25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jul 24, 2025

பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா மீண்டும் இயக்குனராக ….

பன்முகத் திறமைகொண்டவர்பிரபுதேவாநடனஇயக்குனர், நடிகர்,தமிழ், தெலுங்கு, ஹிந்தியில்படங்களும் இயக்கி  உள்ளார்.தெலுங்கில்  கடைசியாக 2007 சிரஞ்சீவியை வைத்து 'ஷங்கர் தாதா ஜிந்தாபாத்' படத்தை இயக்கினார். அதன்பின் தமிழ், ஹிந்தியில் மட் டுமே படம் இயக்கியவர். 18 ஆண்டுக்கு பின் மீண்டும் தெலுங்கில் படம் இயக்குகிறார். இதில் நாயகனாக கண்ணப்பா படத்தில் நடித்த விஷ்ணு, மஞ்சு நடிக்க போகிறார்.

Jul 24, 2025

அக்.2ல் துவங்குகிறது 'திரிஷ்யம் 3'படப்பிடிப்பு.

இயக்குனர் ஜீத்து ஜோசப், மோகன்லால் கூட்டணியில் 2013ல் மலையாளத்தில் வெளியான 'திரிஷ்யம்' படம் வெற்றி பெற்றது. இதேபடம் தமிழ், ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. இதன் 2வது பாகம் மலையாளம், ஹிந்தியில் உருவாகி வரவேற்பை பெற்றது. திரிஷ்யம் 3ம் பாகத்திற்கான படப்பிடிப்பு அக்.2ல் துவங்கி, அடுத்தாண்டு அக்.2ல் படம் ரிலீசாகும் என்றும் அறிவித்துள்ளனர். ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிக்கிறார்.

Jul 24, 2025

'தி ராஜா சாப் ரூ.1000 கோடி வசூலிக்கும்.

பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. டிச.,5ல் ரிலீஸாகிறது. இயக்குனர் மாருதி கூறும்போது, “எந்த சந்தேகமும் இல்லாமல் 'தி ராஜா சாப்' படம் ரூ.1000 கோடிக்கும் அதிகமான வசூலை குவிக்கும். பான் இந் தியா வெளியீடு, சஞ்சய் தத், மூன்று ஹீரோயின்கள் மற்றும் கலகலப்பான பிரபாஸ் என படம் குறித்த நம்பிக்கை அதிகமாகவே உள்ளது" என்றார்.

Jul 24, 2025

போலீஸ் வேடத்தில் கவுதம் ராம் கார்த்திக்.

கவுதம் ராம் கார்த்திக் (கவுதம் கார்த்திக் ) நாயகனாக சூரிய பிரதாப் இயக்கத் தில் ,சயின்ஸ் பிக்ஷன் கலந்த கிரைம் திரில் லராக உருவாகும் இதில் போலீஸ் அதிகாரியாக இவர் வருகிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. தயாரிப்பு தரப்பு கூறும்போது தமிழ் சினிமா எப்போதும் உலக அளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் தனித்துவமான கதை சொல்லும் பாணியைக் கொண்டுள்ளது.

Jul 17, 2025

11 தமிழ் படங்கள்  ஜூலை 18ல் ரிலீஸ் .

 ஜூலை 18ல்மட்டும் 'யாதும்அறியான், டைட்டானிக், டிரெண்டிங், பன்பட்டர்ஜாம், ஆக்நேயா, ஆக்கிரமிப்பு, சென்ட்ரல், கெவி, ஜென்ம நட் சத்திரம்,களம் புதிது, நாளை நமதே'ஆகிய 11 படங்கள் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை படங்க ளுக்கும் தியேட்டர் கிடைக்குமா, ரசிகர்களிடம் இதில் எத்தனை படங்கள் சென்று சேரும் என்பது தெரியவில்லை. இந்த ஆண்டின் அரையாண்டுக்குள் 120க்கும் மேற் பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

Jul 17, 2025

இந்தியத் திரையுலக வரலாற்றில் ரூ.4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்.

