போட்டி விவரம்: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே பெண்கள் அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி (வதோதரா, கோடாம்பி மைதானம்).போட்டி நிகழ்வுகள்:டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது.கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் விளாசினர்.முடிவு: 329 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி, 48.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.வெற்றி விபரம்: இந்திய பெண்கள் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடர்.இறுதிப்போட்டி (பெண்கள் ஒற்றையர்):இந்தியாவின் பி.வி. சிந்து (உலகின் 'நம்பர்-11') ↔ தென் கொரியாவின் ஆன் சே-யங் (உலகின் 'நம்பர்-1').போட்டி முடிவு: 1 மணி நேரம் 1 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான போட்டியில் சிந்து 21-16, 11-21, 12-21 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வியடைந்து 2-வது இடம் (வெள்ளி) பிடித்தார்.
துளசிமதி பிரமாதம்: 3 பதக்கங்களை வென்று அசத்தல்.பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளின் பாட்மின்டன் பிரிவில் தமிழக வீராங்கனை துளசிமதி, ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.பெண்கள் இரட்டையர் பிரிவு: இந்தியாவின் துளசிமதி - மானசி ஜோடி, சீனாவின் யாங் கியூஜியா - ஜியாவோ ஜுஜியான் ஜோடியை எதிர்கொண்டது. இதில் துளசிமதி - மானசி ஜோடி 21-16, 21-13 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றது.பெண்கள் ஒற்றையர் பிரிவு (SU5): இப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி, சீனாவின் யாங் கியூஜியாவிடம் 18-21, 11-21 என்ற செட்களில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு (SL4)இறுதிப்போட்டியில் இந்தியாவின் நவீன் சிவகுமார், இந்தோனேஷியாவின் பிரெடி செடியவானை எதிர்கொண்டார். இதில் நவீன் 21-9, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு (SL3)இந்திய வீரர்கள் பிரமோத் பகத் - நிதேஷ் குமார் மோதிய இறுதிப்போட்டியில், நிதேஷ் 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இதன் மூலம் வெள்ளி வென்ற பிரமோத் பகத்திற்கு 'ஹாட்ரிக்' தங்கம் வெல்லும் வாய்ப்பு கைநழுவியது.பெண்கள் ஒற்றையர் பிரிவு (SH6)இறுதிப்போட்டியில் இந்தியாவின் நித்யா ஸ்ரீ சுமதி சிவன், சீனாவின் பெங்மெய் லியிடம் 12-21, 13-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றினார்.
தடகளப் போட்டிஆண்களுக்கான 400 மீ. ஓட்டப் பந்தயத்தில் (T64), பந்தய இலக்கை 52.28 வினாடிகளில் கடந்து இந்தியாவின் சந்தீப் உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரரான அஜய் குமார் (53.61 வினாடி) வெண்கலப் பதக்கம் வென்றார்.ஈட்டி எறிதல் போட்டிஆண்கள் பிரிவு (F37/38): இந்தியாவின் ஹனி அதிகபட்சமாக 60.49 மீ. தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.ஆண்கள் பிரிவு (F42-44/F61-64): இந்தியாவின் சுமித் அன்டில் 72.46 மீ. தூரம் எறிந்து தங்கம் வென்றார். இப்போட்டியில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான மஹேந்திரா குர்ஜார் (59.03 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும், சந்திப் சஞ்சய் சர்கார் (64.48 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.நீளம் தாண்டுதல் & ஓட்டப்பந்தயம்பெண்கள் நீளம் தாண்டுதல் (T47): இந்தியாவின் நிமிஷா 5.37 மீ. தூரம் தாண்டி 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.ஆண்கள் 1500 மீ. ஓட்டம் (T46): இந்தியாவின் பிரமோத், இலக்கை 4 நிமிடம் 09.65 வினாடிகளில் கடந்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.வில்வித்தை போட்டிஆண்கள் இரட்டையர் (ரிகர்வ் பிரிவு): இந்தியாவின் ஹர்விந்தர் சிங் - விஜய் சண்டி ஜோடி 5-1 என்ற கணக்கில் சீனாவின் டுயோ யுன் - லிக்யு ஜாவோ ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது.பெண்கள் இரட்டையர் பிரிவு: இந்தியாவின் பாவ்னா சவுத்ரி - பூஜா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே பெண்கள் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.குஜராத், வதோதராவில் உள்ள கோடாம்பி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி கேப்டன் நோம்வெலோ சிபாண்டா பேட்டிங்கை தேர்வு செய்தார்.ஜிம்பாப்வே இன்னிங்ஸ்: 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 197 ரன்கள் எடுத்தது.இந்திய இன்னிங்ஸ்: 198 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 27.1 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில், ஆண்களுக்கான தனிநபர் 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்' பிரிவில் இந்தியாவின் உதய்வீர் சித்து 240.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
நியூசிலாந்து சென்று உள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225/4 ரன் குவித்தது. கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு 'சேட்டன்' சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா கலக்கல் துவக்கம் தந்தனர்.இந்திய அணி 19.4 ஓவரில் 230/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இரண்டாவது 'டி-20' போட்டி நாளை (அக். 24) கிறைஸ்ட்சர்ச்சில் நடக்க உள்ளது.
