25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு (SPORTS)

Aug 13, 2026

சின்க்யூஃபீல்ட் கோப்பை செஸ்: இந்தியாவின் பிரக்ஞானந்தா வெற்றி!

செயின்ட் லூயிஸ் (அமெரிக்கா): 'கிராண்ட் செஸ் டூர்' 11-வது சீசன் மொத்தம் 5 தொடர்களாக நடைபெற்று வருகிறது. இதன் 5-வது மற்றும் கடைசி தொடரான 'சின்க்யூஃபீல்ட் கோப்பை' செஸ் போட்டி, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் உட்பட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.போட்டிக் களம்:நேற்று நடைபெற்ற 2-வது சுற்றில், இந்தியாவின் பிரக்ஞானந்தா, கேண்டிடேட்ஸ் தொடரின் சாம்பியனும், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள உக்ரைனின் சிந்தரோவை எதிர்கொண்டார்.வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இப்போட்டியின் 67-வது நகர்த்தல் வரை இரு வீரர்களும் சமநிலையில் இருந்தனர்.பின்னர் 82-வது நகர்த்தலில் சிந்தரோவ் செய்த சிறிய தவறைச் சரியாகப் பயன்படுத்திய பிரக்ஞானந்தா, இறுதியில் 95-வது நகர்த்தலில் அபார வெற்றி பெற்றார்.

Aug 12, 2026

கனடா ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேற்றம்!

கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்று வரும் கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில், உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ரஷியாவின் டயானா ஸ்னைடெரை 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.மற்றொரு காலிறுதி ஆட்டத்தில், 9-வது இடத்தில் உள்ள உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா, முதல் செட்டை இழந்தபோதும் சிறப்பாக மீண்டு வந்து ரஷியாவின் எகடெரினா அலெக்சாண்ட்ரோவாவை 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்றார்.இதையடுத்து அரையிறுதியில் ஸ்விடோலினா, ஸ்வியாடெக்கை எதிர்கொள்கிறார்.

Aug 12, 2026

டி.என்.பி.எல். கிரிக்கெட்

டி.என்.பி.எல். தொடரில் நத்தத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கோவை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய திருப்பூர் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.மற்றொரு ஆட்டத்தில் நெல்லை மற்றும் திருச்சி அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய நெல்லை அணி 18 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.

Aug 11, 2026

உலக ‘யூத்’ தடகளம்: உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா 7வது இடம்.

அமெரிக்காவில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக ‘யூத்’ தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 21வது சீசன் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியா சார்பில் பூஜா சிங் (19) பங்கேற்றார்.அதிகபட்சமாக 1.84 மீட்டர் உயரம் தாண்டிய பூஜா சிங், 7வது இடத்தைப் பிடித்தார்.பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியின் இறுதிச்சுற்றில் பூமிகா, தஹுரா, தானு, தியா ஆகியோர் அடங்கிய இந்திய அணி பங்கேற்றது. பந்தய தூரத்தை 3 நிமிடம் 45.28 வினாடிகளில் கடந்த இந்திய அணி 9வது இடத்தைப் பிடித்தது.இந்தத் தொடரில் இந்தியாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 3 பதக்கங்கள் கிடைத்தன.

Aug 11, 2026

துரந்த் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறியது மோகன் பகான் அணி. 

துரந்த் கோப்பை கால்பந்து தொடரில் மோகன் பகான் அணி காலிறுதிக்கு முன்னேறியது. லீக் போட்டியில் சி.ஐ.எஸ்.எப். புரோடக்டர்ஸ் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.இந்தியாவில் 135வது துரந்த் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன.கொல்கத்தாவில் நடைபெற்ற ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி, மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எப்.) புரோடக்டர்ஸ் அணியை எதிர்கொண்டது.ஆட்டம் தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய மோகன் பகான் அணி, கோல் மழை பொழிந்தது. முடிவில் 6-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

Aug 11, 2026

டேவிஸ் கோப்பை: இந்திய அணியில் மனாஸ் தம்னே.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் மனாஸ் தம்னே முதல்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தென் கொரியாவின் சியோல் நகரில் வரும் செப். 18, 19 ஆகிய தேதிகளில் டேவிஸ் கோப்பை பைனலுக்கான தகுதிச்சுற்றின் 2வது சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதுகின்றன.இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் 362வது இடத்தில் உள்ள மனாஸ் தம்னே முதல்முறையாக இடம் பிடித்துள்ளார்.மற்ற இந்திய வீரர்களான சுமித் நாகல் (235வது இடம்), தக்‌ஷினேஸ்வர் சுரேஷ் (393வது இடம்) ஆகியோர் ஒற்றையர் பிரிவில் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி (28வது இடம்), ஸ்ரீராம் பாலாஜி (57வது இடம்) ஜோடி மீண்டும் களமிறங்குகிறது.

Aug 11, 2026

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேலத்தை வீழ்த்தியது மதுரை அணி.

திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் மதுரை, சேலம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சேலம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது.சவாலான இலக்கை துரத்திய சேலம் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் மதுரை அணி வெற்றி பெற்றது.

Aug 10, 2026

டி.என்.பி.எல்.: திண்டுக்கல், திருப்பூர் அணிகள் அபார வெற்றி.

திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் திண்டுக்கல் மற்றும் சேப்பாக்கம் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற சேப்பாக்கம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் நெல்லை மற்றும் திருப்பூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நெல்லை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.கடினமான இலக்கை துரத்திய திருப்பூர் அணி அதிரடியாக விளையாடி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.

Aug 10, 2026

கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டனில் அஷ்மிதா சாலிஹா சாம்பியன்!

தென்கொரியாவில் நடைபெற்ற 'சூப்பர் 300' அந்தஸ்து பெற்ற கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, சீனாவின் ஹான் கியான்சியை எதிர்கொண்டார்.53 நிமிடங்கள் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் அஷ்மிதா 14-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.அசாமைச் சேர்ந்த அஷ்மிதா, பி.டபிள்யு.எப். உலக டூர் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

Aug 10, 2026

உலக இளையோர் தடகளத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்.

அமெரிக்காவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பசந்த் குமார் மேக்வால் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.இறுதிப்போட்டியில் பசந்த் குமார், அல்ஜீரியாவின் யூனஸ் அயாச்சி மற்றும் பிரிட்டனின் ஓடிஸ் பூலே ஆகியோர் தலா 2.21 மீட்டர் உயரத்தைத் தாண்டினர்.இதையடுத்து, அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் பசந்த் குமார் இரண்டாவது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.ராஜஸ்தானைச் சேர்ந்த இந்திய கடற்படை வீரரான பசந்த் குமார், உலக இளையோர் தடகள போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 169 170

AD's