25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


விளையாட்டு (SPORTS)

Sep 28, 2026

46-வது செஸ் ஒலிம்பியாட் (உஸ்பெகிஸ்தான்)

ஓபன் பிரிவு: 11-வது சுற்றில் இந்தியா - ஹங்கேரி அணிகள் மோதின. இதில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா மற்றும் நிகால் சரின் ஆகியோரின் போட்டிகள் 'டிரா'வில் முடிந்தன. இறுதியில் ஆட்டம் 2.0 - 2.0 என்ற கணக்கில் சமநில அடைந்தது.11 சுற்றுகளின் முடிவில் ஜெர்மனியும் இந்தியாவும் தலா 18 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்தன. 'டை-பிரேக்கர்' புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி (405.5 புள்ளிகள்) 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.பெண்கள் பிரிவு: 11-வது சுற்றில் இந்திய அணி, ஜார்ஜியா அணியை எதிர்கொண்டது. இப்போட்டியும் 2.0 - 2.0 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.11 சுற்றுகளின் முடிவில் 17 புள்ளிகள் பெற்ற இந்திய பெண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

Sep 26, 2026

ஆசிய விளையாட்டு: பல்வேறு போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள்.

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20-வது சீசன் நடைபெற்று வருகிறது.துப்பாக்கிச் சுடுதல்துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கமல்ஜீத், சுருச்சி ஆகியோர் பங்கேற்றனர். தகுதிச்சுற்றில் இந்திய ஜோடி 587 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.இறுதிச்சுற்றிலும் அசத்திய இந்திய ஜோடி, 484.6 புள்ளிகளுடன் ஆசிய சாதனை படைத்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் நிராஜ் குமார், ருத்ரான்க்ஸ், ஐஸ்வரி பிரதாப் ஆகியோர் பங்கேற்றனர். மூவரும் இணைந்து 1,762 புள்ளிகள் பெற, இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தியது.ஆசிய விளையாட்டுத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்த முறை இந்தியா ஒரு தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை கைப்பற்றியது.போல் வால்ட்பெண்களுக்கான போல் வால்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த பரணிகா இளங்கோவன் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சிந்து ஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.பரணிகா தொடக்கத்தில் 3.85 மீட்டர் உயரத்தைத் தாண்டினார். தொடர்ந்து 4.00 மீட்டர் உயரத்தையும் கடந்தார். அடுத்து 4.15 மீட்டர் உயரத்தை இரண்டாவது முயற்சியில் வெற்றிகரமாகத் தாண்டினார்.தொடர்ந்து 4.25 மீட்டர் உயரத்தை மூன்று முறை முயற்சித்தும், பரணிகா மற்றும் போலினா ஆகிய இருவராலும் தாண்ட முடியவில்லை.இதையடுத்து வெண்கலப் பதக்கத்தை முடிவு செய்ய ‘டை பிரேக்கர்’ நடத்தப்பட இருந்தது. ஆனால் இருவரும் வெண்கலப் பதக்கத்தைப் பகிர்ந்து கொள்ள சம்மதித்ததால், ‘டை பிரேக்கர்’ நடத்தப்படவில்லை.ஸ்குவாஷ்ஸ்குவாஷ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் ஜோடி 2-0 (11-3, 11-5) என்ற கணக்கில் பிலிப்பைன்ஸின் பெலினோ டேவிட், அரிபடோ ஜெமிகா ஜோடியை வீழ்த்தியது.பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அனாஹத் சிங் 3-0 (11-2, 11-5, 11-3) என்ற கணக்கில் சக வீராங்கனையான தன்வி கன்னாவை வீழ்த்தினார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அபய் சிங் 3-0 (11-4, 11-3, 11-6) என்ற கணக்கில் ஜப்பானின் யுனோசுகேவை வீழ்த்தினார்.கபடிஆண்களுக்கான கபடி அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 66-28என்றபுள்ளிக்கணக்கில்வெற்றிபெற்று,ஆசியவிளையாட்டில்9வதுமுறையாகஇறுதிப்போட்டிக்குமுன்னேறியது.பெண்களுக்கான கபடி அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. இந்திய அணி 48-24 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.டேபிள் டென்னிஸ்டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா ஜோடி, சுகின் வாங், இங்ஷா ஜோடியை எதிர்கொண்டது.முதல் இரு செட்களை 8-11, 5-11 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் 8-11 என நழுவவிட்டது. நான்காவது செட்டிலும் 2-11 என ஏமாற்றமளித்தது.முடிவில் இந்திய ஜோடி 0-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்திய ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

