25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jul 03, 2025

'கூலி' இசை வெளியீடு ஜூலை இறுதியில்…

ரஜினி நடித்துள்ள 'கூலி' படம் லோகேஷ்  கனகராஜ் இயக்கத்தில் ஆக. 14ல் ரிலீஸாகிறது. ஸ்ருதிஹாசன், உபேந்திரா நாகார்ஜுனா, உள்ளிட்டோரும், சிறப்பு வேடத்தில் அமீர்கானும் நடித்துள்ளனர். ரஜினி திரைப் பயணத்தின் 50வது ஆண்டில்வரும்படம்என்பதால் இந்தியளவில் உள்ள பல முன்னணி பிரபலங்களையும் அழைக்க எண்ணி 'கூலி'பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிட்டுள்ளனர். 

Jul 03, 2025

நிறைவடைந்த தனுஷின் ஹிந்தி படப்பிடிப்பு .

ஹிந்தியில் இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்'. நாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார். டில்லி, பனாரஸ் உள்ளிட்ட பகு பகுதிகளில் பல் வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது நிறைவடைந்ததாக தனுஷ் தெரிவித்துள்ளார். 

Jul 03, 2025

ஆகஸ்ட் 1ல் பிளாக்மெயில்' ரிலீஸ் .

ஜி.வி. பிரகாஷ் நாயகனாக , மு. மா றன் இயக்கத்தில் படம் 'பிளாக்மெ யில்'. நாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். பிந்து மாதவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  , திரில்லர் படமாக உருவாகி ,கிரைம் கலந்த சஸ்பென்ஸ், உள்ள இதன் படப் பிடிப்பு முடிந்தும் சில மாதங்க ளாக சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 1ல் இப்படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.

Jul 03, 2025

நாளை ரிலீஸாக உள்ள 6 தமிழ் படங்கள் .

நாளை இயக்குனர் ராமின் 'பறந்து போ' சரத்குமார், அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியனின் 'அஃகேனம்', சூர்யா விஜய் சேதுபதியின் 'பீனிக்ஸ்', 'அனுக்கிரஹன்', 'குயிலி' ஆகிய படங்கள் வெளியாகின்றன. 2025ன் முதல் அரை யாண்டில் 122 படங்கள் ரிலீஸாகி உள்ளன.  அடுத்த 6 மாதத்தில் இன்னும் 100க்கும் மேற் பட்ட படங்கள் வெளியாகலாம்

Jun 26, 2025

ஜூன் 27ல் ரிலீஸ்ஆகும் படங்கள்

 ஜூன்மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஜூன் 27ல் விக்ரம் பிரபு நடித்த 'லவ் மேரேஜ்', விஜய்  ஆண்டனி நடித்த 'மார்கன்', திருக்குறளையும், திருவள்ளுவரையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'திருக்குறள்' மற்றும் 'குட் டே' ஆகிய படங்கள் வெளியாகின்றன.

Jun 26, 2025

மக்களால் அறியப்படாத அல்லது பாராட்டப்படாத நடிகர் புனித்ராஜ்,

மக்களால் அறியப்படாத அல்லது பாராட்டப்படாத புனித்ராஜ்,45 பள்ளிகள், 26 அனாதை இல்லங்கள், 16 முதியோர் இல்லங்கள், 19 பசு காப்பகங்கள் 1800 பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தல், கண் தானம் செய்தல் போன்ற சிறந்த சேவைகளைச் செய்துமக்களால் அறியப்படாத அல்லது பாராட்டப்படாத நடிகர்  புனித்ராஜ்.

Jun 26, 2025

'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட்' படங்களில் நடித்து வரும் பிரதீப் ரங்கநாதன்.

'லவ் டுடே ' படத்தை தானே இயக்கி, நடித்து ,'கோமாளி' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, பிரபலமடைந்தவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உரு வாகி 100 கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கிய 'டிராகன்' படத்தில் நாயகனாக நடித்தார். அப்படமும் 100 கோடி வசூலை தாண்டியது. தற்போது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட்' படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக 'லவ் டுடே, டிராகன்' படங் களை தயாரித்த நிறுவனத் திற்கு புதிதாக ஒரு படத்தை இயக்கி, நடிக்க உள்ளார். இது சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகிறது.

Jun 26, 2025

நானியின்'தி பாரடைஸ்' தாமதமாகும் படப்பிடிப்பு.

 விவேக் ஆதிரேயா இயக்கத்தில் 'ஹிட் 3' படத்திற்கு அடுத்து ,'தி பாரடைஸ்' படத்தில் நடிக்கிறார் நடிகர் நானி. ஒரு புரட்சிகரமான தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கி றார். படம் அடுத்தாண்டு மார்ச் 27ல் ரிலீசாகும் என ஏற்கனவே அறிவித்த நிலையில், படத்திற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் முடியாததால், படப்பிடிப்பு தாமதமாகிறது. இதனால் பட வெளியீடு தள்ளிப்போகலாம் என் கின்றனர். அதே நாளில் ராம்சரணின் 'பெத்தி' படம் வெளியாகிறது.

Jun 26, 2025

அரசியலில் ஈடுப டப்போகும் விஜய்க்கு ஜன நாயகன் படம் பெரிதும் உதவப் போகிறது.

விஜய் நடித்து வரும் கடைசி படம் 'ஜனநாயகன். வினோத் இயக்கத்தில் ஜன. 9 ரிலீசாகிறது. விஜயின் பிறந்தநானை முன்னிட்டு படத்தின் டீசர் வீடியோவை அதிகாலை 12:00 மணிக்கு படக்குழு வெளியிட்டது. இதில் போலீஸ் அதிகாரியாக' விஜய் வருகிறார். 'என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற விஜயின் பின்னணி குரலுடன், ஒரு உண்மை யான தலைவர் அதிகாரத்திற்காக எழுவதில்லை. ஆனால் மக்களுக்காக என்ற வாசகத்துடன் டீசர் துவங்குகிறது. இதனை வைத்து இப்படம் அரசியல் பேசப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. 

Jun 19, 2025

பரத் ,சுனில் விஜய் மில்டன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

சுனில் தெலுங்கில் காமெடி நடிகராக இருந்து ,ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடித்தார். இப்போதுகுணச்சித்ரவேடங்களில் நடிக்கிறார். தமிழிலும் நடித்து வருகிறார். மாவீரன், மார்க் ஆண்டனி, குட் பேட் அக்லி படங்களை அடுத்து விஜய் மில்டன் தமிழ், தெலுங்கில் இயக்கும் ஒரு படத்தில் சுனில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஜூன் 15ல் பட தலைப்பு வெளியாகிறது.இதில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண், ஆரி, பரத் ஆகியோரும் நடிக்கிறார்கள். தற்போது நடிகர் பரத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்தனர். இது கோலி சோடா படங்களின் தொடர்ச்சி என்கின்றனர்.'கோலி சோடா, கடுகு' போன்ற படங்களை இயக் கிய விஜய் மில்டன், அடுத்ததாக தெலுங்கு சினி மாவின் இளம் நடிகர் ராஜ் தருண் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். தெலுங்கில் தமிழ், தயாராகும் இப்படத்தில் பாடகர் பால் டப்பா, நடிகர் ஆரி ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். 

1 2 ... 46 47 48 49 50 51 52 ... 89 90

AD's



More News