25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Aug 21, 2025

மணிரத்னம் இயக்கத்தில் நாயகனாக விக்ரம் மகன் துருவ், நாயகியாக ருக்மணி வசந்த்.

சமீபத்தில் தக் லைப் படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது. எனது அடுத்தபடம் இளம் நடிகர்களை வைத்து காதல் கதையில் உருவாகும் என மணிரத்னம் கூறி வந்தார். இப்போது இந்த படத்தில் நாயகனாக விக்ரம் மகன் துருவ், நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க  நவம்பரில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

Aug 21, 2025

ஆக., 22ல் "இந்திரா, சினிமா பேய்' ஆகிய இரு படங்கள் மட்டுமே வெளியாகின்றன.

தமிழில் வாரம் ஏழெட்டு படங்கள் கடந்த வாரத்திற்கு முன்பு வரை வெளியாகின. கடந்தவாரம் 'கூலி' படம் மட்டுமே வெளியானது. தமிழகத்தில் 90 சதவீத தியேட் டர்களை இந்தப்படம் ஆக்கிரமித்ததால் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. ஆக., 22ல் "இந்திரா, சினிமா பேய்' ஆகிய இரு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. மறுவெளியீடாக விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன் படம் மறுவெளியீடாக வருகிறது

Aug 21, 2025

கேப்டன் பிரபாகரன்'ஆக., 22ல் ரீ-ரிலீஸாகிறது.

மறைந்த நடிகர் விஜயகாந்த் நடிப்பில் 1991ல் அவரின் 100வது படம் இளையராஜா இசையமைக்க, ஆர்கே செல்வமணி இயக்கி வெளியான  'கேப்டன் பிரபாகரன்'.அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படம். சரத்குமார், மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன் நடித்தனர். ஆக., 25ல் விஜயகாந்த் பிறந்தநாள் முன்னிட்டு, 4கே தரம் மற்றும் 7.1 சவுண்ட் மிக்ஸிங் உடன் இந்த படம் ஆக., 22ல் 500 தியேட்டர்களில் ரீரிலீஸாகிறது.

Aug 14, 2025

தேசிய விருது தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி குரல் எழுப்பி உள்ளார்,

ஒவ்வொரு முறை தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போது அதில் சர்ச்சைகள் எழும். இந்தமுறை நடிகை ஊர்வசி குரல் எழுப்பி உள்ளார். இத்தனைக்கும் இவருக்கு இந்தாண்டு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது 'உள்ளொழுக்கு' என்ற மலையாள படத்திற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், "எதன் அடிப்படை யில் ஷாரூக்கான் சிறந்த நடிகர் என தேர்வு செய்தீர்கள். சிறந்த நடிகரான விஜயராகவனை துணை நடிகராக தேர்வு செய்தது ஏன். பூக்காலம் படத்திற்காக அவர் பல மணி நேரம் மேக்அப் போட்டு கஷ்டப்பட்டு நடித்தார்.தமிழில் நான் நடித்த ஜே.பேபி படமும் சிறந்த நடிகைக்கான விருது பரிந் துரையில் இருந்தது. ஆடுஜீவிதம் படத்திற்கு ஒரு பாராட்டு கூட இல்லை. கஷ்டப்பட்டு நடிக்கிறோம், வரி கட்டுகிறோம். நீங்கள் கொடுப்பதை வாங்கிச் செல்ல இது ஓய்வூதியம் கிடையாது" என தெரிவித்துள்ளார்

Aug 14, 2025

தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் ,யோகிபாபு சந்திப்பு

 மனோகர் ரெட்டி இயக்கும் இப்படத்தில் தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் நடிக்க, நடிகர் யோகி பாபு “குர்ரம் பாப்பி ரெட்டி' படம்  மூலம் தெலுங்கில் அறிமுகமாகி நடிக்கிறார். இதில் நடித்தபோது இவர்களுக்குள் நட்பு உருவானது. பிரம்மானந்தம் வீட்டிற்கு சென்ற யோகிபாபுவிற்கு 'நான் பிரம்மானந்தம் ' எனும் புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கினார் பிரமானந்தம்.