ஜப்பானின் அய்ச்சி -நகொயாவில், மாற்றுத் திறனாளிகளுக்கான 'பாரா' ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 168 பேர் பங்கேற்று உள்ளனர்.வில்வித்தை.நேற்று வில்வித்தை காம்பவுண்டு பிரிவில் போட்டிகள் நடந்தன. கலப்பு அணிகளுக்கான பிரிவில் இந்தியாவின் 19 வயது, இரு கைகள் இல்லாத வீராங்கனை ஷீத்தல் தேவி, தோமன் குமார் ஜோடி களமிறங்கியது. நேற்று நடந்த பைனலில் இந்தோனேஷியாவின் ஆயுதியா, கென் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 151-148 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது.தடகளம்.நீளம் தாண்டுதல்: பாரா ஆசிய விளையாட்டு தடகளத்தில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் ('டி 44/62/64') போட்டி நடந்தது. இந்தியா சார்பில் தமிழகத்தின் சோலைராஜ் தர்மராஜ் (32) பங்கேற்றார். இவர் இரண்டாவது வாய்ப்பில் 7.15 மீ. நீளம் தாண்டி, புதிய ஆசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.400 மீ. ஓட்டம் (ஆண்கள்): ஆண்களுக்கான 400 மீ. 'டி 47' ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் களமிறங்கிய திலிப் காவிட், 48.27 வினாடியில் வந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.400 மீ. ஓட்டம் (பெண்கள்): பெண்களுக்கான 400 மீ. 'டி 47' பிரிவு ஓட்டத்தில் இந்தியாவின் அஞ்சனாபென் (59.97 வினாடி) தங்கம் வென்றார்.உயரம் தாண்டுதல்.ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 'டி 63' பிரிவில் இந்தியா சார்பில் ஷைலேஷ் குமார், ராகுல் சரோஹா, வருண் சிங் பங்கேற்றனர். இதில் அதிகபட்சம் 1.89 மீ. உயரம் தாண்டிய ஷைலேஷ் குமார், புதிய பாரா ஆசிய சாதனை படைத்து, தங்கப் பதக்கம் வசப்படுத்தினார். வருண் சிங் (1.84 மீ.), ராகுல் சரோஹா (1.81 மீ.) அடுத்த இரு இடங்களைப் பெற்று வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர். இப்பிரிவில் மூன்று பதக்கங்களையும் இந்தியா வசப்படுத்தியது.வட்டு எறிதல்.பெண்களுக்கான வட்டு எறிதல் 'எப் 54' பிரிவில் இந்தியாவின் சுவர்ணா ராஜ் பங்கேற்றார். ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சம் 15.66 மீ. தூரம் எறிந்து, தங்கப் பதக்கம் தட்டிச் சென்றார்.பாட்மின்டனில் 7 வெண்கலம்.பாட்மின்டனில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் ('எஸ்.யு.5') அரையிறுதியில் இந்தியாவின் மணிஷா ராமதாஸ் (தமிழகம்) 21-19, 15–21, 13-21 என சக தமிழக வீராங்கனை துளசிமதியிடம் தோற்று, வெண்கலப் பதக்கம் பெற்றார். கலப்பு இரட்டையர் அரையிறுதியில் மணிஷா, பிரமோத் பகத் ஜோடி ('எஸ்.எல்.3, எஸ்.யு.5') 21-16, 13-21, 17-21 என இந்தோனேஷிய ஜோடியிடம் போராடி தோற்று, வெண்கலம் வென்றது.
