25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Aug 14, 2025

2040ல் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள 'ரெட் பிளவர்' கதை.

நடிகர் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ள ,ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் படம் 'ரெட் பிளவர்'. இதன்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விக்னேஷ், "ரெட் பிளவர் படத்தின் கிரா பிக்ஸ் காட்சிகளுக்கே அதிக செலவானது. இந்த படம் ரூ.8 கோடி பட்ஜெட்டை தாண்டியது" என்றார். 2040ல் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அந்த காலகட்டத்தில் வரும் பிரச்னையை ரெட் பிளவர் என்ற ஆர்மி எப்படி தடுக்கிறது என்ற ரீதியில் உருவாகியுள்ளதாம். அப்போதைய பிரதமராக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளார்

Aug 07, 2025

'பரம் சுந்தரி “ரிலீஸ் தேதி அறிவிப்பு.

துஷார் ஜலோட்டா இயக்கி , நடிகை ஜான்வி கபூர் ஹிந்தியில் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக 'பரம் சுந்தரி என்ற படத்தில் நடித்துள்ளார். வட மாநில பையனுக்கும், தென் மாநில பொண்ணுக்கும் உண்டான காதல், திருமணம், அதில் வரும் பிரச்னைகளை கலகலப்பாக இந்தப டம் பேசுகிறது. ஆக. 29ல் படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.

Aug 07, 2025

விக்னேஷ் ராஜா இயக்கத்தில்'தனுஷ் 54' படப்பிடிப்பு தொடங்கியது.

'தனுஷ் 54'  54வது படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பழைய எஸ்டிடி பூத் ஒன்றில் தனுஷ் நின்று பேசுவது போன்ற ஒரு போட்டோவை வெளியிட்டு இந்த படம் துவங்கியதாக அறிவித்துள்ளனர். தனுஷ் இயக்கி நடித்து, உள்ள 'இட்லி கடை படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடக்கின் றன..

Aug 07, 2025

கிங்டம்' தெலுங்குப் படம் முதல் நாளில் 39 கோடி வசூலித்தது.

விஜய் தேவரகொண்டா, பாக் யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் கவுதம் தின்னனுாரி இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் 'கிங் டம்'. ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியாகி உள்ளது. அண்ணன், தம்பி சென்ட்டிமென்ட், அதிரடி ஆக்ஷன் கலந்து வெளியாகி உள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நாளில் ரூ.39 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

Aug 07, 2025

ஜி.வி.பிரகாசுக்கு தேசிய விருது .

 'சூரரை போற்று' படத்துக்காக தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகா சுக்கு, மீண்டும் தேசிய விருது கிடைத்துள்ளது .71-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் 'பார்க்கிங்' படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தது. 'வாத்தி’படத்தில் இசையமைத்த ஜி.வி.பிரகாசுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது. அவர் கூறும்போது, "ஜி.வி.பிரகாசுக்கு 2-வது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்திருப்பதால்  முன்னாள் மனைவி சைந்தவி  வாழ்த்தி பாராட்டி விருதுக்காக அவரை தேர்வு செய்த தேர்வுக்குழுவினர், வாத்தி படத்தில் அவரை இடம்பெற செய்த படக்குழுவினர், படத்தில் என்னையும் ஒரு பகுதியாக இணைத்திட்ட தனுசுக்கும் என் நன்றிகள்”, என்றார்.ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும், இசை நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்று வருகிறார்கள் .இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிகராகவும் பயணிக்கிறார். இவர் நடித்துள்ள 'பிளாக்மெயில்' படம் ரிலீஸாவதாக இருந்தது. நிதி பிரச்னையால் கடைசிநேரத் தில் தள்ளி வைக்கப்பட்டது. இதேபோல்இவர் நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த அடங்காதே படம் ஆக., 27ல் ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால் இப்பட தயா ரிப்பாளர் சரவணன் சிறையில் உள்ளதால் தள்ளிப் போகிறதாம்.

