25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Sep 04, 2025

புது கடையை தொடங்கிய நடிகர் சூரி.

சூரி நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக மதுரையில் அம்மன் உணவகம் என்ற பெயரில் அவர் ஹோட்டல் நடத்துகிறார். இந்நிலையில் சூரி புதிதாக ஸ்வீட்ஸ் கடையை திறந்து இருக்கிறார். சூரி மற்றும் அவருடன் பிறந்த TWIN சகோதரர் லக்ஷ்மணன் இருவரும் விநாயகர் சதுர்த்தி மற்றும் பிறந்தநாள் என இரண்டும் ஒரே நாளில் வந்த நிலையில் புது தொழிலை அந்த நாளில் தொடங்கி இருக்கின்றனர். .

Sep 04, 2025

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரத்தின் அடுத்த படம்.

 இயக்குனர் சிதம்பரம் கடந்தாண்டு வெளியான 'மஞ்சும்மல் பாய்ஸ்' என்ற வெற்றி படத்தை தந்தவர்.. அடுத்த படம் பற்றிய எந்த தகவலும் இல்லை. இப்போது, அம்மா, மகன் சம்பந்தப்பட்ட கதையாக 'பாலன்' எனும் படத்தை  ஜீத்து மாதவன் இதற்கு கதை எழுத ,தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார்.

Sep 04, 2025

மூன்று விதமான தோற்றத்தில் 'மகுடம்' படத்தில் விஷால்.

விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் ரவி அரசு இயக்கத்தில் படம் 'மகுடம் ". விஷாலின் 35வது படமான இதில், அவர் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளார். அவற்றின் முதல் பார்வையை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. ஒன்றில் வயதான தோற்றத்திலும், இரண்டில் இளமையான தோற்றத்தில் விஷால்..

Sep 04, 2025

ஜெய்யின் 'ஒர்க்கர்’

புதிய படத்துக்கு 'ஒர்க்கர்' என தலைப்பு வைக்கப்பட்டு ஜெய், யோகி பாபு நடிக்கும் 'உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதையில் இது உருவாகிறது' என்கிறார் இயக்குனர் வினய் கிருஷ்ணா. இந்த படத்தின் மூலம் கன்னட நடிகை ரீஷ்மா நனையா ஹீரோயினாக அறிமுகம் ஆகி, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Sep 04, 2025

'பிளாக்மெயில்' செப். 12ல் ரிலீஸ்.

ஜி.வி.பிரகாஷ், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி நடித்துள்ள படம்  மு.மாறன் இயக்கத்தில். 'பிளாக்மெயில்' ,ஆக., 1ல்ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு 'தள்ளிப்போனது. பின்னர் ஆக., 22ல் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தன. இப்போது செப்., 12ல் ரிலீஸ் என புதிய தேதியை அறிவித்துள்ளனர்.

Sep 04, 2025

செப்., 5ல் வெளியாக உள்ள 'மதராஸி' இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும்.

சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'மதராஸி' படம் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் செப்., 5ல் வெளியாகிறது. இப்படத்திற்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்று வழங்கப்பட்டுள்ளது. படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள். சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் இரண்டரை மணி வருவது அதிகமாகி உள்ளது. இது ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது.

Sep 04, 2025

'தணல்' படத்தின் கரு . 'வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்'.

அதர்வா, லாவண்யா திரிபாதி, அஷ்வின் காக்மானு நடித்துள்ள படம் ரவீந்திர மாதவா இயக்கத்தில் 'தணல்'.ஆக., 29ல் படம் ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால் வெளியாகவில்லை. இப்போது படத்தின் டிரைலரை வெளியிட்டு அதன் உடன் வரும் செப்., 12ல் ரிலீஸ் என புதிய தேதியை அறிவித்துள்ளனர். . 

Aug 28, 2025

போயஸ் கார்டனில் 7,000 சதுரஅடி ரூ.100 கோடியில் நயன்தாரா வீடு,

 சில வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட இந்த வீட்டை பெரிய தொகை தந்து விலைக்கு வாங்கி, இடித்து, ஸ்டுடியோ வடிவில் நயன்தாரா போயஸ் கார்டனில் 7,000 சதுர அடியில் ரூ.100 கோடியில், வீட்டை கட்டி முடித்துவிட்டார்.. 3 தளங்களில் கட்டியிருக்கிறார், சினிமாவை மிஞ்சும் வகையில் தோட்டம் அருங்காட்சியகம் போன்று பழங்கால தாழி, காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி ஊடுருவும் வகையில் கட்டமைப்புடன் காட்சி தருகிறதாம் நயன் வீடு, 3 தள வீட்டில், முதல் தளத்தில் கணவர், மகன்களுடன் நயன்தாரா வசிக்கிறார். 2வது தளத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு தனி அறை என கண்களை சுவரும் கனவு இல்லமாக கட்டியிருக்கிறாராம். இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன,

Aug 28, 2025

'மகுடம்'விஷாலின் 35வது படம்

விஷால், துஷாரா விஜயன், அஞ்சலி நடிக்கும், ரவி அரசு இயக்கத்தில்,  புதிய படத்திற்கு 'மகுடம்' என பெயரிட்டுள்ளனர். விஷாலின் 35வது படமான இது கடல் சார்ந்த ஒரு ஆக்ஷன் படமாக உருவாகிறது.1992ல் பிரதாப் போத்தன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் ஏற்கனவே 'மகுடம்' படம் வெளியாகி உள்ளது.

Aug 28, 2025

நீண்ட இடைவெளிக்கு பின் அர்ஜூன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

அப்பா, மகள் தொடர்பான கதையில் ,அர்ஜூன் மகளாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். சுபாஷ் இயக்குகிறார். நீண்ட இடைவெளிக்கு பின் அர்ஜூன் கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அபிராமி நடிக்க,இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார்  

1 2 ... 39 40 41 42 43 44 45 ... 89 90

AD's



More News