ரன்பீர்கபூர், சாய்பல்லவி, யஷ்உள்ளிட்டோர்நடிப்பில்நிதேஷ்திவாரிஇயக்கத்தில்,  உருவாகிவரும்புராணப்படம் 'ராமாயணா'. இதன் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என சமீபத்தில் அறிமுக வீடியோ உடன் அறிவித்தனர். "இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ.4000 கோடி" என இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தியத் திரையுலக வரலாற்றில் இதுவரையில் இத்தனை கோடி செலவு செய்து எந்த ஒரு திரைப்படமும் எடுக்கப்பட்டதில்லை.

Jul 17, 2025

JULY 25  ல் 'மாரீசன்'ரிலீஸ்.

நடிகர்கள் பஹத் பாசில் வடிவேலு இணைந்து நடித்துள்ள படம் 'மாரீசன்'. சுதீஷ் சங்கர் இயக்கி உள்ளார்.கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லர் கதையில் உருவாகியுள்ளது. 'மாமன்னன்' ப ட த்தின் வெற்றிக்கு பின் நடி கர்கள் வடி வேலு, பஹத் பாசில் கூட்ட ணியில் உரு வாகி உள்ள மற்றொரு படம். இதன் டிரைலர் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து திருவண்ணாமலைக்கு பைக்கில் பஹத்துடன் பயணம் செய்கிறார் வடிவேலு, ஞாபகமறதி நோயால் அவதிப்படும் வடிவேலுவிடம் இருக்கும் பணத்தை திருட நினைக்கிறார் பஹத். இவர்கள் இடையேயான நிகழ்வுகள் தான் படத்தின் ஒருவரிக் கதை. கவனம் பெற்றுள்ள இந்த பட டிரைலர் 'மாமன்னன்' பாணியில்  சீரியஸாக இருக்கும் . படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படம் ஜூலை 25ல் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். 

Jul 17, 2025

தமிழில் ரீமேக் ஆகும் 'கோர்ட்'  தெலுங்கு பட உரிமையை நடிகர் பிரசாந்த் தந்தையான இயக்குனர் தியாகராஜன் பெற்றுள்ளார்.

ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் , தெலுங்கில் நடிகர் நானி தயாரிப்பில் பிரியதர்ஷி புலி கொண்டா நடிப்பில் வெளிவந்த படம் 'கோர்ட்'. குறைந்த பட் ஜெட்டில் தயாராகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற, இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கான உரிமையை நடிகர் பிரசாந்த் தந்தையான இயக்குனர் தியாகராஜன் பெற்றுள்ளார். பிரசாந்த் நடிக்க, தியாகராஜன் இயக்குவார் என தெரிகிறது.

Jul 17, 2025

ஆஸ்கர் விருதுக்கு படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராக சேர நடிகர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித் துள்ளனர். கமல் வெனியிட்ட பதிலில் "ஆஸ்கர் அகாடமியில் இணைவது பெருமை. இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டுமல்ல, இந்திய திரைப்படம் மற்றும் என்னை வடிவமைத்த ஏராளமான கதை சொல்லாளர்களுக்கும் சொந்தமானது. உலகளாவிய திரைப் பட சமூகத்துடன் ஈடுபட ஆர்வமாய் உள்ளேன். என்னுடன் தேர்வான சக கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

Jul 17, 2025

மோகன்லால் மகளும் நடிகையாக களமிறங்க மோகன்லாலே தயாரிக்கிறார்.

மோகன்லால் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மகன் பிரணவ் உதவி இயக்குனராக பணியாற்றிவிட்டு நடிகராக பயணித்து வருகிறார். அடுத்து இவரது மகளான விஸ்மாயாவும் நடிகையாக அறிமுகமாகிறார்.'துடக்கம்' (தொடக்கம்) என பெயரிடப்பட்டுள்ள இதை 2018 படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். மோகன்லாலே தயாரிக்கிறார்.

1 2 ... 44 45 46 47 48 49 50 ... 89 90

AD's



More News