25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டு (SPORTS)

Nov 04, 2026

இந்தியா - நியூசிலாந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.இதன்படி இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

Nov 03, 2026

யூத் ஒலிம்பிக் நீச்சல்: தினிதி தேசிங்கு வெண்கலம் வென்று சாதனை.

செனகலில் நடக்கும் நான்காவது சீசன் யூத் ஒலிம்பிக் போட்டிகளில், பெண்களுக்கான 100 மீ., 'பட்டர்பிளை' நீச்சல் பிரிவில் இந்தியாவின் தினிதி தேசிங்கு புதிய தேசிய சாதனையுடன் வெண்கலப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். ஒலிம்பிக் மற்றும் யூத் ஒலிம்பிக் அரங்கில் நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதேபோல் ஆண்களுக்கான 100 மீ., 'பட்டர்பிளை' பிரிவில் இந்தியாவின் திர்தாங்க் பெகு 4வது இடம் பிடித்தார்.

Nov 03, 2026

யூத் ஒலிம்பிக் ஜூடோ: பைனலுக்கு முன்னேறிய குஷ்பு ராஜக் பாய்.

பெண்களுக்கான 63 கிலோ ஜூடோ பிரிவில் இந்தியாவின் குஷ்பு ராஜக் பாய் தொடர்ச்சியான வெற்றிகளுடன் பைனலுக்கு முன்னேறியுள்ளார். ரவுண்டு-16, காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் முறையே கினியா, மொராக்கோ மற்றும் அல்ஜீரியா வீரர்களை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

Nov 03, 2026

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியாவின் ஐந்தாவது வெற்றி.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மற்றும் மொகாலியில் நடக்கும் 9வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொண்டது. தில் பிரீத் சிங் கோல் அடிக்க, ஆட்டநேர முடிவில் 8-0 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய அணி தொடர்ச்சியாக தனது 5வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Nov 03, 2026

பார்முலா - 1 கார் பந்தயம்: இளம் உலக சாம்பியனான கிமி ஆன்டோனெல்லி.

மெக்சிகோவில் நடந்த 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்தில் 'ரெட் புல்' அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் சாம்பியன் ஆனார். இப்போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த 'மெர்சிடஸ்' அணியின் இத்தாலி வீரர் கிமி ஆன்டோனெல்லி (20 வயது), பார்முலா-1 வரலாற்றில் இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் 2010ல் செபாஸ்டியன் வெட்டல் 23 வயதில் இச்சாதனையைப் புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Nov 02, 2026

டி-20 தொடரை வென்றது இந்தியா.

ஐந்தாவது 'டி-20' போட்டியில் இந்தியா தோற்ற போதும், தொடரை 3-2 என வென்று, கோப்பை கைப்பற்றியது.இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் மோதின. முதல் மூன்று சவாலில் இந்தியா வென்றது. நான்காவது போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டி நேற்று (நவ.1) ஹாமில்டன், செடான் பார்க் மைதானத்தில் நடந்தது.'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், 'பவுலிங்' தேர்வு செய்தார்.இந்திய அணி 20 ஓவரில் 191/8 ரன் எடுத்தது. சவாலான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 18 ஓவரில் 195/3 ரன் எடுத்து, சுலப வெற்றி பெற்றது.

Nov 02, 2026

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி லீக் போட்டியில், இந்திய அணி 4-2 என, மலேசியாவை வீழ்த்தியது.பஞ்சாப் மாநிலம் ஜலந்தர், மொகாலியில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 9வது சீசன் நடக்கிறது.நேற்று நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறின.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது. இதுவரை முடிந்த போட்டிகளின் முடிவில் இந்தியா 12 புள்ளிகள் பெற்றுள்ளது.

Nov 02, 2026

ஹைலோ ஓபன்: சிந்து, லக்சயா சென் சாம்பியன்.

ஹைலோ ஓபன் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார் சிந்து.ஜெர்மனியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்தது. பைனலில், உலகின் 'நம்பர்-8' இந்தியாவின் சிந்து, 25வது இடத்தில் உள்ள டென்மார்கின் ஹோஜ்மார்க் மோதினர்.இதில் சிந்து 21-12, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி மோதினர். இதில் லக்சயா சென் 21-17, 21-10 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

Nov 02, 2026

பான்பசிபிக் ஓபன்: டயானா ஷ்னைடர் சாம்பியன்.

டோக்கியோ: ஜப்பானில், டபிள்யு.டி.ஏ., பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் டயானா ஷ்னைடர், கனடாவின் லேலா பெர்னாண்டஸ் மோதினர்.2 மணி நேரம், 18 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஷ்னைடர் 6-4, 5–7, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் ஷ்னைடர் வென்ற 6வது பட்டம்.

Nov 02, 2026

வியன்னா ஓபன்: கார்லஸ் அல்காரஸ் அபாரம்.

வியன்னா: ஆஸ்திரியாவில், வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் மோதினர்.இதில் அல்காரஸ் 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இது, இவரது 28வது ஏ.டி.பி., ஒற்றையர் பட்டம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 187 188

AD's



More News