Sep 26, 2026

செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிகள் வெற்றி.

உஸ்பெகிஸ்தானில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணிகள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன.பெண்கள் பிரிவு.பெண்களுக்கான 9-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஹம்பி, வந்திகா, திவ்யா, சவிதா ஸ்ரீ ஆகியோர் களமிறங்கினர்.உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா, குல்ருக்பெகிமை வீழ்த்தினார். வந்திகா, நிலுபர்கோனை தோற்கடித்தார். ஹம்பி மற்றும் சவிதா ஸ்ரீ தங்களது ஆட்டங்களை ‘டிரா’ செய்தனர்.இதையடுத்து இந்திய அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.ஓபன் பிரிவு.ஓபன் பிரிவின் 9-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜெர்மனியை எதிர்கொண்டது. இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹால் சரின், அர்ஜுன் ஆகியோர் களமிறங்கினர்.உலக சாம்பியனான குகேஷ், 53-வது நகர்த்தலில் அலெக்சாண்டரை வீழ்த்தினார். பிரக்ஞானந்தா, அர்ஜுன் மற்றும் நிஹால் சரின் ஆகியோர் தங்களது ஆட்டங்களை ‘டிரா’ செய்தனர்.முடிவில் இந்திய அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெற்றது.தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்.பெண்கள் மற்றும் ஓபன் என இரு பிரிவுகளிலும் இந்திய அணிகள் 9-வது சுற்றில் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. அடுத்தடுத்த சுற்றுகளிலும் இந்திய அணிகள் தங்களது சிறப்பான ஆட்டத்தைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sep 25, 2026

ஆசிய விளையாட்டு: தடகளம், துப்பாக்கிச் சுடுதல், படகு போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள்.

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 20-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.தடகளம்.தடகளத்தில் கலப்பு அணிகளுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இந்திய அணியில் பூவம்மா, மானு, தமிழகத்தைச் சேர்ந்த விஷால் மற்றும் வித்யா ஆகியோர் களமிறங்கினர்.தகுதிச்சுற்றின் 2-வது பிரிவில் பங்கேற்ற இந்திய அணி, 3 நிமிடம் 16.23 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 2-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.தமிழகத்தைச் சேர்ந்த தடகள நட்சத்திரங்களான கோவையைச் சேர்ந்த வித்யா மற்றும் திருப்பத்தூரைச் சேர்ந்த விஷால் ஆகியோர் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட இருவரும், இந்தியா வெள்ளிப் பதக்கம் வெல்ல கைகொடுத்தனர்.இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வித்யா 4-வது பதக்கத்தை வென்றார். அவர் இதுவரை 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். விஷாலுக்கு இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிடைத்த முதல் பதக்கமாகும்.துப்பாக்கிச் சுடுதல்.துப்பாக்கிச் சுடுதலில் ஸ்கீட் கலப்பு அணிகளுக்கான தகுதிச்சுற்று நடைபெற்றது. இந்தியா சார்பில் அனன்ஜீத் சிங் மற்றும் பரினாஸ் ஜோடி பங்கேற்றது.இந்திய ஜோடி தகுதிச்சுற்றில் 138 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் 44 புள்ளிகள் பெற்ற இந்திய ஜோடி 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.இதன் மூலம் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்கள் கிடைத்துள்ளன.படகு வலித்தல்.ஆண்களுக்கான படகு வலித்தல் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்னம் சிங் மற்றும் சல்மான் கான் களமிறங்கினர்.2000 மீட்டர் போட்டியில் முதல் 1500 மீட்டர் வரை இந்திய ஜோடி 2-வது இடத்தில் இருந்தது. இறுதிக்கட்டத்தில் சற்று பின்னடைந்த இந்திய ஜோடி, 6 நிமிடம் 13.25 வினாடிகளில் இலக்கை கடந்து 3-வது இடத்தைப் பிடித்தது.இதன் மூலம் இந்திய ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்றது.ஹாக்கிஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான ஹாக்கி 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது.முதல் இரு போட்டிகளில் இந்தோனேசியாவை 13-1 என்ற கணக்கிலும், இலங்கையை 16-1 என்ற கணக்கிலும் இந்தியா வீழ்த்தியிருந்தது. தொடர்ந்து 3-வது வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி, 9 புள்ளிகளுடன் அரையிறுதிக்கான வாய்ப்பை வலுப்படுத்திக் கொண்டது.

