25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 13, 2026

மகிழ்ச்சியை அதிகரிக்கும் 4 ஹார்மோன்கள்... இயற்கையே சிறந்த மருந்து!

நாம் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும், மன அமைதியுடனும் இருப்பதற்கு உடலில் சுரக்கும் சில ஹார்மோன்கள் முக்கிய காரணமாகின்றன. இவை "மகிழ்ச்சி ஹார்மோன்கள்" (Happy Hormones) என்றும் அழைக்கப்படுகின்றன.டோபமைன் (Dopamine):இலக்குகளை அடையும் உற்சாகத்தையும், கற்றல் திறனையும், நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.செரோடோனின் (Serotonin):மனநிலையை சமநிலைப்படுத்தி, தூக்கம், பசி மற்றும் செரிமானத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.ஆக்ஸிடோசின் (Oxytocin):"காதல் ஹார்மோன்" என்று அழைக்கப்படும் இது, அன்பு, நம்பிக்கை மற்றும் மனித உறவுகளை வலுப்படுத்துகிறது.என்டோர்பின் (Endorphin):இயற்கையான வலி நிவாரணியாக செயல்பட்டு, மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியை அளிக்கிறது.இந்த ஹார்மோன்களை இயற்கையாக அதிகரிப்பது எப்படி?தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள்.மரங்கள் நிறைந்த பசுமைச் சூழலில் நேரம் செலவிடுங்கள்.உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கத்தைப் பின்பற்றுங்கள்.குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுங்கள்.ஆய்வுகளின்படி, மரங்கள் வெளியிடும் 'பைட்டான்சைடுகள்' (Phytoncides) என்ற இயற்கை வேதிச்சேர்மங்கள் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரப்பதை ஊக்குவிக்கின்றன. அதனால்தான் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களில் பசுமைச் செடிகளை வளர்க்க மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.இயற்கையுடன் நெருக்கமாக வாழ்வது, உடல் ஆரோக்கியத்திற்கும் மன அமைதிக்கும் எளிமையான, ஆனால் பயனுள்ள வழியாகும்.

Aug 13, 2026

மீன்கள் நீருக்குள் எப்படி சுவாசிக்கின்றன?

மனிதர்கள் காற்றில் உள்ள ஆக்சிஜனை நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றனர். நுரையீரலில் உள்ள 'அல்வியோலி' (Alveoli) எனப்படும் நுண்ணிய காற்றுப் பைகளே ஆக்சிஜனை உறிஞ்சி, அதை இரத்தத்தின் மூலம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்புகின்றன. ஆனால், இந்த அமைப்பால் தண்ணீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை நேரடியாகப் பிரித்தெடுக்க முடியாது. அதனால்தான் மனிதர்களால் நீருக்குள் நீண்ட நேரம் சுவாசித்து வாழ இயலாது.மீன்களின் சுவாச முறை இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அவை தண்ணீரை வாயின் வழியாக உள்ளே இழுத்து, அதை செவுள்கள் (Gills) வழியாக செலுத்துகின்றன. செவுள்களில் உள்ள மெல்லிய திசுக்கள் தண்ணீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை உறிஞ்சி, அதை இரத்தத்தின் மூலம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்புகின்றன.இதன் பின்னர் ஆக்சிஜன் குறைந்த நீர் செவுள்கள் வழியாக வெளியேற்றப்படுகிறது. இந்தச் செயல்முறையால்தான் மீன்கள் நீருக்குள் சுவாசித்து உயிர்வாழ முடிகிறது. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனை திறம்பட பயன்படுத்தும் இந்தச் செவுள் அமைப்பே, மீன்களின் வாழ்வின் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது.

Aug 13, 2026

WhatsApp-ல் Username வசதி விரைவில்.

WhatsApp-ல், தொலைபேசி எண்ணை பகிராமல் Username மூலம் உரையாடும் புதிய வசதி சோதனை கட்டத்தில் உள்ளது.இந்த அம்சம் அறிமுகமான பிறகு, பயனர்கள் தனிப்பட்ட Username-ஐ உருவாக்கி பயன்படுத்த முடியும். Block மற்றும் Report போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழக்கம்போல தொடரும்.

Aug 13, 2026

எலுமிச்சை தோல் கொண்டு இயற்கை கிளீனர் செய்வது.

தேவையான பொருட்கள்  - எலுமிச்சை தோல் 5 முதல் 6 பழங்களின் தோல் தண்ணீர் தேவையான அளவு பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன் ஷாம்பூ 2 டேபிள்ஸ்பூன் ஸ்ப்ரே பாட்டில் -1 செய்முறை  -   எலுமிச்சை தோல்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்த பிறகு, அந்த தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். வேகவைத்த  எலுமிச்சை தோல்களை  ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டி வைத்துள்ள எலுமிச்சை தண்ணீருடன் சேர்த்து சுலக்கவும். இதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள்ஸ்பூன் ஷாம்பூ சேர்த்து நன்றாக கலக்கவும். இறுதியாக இந்த கலவைைய மீண்டும் வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றினால் இயற்கையான கிளீனர் தயாராகிவிடும்.பயன்படுத்தக்கூடிய இடங்கள் - சமையலறை மேசை, கேஸ் அடுப்பு, சிங்க், டைல்ஸ், ஸ்டீல் பொருட்கள்.குறிப்பு - பயன் படுத்தும் முன் ஸ்பிரே பாட்டிலை லேசாக குலுக்கி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

Aug 12, 2026

கடன் இல்லாத வாழ்க்கை.

