ஓபன் பிரிவின் 6வது சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வலுவான உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.இந்திய அணியில் குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹால் சரின் மற்றும் அர்ஜுன் ஆகியோர் விளையாடினர். குகேஷ்–ஷம்சுதின், பிரக்ஞானந்தா–நாடிர்பெக் அப்துசட்டோரோவ் மற்றும் அர்ஜுன்–சிந்தரோவ் ஆகியோருக்கு இடையிலான மூன்று ஆட்டங்களும் டிராவில் முடிந்தன.மற்றொரு ஆட்டத்தில் நிஹால் சரின், 54 நகர்த்தல்களில் யாக்குபோயிடம் தோல்வியடைந்தார். இதனால் இந்திய அணி 1.5-2.5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானிடம் தோல்வியடைந்து, தொடரில் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தோனேசியாவை எதிர்கொண்ட இந்திய அணி, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. தீபிகா, ருதுஜா மற்றும் நவ்னீத் ஆகியோர் ஹாட்ரிக் கோல்களை பதிவு செய்தனர்.இறுதியில் இந்திய அணி 17-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி, தொடர்ச்சியாக 2வது வெற்றியைப் பதிவு செய்தது.
ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ரான்க்ஸ் 631.8 புள்ளிகளுடனும், ஹிமான்சு தில்லான் 630.0 புள்ளிகளுடனும் முறையே 3வது மற்றும் 7வது இடங்களைப் பிடித்து தனிநபர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.மற்றொரு இந்திய வீரரான பார்த்த் ராகேஷ் 628.3 புள்ளிகளுடன் 11வது இடத்தைப் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார்.தகுதிச்சுற்றில் வீரர்கள் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் அணிகளுக்கான பதக்கம் தீர்மானிக்கப்பட்டது. ருத்ரான்க்ஸ், ஹிமான்சு மற்றும் பார்த்த் ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி 1,890.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.சீனா 1,899.0 புள்ளிகளுடன் தங்கத்தையும், தென் கொரியா 1,884.2 புள்ளிகளுடன் வெண்கலத்தையும் கைப்பற்றின.
ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் தங்களது லீக் ஆட்டங்களில் பாகிஸ்தானை எதிர்கொண்டன.பெண்களுக்கான 'எப்' பிரிவு லீக் போட்டியில் சுதிர்தா, சின்ட்ரெலா மற்றும் ஸ்ரீஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.ஆண்கள் பிரிவிலும் ஹர்மீத் தேசாய், சத்யன் மற்றும் பயாஸ் ஜெயின் ஆகியோர் வெற்றியைப் பதிவு செய்தனர். இதனால் இந்திய ஆண்கள் அணியும் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
ஆண்களுக்கான கபடி 'ஏ' பிரிவு லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது.ஆட்டத்தின் முதல் பாதியிலேயே இந்திய அணி 31-9 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தைத் தொடர்ந்த இந்திய அணி 18 புள்ளிகளைச் சேர்த்தது. ஜப்பான் அணி 15 புள்ளிகளை மட்டுமே பெற்றது.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 49-24 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு 8 ஆல்-அவுட் மற்றும் 2 சூப்பர் டேக்கிள் புள்ளிகள் கிடைத்தன.மகளிர் கபடியிலும் வெற்றி.பெண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்கதேசத்தை எதிர்கொண்டது.ஆட்டம் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள், 42-21 என்ற புள்ளிக் கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்தனர்.
ஜப்பானின் அய்ச்சி–நகோயா நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகளின் 20-வது சீசன் நடைபெற்று வருகிறது. பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.பெண்களுக்கான தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்றில் இந்தியாவின் சோனம் 634.1 புள்ளிகளுடனும், இளவேனில் வாளறிவன் 633.5 புள்ளிகளுடனும் முறையே 3-வது மற்றும் 6-வது இடங்களைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.இறுதிப்போட்டியில் சோனம் 167.0 புள்ளிகளுடன் 6-வது இடத்தைப் பிடித்தார். சிறப்பாக செயல்பட்ட இளவேனில் வாளறிவன் 252.4 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டிகளில் இந்திய பெண்கள் மற்றும் ஆண்கள் அணிகள் அபார வெற்றிகளை பதிவு செய்துள்ளன.பெண்களுக்கான 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 19–0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 13–1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
பெண்கள் அணிகளுக்கான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியா, கஜகஸ்தானை எதிர்கொண்டது.முதல் ஒற்றையர் ஆட்டத்தில் பி.வி. சிந்து 21–9 என்ற கணக்கில் கமிலா ஸ்மகுலோவாவை வீழ்த்தினார்.அடுத்த போட்டியில் உன்னதி ஹூடா 21–7, 21–10 என்ற நேர் செட்களில் அலிசா குலேஷாவை வென்றார்.மூன்றாவது போட்டியில் தான்வி சர்மா 21–5, 21–10 என்ற கணக்கில் டயானா நமெனோவாவை வீழ்த்தினார்.இதன் மூலம் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் அணிகளுக்கான 'எப்' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, இந்தோனேஷியாவை எதிர்கொண்டது.ஸ்ரீஜா அகுலா, தியா மற்றும் யாஷஸ்வினி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரை எதிர்கொண்ட இந்திய அணி, கடுமையான போட்டிக்குப் பிறகு 3–2 என்ற கணக்கில் திரில் வெற்றியைப் பதிவு செய்தது.