'பாரா' ஆசிய விளையாட்டு மூன்றாவது நாளான நேற்று, இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கம் கைப்பற்றியது.ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 168 பேர் பங்கேற்றுள்ளனர். முதல் இரண்டு நாளில் 35 பதக்கம் கைப்பற்றிய இந்திய நட்சத்திரங்கள் நேற்றும் தனது பதக்க வேட்டையைத் தொடர்ந்தனர்.ஓட்டப் போட்டிபெண்கள் 100 மீ. ('டி 35'): இந்தியாவின் பிரீத்தி பால், 13.98 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.ஆண்கள் 100 மீ. ('டி 64'): பைனலில் இந்தியாவின் பிரனவ் தேசாய், 11.96 வினாடியில் வந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.ஆண்கள் ஓட்டம் ('டி 47'): பைனலில் திலிப் மகது காவிட், 10.69 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.குண்டு எறிதல் போட்டிஆண்கள் குண்டு எறிதல் ('எப் 53'): பைனலில் இந்தியா சார்பில் ஆயுஷ் வர்மா (35) களமிறங்கினார். ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 8.16 மீ. தூரம் எறிந்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.பெண்கள் குண்டு எறிதல் ('எப் 34'): இந்தியாவின் பாக்யஸ்ரீ வெள்ளிப் பதக்கம் பெற்றார்.ஈட்டி எறிதல் போட்டிஆண்கள் ஈட்டி எறிதல் ('எப் 12/13'): இந்தியாவின் மஞ்ஜீத் வியாஸ் வெள்ளி வென்றார்.ஆண்கள் ஈட்டி எறிதல் ('எப் 55'): இந்தியாவின் சுஹ்செய்ன் (29.94 மீ.) வெண்கலம் வசப்படுத்தினார்.வட்டு எறிதல் போட்டிபெண்கள் வட்டு எறிதல் ('எப் 55'): இந்தியாவின் கரம்ஜோதி (21.60 மீ.) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.ஆண்கள் வட்டு எறிதல் ('எப் 37'): இந்தியாவின் ஹனே (57.04 மீ.) வெண்கலம் வசப்படுத்தினார்.வில்வித்தை போட்டிகாம்பவுண்டு பெண்கள் இரட்டையர்: பைனலில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, பயல் நாக் ஜோடி சீன ஜோடியைச் சந்தித்தது. முதல் செட் 36-36 என சமமானது. அடுத்தடுத்த செட்களில் (35-38, 34-38, 36-38) பின்தங்கிய இந்திய ஜோடி 141-150 எனத் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.பவர் லிப்டிங் போட்டிபெண்கள் பவர் லிப்டிங்: இந்தியா சார்பில் கஸ்தூரி ராஜாமணி, 42, (தமிழகம்) பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 103 கிலோ தூக்கினார். அடுத்து கடைசி 3வது வாய்ப்பில் 108 கிலோ தூக்கி, கஸ்தூரி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.பேட்மிண்டன் போட்டிஆண்கள் இரட்டையர் ('எஸ்.எச் 6'): லீக் போட்டியில் இந்தியாவின் சிவராஜன் சோலைமலை - கிருஷ்ணா ஜோடி 6-21, 8-21 என சீன ஜோடியிடம் தோற்றது. முடிவில் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று இரண்டாமிடம் பெற, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.உயரம் தாண்டுதல் போட்டிஆண்கள் உயரம் தாண்டுதல் ('டி 64'): இந்தியா சார்பில் பிரவீன் குமார், பான்டி பங்கேற்றனர். இதில் 2.05 மீ. உயரம் தாண்டிய பிரவீன் குமார், ஆசிய பாரா சாதனையுடன் தங்கப் பதக்கம் வசப்படுத்தினார். 1.92 மீ. தாண்டிய பான்டிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 'சூப்பர் 750' அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் பி.வி. சிந்து, தாய்லாந்தின் சுபநிதா கேத்தோங் உடன் மோதினார். 1 மணி நேரம் 4 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில், 21-14, 8-21, 23-21 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்ற சிந்து, 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.