Aug 14, 2025

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'மக்காமிஷி' பாடல்

ரவி மோகன், பிரியங்கா மோகன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் கடந்தாண்டு இதில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பால் டப்பா எழுதி டகால்டி உடன் இணைந்து பாடிய 'மக்காமிஷி' பாடல் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடல் தற்போது யுடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. 'ஆத்தங்கரை ஓரத்தில்.... அவ என்ன தேடி வந்த அஞ்சல.... டங்கமாரி..., உனக்கென்ன வேணும் சொல்லு...' ஆகிய பாடல்களை தொடர்ந்து ஹாரிஸ் இசையில் வெளிவந்த 5வது 100 மில்லியன் பாடல் இது.

Aug 14, 2025

சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் 'சிறை'.

சுரேஷ்ராஜகுமாரிஇயக்கியுள்ளபடம் 'சிறை'. விக்ரம்பிரபுநாயகனாகநடிக்கும்,இப்படத்தில் 'டாணாக்காரன்' இயக்குனர் தமிழ் கதை எழுத,  தயாரிப்பாளர் லலித்குமாரின் மகன் அக்ஷய் 2வது ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். சிறை பின்னணியில் சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Aug 14, 2025

இயக்குனர் ஆகிறார் ரோபோ சங்கர்

ரோபோ சங்கர் மேடை கலைஞராக இருந்து, காமெடி நிகழ்ச்சிகளில்,, பின்னர் நடிகரானவர்.. 100க்கும் மேற் பட்ட படங்களில் நடித்துவிட்ட இவர் அடுத்து இயக்குனராக களமிறங்குகிறார். முழு நீள காமெடி படமாக உருவாகிறது. பெரும்பாலும் சின்னத்திரையை சேர்ந்த நடிகர்கள் அதிகம் நடிக்க உள்ளனர். இதற்கான பணிகள் முழு வீச்சில் நடக்கிறது.

Aug 14, 2025

இந்திய அனிமேஷன் படங்களில் 210 கோடியை கடந்த 'மகாவதார் நரசிம்மா' அதிக வசூல் குவித்த படமானது.

கடவுள் விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை கருவாகக் கொண்டு உருவான அஸ்வின் குமார் படம் 'மகாவதார் நரசிம்மா'. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் ரிலீசானது. கடவுள் விஷ்ணு வின் அவதாரங் வைத்து இயக்குநர் அஷ்வின் குமார் கன்னடத்தில் 3டி  தொழில்நுட்பத் தில் அனிமேஷன் படம் இயக்குகிறார். இதன் முதல் படமாக 'மஹாவதார் நரசிம்மா'. விஷ்ணுவின் நரசிம்மர் அவதாரத்தை  மையமாக  வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.  உலகளவில் ரூ.210 கோடி வசூலித்து இந்திய அனிமேஷன் படங்களில் அதிக வசூல் குவித்த படமானது.இதையடுத்து விஷ்ணுவின் மற்ற அவதாரங்களை வைத்து 'மஹாவதார் பரசுராம்', 'மஹா வதார் ரகுநந்தன்', 'மஹாவதார் கோகுலானந்தா', கல்கி பகுதி 1' மற்றும் 'மஹாவ தார் கல்கி பகுதி 2' ஆகிய படங்களை  2027, 2030, 2033, 2035, 2037 ஆண்டுகளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

Aug 14, 2025

ஒரே தியேட்டரில் ரஜினியின் முதல் படம், 50வது ஆண்டு படம் ரிலீஸ்.

முதல் படமும் 50வது ஆண்டு படமும் ஒரே தியேட்டரில் ரிலீஸ் ஆவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.1975, ஆகஸ்ட் 15ல் ரஜினியின் முதல் பட மான அபூர்வ ராகங்கள்' சென்னையில், மிட்லேண்ட், அகஸ்தியா, ராக்ஸி, கிருஷ்ண வேணி ஆகிய தியேட்டர்களில் வெளியானது. இதில் கிருஷ்ண வேணி தவிர மற்ற தியேட்டர் களை மூடிவிட்டனர். தி.நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் தற்போது திரை யுலகில் ரஜினியின் 50வது ஆண்டு திரைப்படமான 'கூலி' ஆகஸ்ட் 14ல் ரிலீஸ்.

1 2 ... 41 42 43 44 45 46 47 ... 89 90

AD's