1 இருக்கும் கடன்களை list போடுங்கள் - எந்த  கடனுக்கு அதிக interest என்று தெரிஞ்சுக்கோங்க 2 அதிக interest கடனை முதலில் தீர்க்க முயற்சி பண்ணுங்கள் 3.Credit card- minimum payment மட்டுமே  பண்றது trap - full amount pay பண்ணுங்கள். 4 புதிய கடன் எடுக்கும் முன் "இது அவசியமா? என்று 3 முறை யோசியுங்கள் 5 Emergency fund இல்லாமல் போனால்தான் கடன் வாங்க வேண்டியதாகிறது-முதலில் அதை உருவாக்குங்கள் 6 ஒவ்வொரு மாதமும் கடனுக்கு extra payment. பண்ண முயற்சி பண்ணுங்கள் 7.கடன் தீர்ந்தவுடன் அந்த EMI amount-ஐ savings-ஆக மாற்றுங்கள்.

Aug 12, 2026

உறவுகள் எல்லாம் நிரந்தரம் அல்ல...

நம்மிடம் எதிர்பார்ப்போ, தேவையோ இல்லாதபோது சில உறவுகள் தாமாகவே விலகிவிடும். அப்போது உறவின் உண்மையான மதிப்பு புரியும்.ஒரு மருமகள் மாமியாரை எவ்வளவு அன்புடன் கவனித்தாலும், பெற்ற மகளின் பாசத்துடன் அவளை ஒப்பிடுவது பல குடும்பங்களில் இன்னும் தொடர்கிறது.வயதான பெற்றோர், தங்களை பாதுகாப்பாகவும் வசதியாகவும் கவனித்துக் கொள்ளும் பிள்ளைகளுடன் இருக்கவே அதிகம் விரும்புகிறார்கள்.மனைவி, குழந்தைகளுக்காக நாம் வாழ்க்கை முழுவதும் செய்த தியாகங்கள், ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இயல்பான விஷயமாகத் தோன்றிவிடலாம். அப்போது “எங்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்ற கேள்வியும் வரலாம்.வயது அதிகரிக்கும்போது உடல்நலம், தனிமை, பிறரைச் சார்ந்திருக்கும் நிலை போன்றவை வாழ்க்கையை கடினமாக்கலாம். அதனால் வயதை எண்ணுவதைக் காட்டிலும், முதுமையை சுயமரியாதையுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதே முக்கியம்.எல்லா உறவுகளையும் ஒரே அளவுகோலில் பார்க்க முடியாது. பிறந்த உறவுகளைத் தாண்டி, உண்மையான அன்பும் மரியாதையும் கொண்டவர்களே வாழ்க்கையில் நமக்கு சகோதரர், சகோதரி போன்ற உறவாக மாறுகிறார்கள்.வாழ்க்கையில் நமக்கு தோள் கொடுப்பவர்களை விட, நம் காலைவார நினைப்பவர்களையும் சந்திக்க நேரிடலாம். ஆனால் அவர்களை நினைத்து வருந்துவதைவிட, நம்முடன் உண்மையாக நிற்பவர்களை அடையாளம் கண்டு மதிப்பதே புத்திசாலித்தனம்.உறவுகள் எல்லாம் நிரந்தரம் அல்ல...உண்மையான அன்பும் நம்பிக்கையும் கொண்ட உறவுகளே வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம்!

Aug 12, 2026

பெண்கள் பாதுகாப்பு: வைரலாகும் காவல்துறை தகவல் உண்மையா?

வாகன பதிவு எண்ணை குறிப்பிட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பினால் காவல்துறை GPS மூலம் கண்காணிக்கும் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.ஆனால், இது தமிழ்நாடு காவல்துறையின் தற்போதைய அதிகாரப்பூர்வ சேவையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அவசரநிலையில் 112 என்ற அவசர உதவி எண்ணையோ அல்லது அதிகாரப்பூர்வ காவல்துறை சேவைகளையோ பயன்படுத்துவது பாதுகாப்பானது.

Aug 11, 2026

அரசுப் பள்ளி மாணவிக்கு விண்வெளி வாய்ப்பு'மிஷன் சக்திசாட்'க்கு தேர்வு.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது அரசுப் பள்ளி மாணவியான கண்டூலா ஜெஸ்ஸி, உலகின் முதல் பெண்களுக்கான நிலவு கியூப்சாட் திட்டமான 'மிஷன் சக்திசாட்'திட்டத்தில் இந்தியாவிலிருந்து தேர்வான 20 மாணவர்களில் ஒருவராக இடம்பிடித்துள்ளார்.தச்சரின் மகளான ஜெஸ்ஸி, 108 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலுடன் பயிற்சி பெற்று, மாணவர்கள் உருவாக்கும் நிலவு செயற்கைக்கோள் திட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

Aug 11, 2026

குறைந்த பிரீமியத்தில் ரூ.15 லட்சம் வரை விபத்துக் காப்பீடு.

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB), பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த கட்டணத்தில் விபத்துக் காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது.ஆண்டுக்கு ரூ.520, ரூ.555 அல்லது ரூ.755 பிரீமியம் செலுத்தி, முறையே ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெறலாம். 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

Aug 11, 2026

4K ப்ரொஜெக்டருக்கு அதிரடி சலுகை.

அமேசானில் WZATCO Yuva Horizon 4K Projector தற்போது 58% தள்ளுபடியில் ரூ.24,990-க்கு விற்பனையாகிறது. மேலும் ரூ.500 வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.1,000 கூப்பன் சலுகையும் வழங்கப்படுகிறது.இந்த ப்ரொஜெக்டரில் 1080p Full HD, 4K ஆதரவு, HDR10+, 1500 ANSI Lumens, Google TV OS, Netflix உள்ளிட்ட OTT செயலிகள், Dolby Surround Sound, Wi-Fi 6 மற்றும் Bluetooth போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 129 130

AD's



More News