25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Aug 28, 2025

பசங்க திரைப்படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம் இன்று CEO.

பசங்க திரைப்படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராம், சென்னையில் உள்ள மிகப்பெரிய நிறுவனமான ஆற்றல்- என்ற எரிசக்தி நிறுவனத்தின் CEO-ஆக பணியமர்த்தப்பட்டு இருக்கிறார் 2050-ஆம் ஆண்டுக்குள் பூமியை பாதிக்கும் கார்பன் வெளியிட்டை பூஜ்ஜியமாக மாற்ற வேண்டும் ,என்ற   குறிக்கோளுடன் இந்த நிறுவனத்துடன் சேர்ந்து செயல்படுகிறார்.

Aug 28, 2025

சரவணன் நடிக்கும் 'போலீஸ் பேமலி “.

 முதன்மை கதாபாத்திரங்களில் ,நடிகர்கள் சரவணன், சுகுமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் படம்  போலீஸ் பேமிலி' பாலு இயக்கியுள்ளார்.. போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் குடும்பச்சூழல் ஆகியவற்றையும், சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. 

Aug 28, 2025

டிரைலர் ரிலீஸ் அவதார் 3'.

அவதார் 3 படம் 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' - என்ற பெயரில்  ஜேம்ஸ் கே மரூன் ஹாலிவுட் இயக்குனர் இயக்கத்தில் தயாராகிறது.. பிரம்மாண்டமாக வியக்க வைக்கும் வகையில் விஎப்எக்ஸ் காட்சிகளுடன் டிரைலர் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வெளியா கியுள்ளது. டிச., 19ல் படம் வெளியாகிறது.

Aug 28, 2025

செப். 5ல் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' துல்கர் சல்மானின்  'காந்தா'. படங்கள் ரிலீஸாகிறது. 

 நடிகர் துல்கர் சல்மான் ,நடிகர் ராணா டகுபதி உடன் இணைந்து தயாரித்து, நாயகனா கவும் நடிக்கும் படம் 'காந்தா'. முக்கிய வேடத்தில் சமுத்திரக னியும் நாயகியாக பாக்யஸ்ரீயும்  நடிக்கின்றனர். செல்வமணி செல்வராஜ் இயக்க  தமிழ், தெலுங்கில்  தயாராகிறது. ஆகஸ்ட் 1ல் படத்தை ரிலீஸ் செய்ய திட் ட மிட்டனர். ஆனால் பட பணிகள் முடியாததால் செப். 5ல் வெளியிட முடிவெடுத்துள்ளனர். அன்றைய தினம் சிவகார்த்திகேயனின் 'மதராஸி'படமும் ரிலீஸாகிறது. 

Aug 21, 2025

பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் …

 அட்லி. இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து சூப்பர் ஹீரோ மாதிரியான சயின்ஸ் பிக்ஷன் பட ம். இதற்கான முன்கட்ட பணிகள் நடப்பதோடு நடிகர்கள் தேர்வும் நடக்கிறது. தீபி படுகோனே நாயகியாக நடிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா உள்ளிட்டோரும் அடுத்தடுத்து இணைய உள்ளனர். இந்நிலையில் 'மென் இன் பிளாக், பேட் பாய்ஸ்' போன்ற படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் இதில் முக்கியமானவில்லன் வேடத்தில் நடிப்பதாக பேச்சுவார்த்தை நடக்கிறது.

Aug 21, 2025

ராஷ்மிகா மந்தனாவின் ஹிந்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

தற்போது ஆதித்யா சர் போதார் இயக்கத்தில் தமா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.. அவருடன் ஆயுஷ்மான் குரானா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனார். ஹாரர், திரில்லர் படமாக உருவாகி உள்ள இதன் டீசர் வெளியாகி உள்ளது. படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவித்துள்ளனர். 

Aug 21, 2025

'ரிவால்வர் ரீட்டா' படத்தை மலை போல நம்பியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் கீர்த்தி சுரேஷ் அவர் கதை யின் நாயகியாக நடித்த படங்களும் ஓட வில்லை. இப்போது 'ரிவால்வர் ரீட்டா' படத்தை மலை போல நம்பியிருக்கி றார். ஆண் துணை இல்லாத வீட்டில் உள்ள பெண்களுக்கு 2 கேங்ஸ்டர் டார்ச்சர் கொடுக்கிறார்கள். அவர் களை கீர்த்தி சுரேஷ் என்ன செய்கிறார் என்பது கதை. சந்துரு இயக்கி உள்ளார். ஆக., 27ல் படம் ரிலீஸாகிறது.

Aug 21, 2025

39 ஆண் டுகளுக்கு பின் இப்போது ரஜினியுடன் போட்டி போடுகிறார் ஹிருத்திக் ரோஷன்.

1986ல் 'பகவான் தாதா' என்ற ஹிந்தி படத்தில் ரஜினியின் தத்து பிள்ளையாக சிறு வயதில் ஹிருத்திக் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடித்துள்ள 'கூலி' படமும், ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'வார் 2' படமும் இன்று பான் படமாக வெளியாகிறது 39 ஆண் டுகளுக்கு பின் இப்போது ரஜினியுடன் போட்டி போடுகிறார். 

Aug 21, 2025

இரு விருதுகள் வென்ற மாளவிகா .

பிலிம்பேர் வழங்கிய 'பிலிம்பேர் கிளாமர் அண்ட் ஸ்டைல் தென்னிந்தியா 2025 விருது களில் நடிகை மாளவிகா மோகனன், "ஹாட்ஸ்டெப்பர் ஆப் தி இயர்' மற் றும் ஹாட்டஸ்ட் ஸ்டார் ஆப் தி இயர்' என்ற இரண்டு விருதுகளை வென்றுள்ளார். 

Aug 21, 2025

அக்., 2ல் படம் ரிலீஸாகிறது.காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப் டர் 1' படம் உருவாகி வருகிறது.

 ரிஷப் ஷெட்டி இயக்கி, நடிக்க, முக்கிய வேடங்களில் ஜெயராம், ருக்கு மணி வசந்த் உள்ளிட்டோர் நடிக்க 'காந்தாரா சாப் டர் 1'  படம் உருவாகி வருகிறது .சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்தது. வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு இதில் 'கனகாவதி' ஆக நடிக்கும் ருக்மணி வசந்த்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரிஷப் ஷெட்டி.அடுத்து 'ஜெய் ஹனுமான், சத்ரபதி சிவாஜி மகாராஜ்' படங்கள் அவர் கைவசம் உள்ளன. அதனை முடித் ததும் ‘நான் ஈ, பாகுபலி' படங்களில் இணை இயக்குனராக இருந்த அஸ்வின் கங்கராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இவர் 'ஆகாச வாணி' படத்தை இயக்கியுள்ளார்.

1 2 ... 40 41 42 43 44 45 46 ... 89 90

AD's



More News