Sep 25, 2026

உஸ்பெகிஸ்தானில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

உஸ்பெகிஸ்தானில் 46-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. ஓபன் பிரிவில் நடைபெற்ற 8-வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, அஜர்பைஜான் அணியை எதிர்கொண்டது.இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜ்ராத்தி மற்றும் அர்ஜுன் ஆகியோர் களமிறங்கினர். பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.பெண்கள் பிரிவுபெண்கள் பிரிவின் 8-வது சுற்றில் இந்திய அணி, கஜகஸ்தான் அணியை எதிர்கொண்டது. நடப்பு சாம்பியனான இந்திய அணியில் ஹம்பி, வைஷாலி, திவ்யா மற்றும் சவிதாஸ்ரீ ஆகியோர் பங்கேற்றனர்.உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா மற்றும் ஹம்பி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். வைஷாலி, நுர்மானிடம் தோல்வியடைந்ததால் இந்திய அணி 1-2 என்ற நிலையில் பின்தங்கியது.கடைசி ஆட்டத்தில் சவிதாஸ்ரீ 62-வது நகர்த்தலில் எல்நாசை வீழ்த்தினார். இதையடுத்து இந்தியா–கஜகஸ்தான் போட்டி 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

Sep 24, 2026

ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு பதக்க வேட்டை.

ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.பளுதூக்குதல்.பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு களமிறங்கினார்.முதலில் நடைபெற்ற ‘ஸ்னாட்ச்’ பிரிவில், மூன்றாவது முயற்சியில் அதிகபட்சமாக 87 கிலோ எடையைத் தூக்கினார். தொடர்ந்து ‘க்ளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில், இரண்டாவது முயற்சியில் 111 கிலோ எடையைத் தூக்கினார்.இரண்டாவது இடம் உறுதியானதைத் தொடர்ந்து, மூன்றாவது முயற்சியை அவர் பயன்படுத்தவில்லை. மொத்தமாக 198 கிலோ எடையைத் தூக்கிய மீராபாய் சானு, வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.பேட்மிண்டன்.ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்–சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் வெய்கெங்–சாங் வாங் ஜோடியை எதிர்கொண்டது.இதில் இந்திய ஜோடி 21-11, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் போட்டியின் ஸ்கோர் 1-1 என சமநிலைக்கு வந்தது. இருப்பினும், இறுதியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.துப்பாக்கிச் சுடுதல்.ஆண்களுக்கான ‘ஸ்கீட்’ பிரிவு தகுதிச்சுற்று நடைபெற்றது. இந்தியா சார்பில் பங்கேற்ற அனன்ஜீத் சிங் 119 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.பெண்களுக்கான ‘ஸ்கீட்’ பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரைசா தில் லான் மற்றும் பரினாஸ் தலா 111 புள்ளிகள் பெற்று 8 மற்றும் 9-வது இடங்களைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். மகேஷ்வரி 109 புள்ளிகளுடன் 12-வது இடத்தைப் பிடித்தார்.தகுதிச்சுற்றில் இந்தியாவின் மூன்று வீராங்கனைகளும் இணைந்து 331 புள்ளிகளைப் பெற்றதால், இந்திய பெண்கள் அணி 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.சாப்ட் டென்னிஸ்.ஆண்கள் ஒற்றையர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ஜெய் மீனா, பிலிப்பைன்ஸ் வீரர் ஷெர்வினை எதிர்கொண்டார்.முதல் கேமை 0-4 என இழந்த ஜெய், அடுத்த கேமை 4-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். மூன்றாவது கேமை 2-4 என நழுவவிட்ட அவர், அடுத்த இரு கேம்களையும் 4-2, 5-3 என்ற கணக்கில் வென்றார்.முடிவில் ஜெய் மீனா 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஆசிய விளையாட்டு சாப்ட் டென்னிஸ் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.டேபிள் டென்னிஸ்.டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்–யாஷஸ் வினி ஜோடி, ஹாங்காங்கின் குவான் டோ–விங் லாம் ஜோடியை எதிர்கொண்டது.இதில் இந்திய ஜோடி 3-1 என்ற கணக்கில் (11-6, 11-5, 10-12, 11-7) வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.ஹாக்கி.ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் பெண்கள் ஹாக்கி ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, தாய்லாந்தை 20-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதற்கு முன்பு உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா அணிகளை வீழ்த்திய இந்தியா, தொடர்ந்து 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.இந்தப் போட்டியில் 9 கோல்கள் அடித்த இந்திய வீராங்கனை தீபிகா, சர்வதேச ஹாக்கி அரங்கில் ஒரே போட்டியில் 9 கோல்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். கடந்த 3 போட்டிகளில் மட்டும் அவர் 20 கோல்கள் அடித்துள்ளார்.

Sep 23, 2026

பெண்கள் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய சிங்கப்பெண்கள்.

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 20வது சீசனில், பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிரடியாக விளையாடிய இந்திய வீராங்கனைகள், 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது.சவாலான 217 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இந்திய அணி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

Sep 23, 2026

ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப்போட்டியில் பிரணதி.

பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பிரணதி பங்கேற்றுள்ளார். 19 வீராங்கனைகள் பங்கேற்ற வால்ட் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட அவர், 12.916 புள்ளிகளுடன் 7வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Sep 23, 2026

கபடியில் இந்தியாவுக்கு தொடர் வெற்றி.

ஆண்களுக்கான கபடி போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது. முதல் போட்டியில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி, நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் கொரியாவை எதிர்கொண்டது.முதல் பாதியில் இந்திய அணி 34-14 என்ற புள்ளிக் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தைத் தொடர்ந்த இந்தியா, 29-17 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.முடிவில் இந்திய அணி 63-31 என்ற புள்ளிக் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி, தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.இந்திய அணி அடுத்ததாக இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

Sep 22, 2026

செஸ் ஒலிம்பியாட்: அமெரிக்காவை வீழ்த்திய இந்திய பெண்கள் அணி.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 46வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பெண்கள் அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.பெண்கள் பிரிவின் 6வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்திய அணியில் ஹம்பி, வந்திகா, திவ்யா மற்றும் சவிதா ஸ்ரீ ஆகியோர் களமிறங்கினர்.கருப்பு காய்களுடன் விளையாடிய சவிதா ஸ்ரீ, 47 நகர்த்தல்களில் ரோஸ் அத்வலை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் வந்திகாவும் தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.உலகக் கோப்பை சாம்பியனான திவ்யா மற்றும் அனுபவம் வாய்ந்த ஹம்பி ஆகியோரின் ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இதன் மூலம் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 187 188

AD's



More News