள் உழைத்து "Bower" எனப்படும் சுரங்க வடிவிலான அழகிய காதல் அரங்கத்தை உருவாக்குகிறது. அதன் முன்புறத்தை நீல நிற பெர்ரிகள், மலர்கள், இறகுகள் மற்றும் வண்ணமயமான பொருட்களால் கலைநயத்துடன் அலங்கரிக்கிறது.இந்த அலங்காரத்தின் நேர்த்தி, படைப்பாற்றல் மற்றும் அமைப்பை பெண் Bowerbird கவனமாக மதிப்பீடு செய்கிறது. அந்தக் கலைநயம் கவர்ந்தால் மட்டுமே, அந்த ஆண் பறவையைத் தனது துணையாகத் தேர்வு செய்கிறது.