Aug 07, 2025

புதுமையை விரும்பும்  நாகார்ஜுனா

ஆகஸ்ட் 14 ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 'கூலி' படம் ரிலீஸ்  ஆகிறது. ஆக., 2ல் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பாடல் வெளியீட்டு விழா. படத்தின் டிரைலரும் வெளியானது. அனிருத் இசையமைத்து, நாகார்ஜுனா, அமீர் கான், சவுபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இதில் வில்லனாக நடித்த நாகர்ஜூனா, ஐதராபாத்தில் பேசும்போது “எனக்கு புதுமை பிடிக்கும். வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்ய விரும்புவேன். லோகேஷ் உடன் பணி செய்ய ஆசைப்பட்டேன். கூலி கதையை கேட்டதும் பிடித்து விட்டது. ரஜினி இந்த கதையை  ஏற்றாரா என  கேட்டேன். ஏனென் றால் இதில் நான் நடித்த 'சைமன்' கதாபாத்திரம் தான் ஹீரோவை போல இருக்கும். ஹீரோவையும், வில்லனையும் லோகேஷ் சமமாக சித்தரிக்கிறார். படங்களில் எப்போதும் நல்லவர்களாக நடிப்பது நல்லதல்ல" என்றார்.

Aug 07, 2025

ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா.

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட். பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர தம்பதியர் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தங்களது குடும்பத்தாருடன் வசிக்க மும்பை, பாந்த்ரா மேற்குப் பகுதியில் 250 கோடி ரூபாய் செலவில் கனவு இல்லம் ஒன்றை கட்டி உள்ளனர். 6 மாடி கொண்ட இந்த வீட்டின் பணிகள் முடிந்துவிட்டதால் விரைவில் அங்கு குடியேற உள்ளனர். 

Aug 07, 2025

தெலுங்கு திரைப் பட தொழிலாளர் கூட்டமைப்பு  30 சதவீதம் ஊதிய உயர்வு கோரி ஸ்டிரைக்

30 சதவீதம் ஊதிய உயர்வு கோரி தெலுங்கு திரைப் பட தொழிலாளர் கூட்டமைப்பு ஸ்டிரைக்கில் ஈடுபட் டுள்ள நிலையில். படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை, எந்த திரைப்பட தொழிலாளர் சங்கத்திலும் உறுப் பினர் அல்லாதவர்களை, தங்கள் படங்களின் படப்பிடிப்புக்கு பயன்படுத்துவோம். தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் சினிமா தொழில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

Aug 07, 2025

'வார் 2' ஆக., 14ல் ரிலீஸாகிறது.

ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன்,  கியாரா அத்வானி நடித்துள்ள ஹிந்தி பட மான 'வார் 2' ஆக., 14ல் ரிலீஸாகிறது. ஹிருத்திக் கூறுகையில், "ஜூனியர் என்டிஆர் உடன் பணிபுரிந்தது நம்ப முடியாத அனுபவமாக உள்ளது. எப்படிப்பட்ட காட்சி என்றாலும் ஒத்திகை கூட தேவையில்லை, ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார். இது என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவரின் நடனத்தையும் பார்த்து அசத்து போய் இருக்கிறேன். அவர் மூலம் இந்தப்படம் எனக்கு ஒரு கற்றல் அனுபவத்தை தந்தது" என்றார் ஹிருத்திக்.

Aug 07, 2025

முதல்முறையாக  நாளை ஒரேநாளில் ரிலீஸாக உள்ள 13 படங்கள்.

நாளை (ஆக., 8ல்) "அகதி, பாய், காத்துவாக்குல ஒரு காதல், மாமரம், நாளை நமதே, நெடுமி, நிஷா, ஒரு கைதியின் நாட்குறிப்பு, ராகு கேது, ரெட் பிளவர், தங்க கோட்டை, உழவர் மகன்,வானரன்" ஆகிய 13 படங்கள் ரிலீஸாகின்றன. இந்தாண்டுஒரேநாளில் இவ்வளவு படங்கள் வெளியாவது இதுவே முதல்முறை. இவற் றில் பல படங்களுக்கு ஓரிரு தியேட்டர்கள் அல்லது காட்சிகள் கிடைக்குமா?நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ்  நடித்த  “வானரன்” நாளை ரிலீஸாகின்றது.நடிகர் நாகேஷின் பேரனும், நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் நாகேஷ் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில் நாயக னாக நடித்துள்ள படம் 'உருட்டு உருட்டு'. நாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார். படத் தின் இசை வெளியீட்டு விழா வில் பேசிய கஜேஷ், "என் தாத்தா, தந்தையின் பெயரை நிச்சயம் காப்பாற்றுவேன். இருவரை போல நானும் திரைத் துறையில் ஜொலிப்பேன். சினி மாவுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அதிகம் பேசாமல் சாதிக்க விரும்புகிறேன்" என்றார்.

1 2 ... 42 43 44 45 46 47 48 ... 89 90

AD's