25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jul 31, 2025

மலையாள  நடிகர் மோகன்லால் தமிழில் பிசியாக நடிக்க உள்ளார்.

 மலையாள  நடிகர் மோகன்லால், ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து,சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.அதேபோல், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள அவரது 64வது படத்திலும் மோகன்லால் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் படங்கள் என அடுத்தடுத்து தமிழில் மோகன்லால் பிசி யாக நடிக்க உள் ளார். மலையாள  நடிகர் மோகன்லால், அவ்வப் போது தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

Jul 31, 2025

'டெவிலன்' 48 மணி நேரத்தில் தயாரான 'நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' சாதனையை படைத்துள்ளது.

 பிகாய் அருண் என்பவர் இயக்கத்தில் ராஜ்குமார் தயாரித்து நடித்துள்ள 'டெவிலன்' படத்தை 48 மணிநேரத்தில் எடுத்து திரையிட்டு காண்பித்துள் ளனர். திரைக்கதை எழுதுதல், ஷூட்டிங், எடிட், பின்னணி இசை உள்ளிட்ட அனைத்து வேலை களையும் 48 மணிநேரத்தில் முடித்து திரையிட்டும் காண்பித்து 'நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' சாதனையை படைத்துள்ளது.

Jul 31, 2025

ரீரிலீஸாகும் 'சேது'.

விநியோகஸ்தர்களால் ஆரம்பத்தில் புறக்கணிக் கப்பட்ட படம் பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு தேசிய விருது வரை வென்றது.இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் டிஜிட்டலுக்கு மெருகேற்றப்பட்டு மீண்டும் ரிலீஸாகிறது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது. பல ஆண்டுகளாக சினிமாவில் போராடி வந்த நடிகர் விக்ரமிற்கு அடையாளம் தந்த படம் 1999 ல் வெளியான 'சேது'. பாலா இயக்கிய முதல் படம். அபிதா, சிவகுமார், ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்தனர்.

Jul 31, 2025

'பிளாக்மெயில்' ரிலீஸ் தேதி .

 ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடித் துள்ள படம் மு.மாறன் இயக்கத்தில் நாயகி யாக தேஜு ,அஸ்வினி நடித்துள்ளார். பிந்து மாதவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கிரைம் கலந்த சஸ்பென்ஸ், திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இதன் படப் பிடிப்பு முடிந்தும் சில மாதங்களாக சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 1ல் இப்படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.

Jul 31, 2025

ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான  'சயாரா' ஹிந்திப் படம் வசூலைக் குவிக்கின்றன

புதுமுகங்கள் அஹான் பாண்டே, அனீத் பட்டா நடிப்பில், மோகித் சூரி இயக்கத்தில் கடந்தவாரம் வெளியான ஹிந்திப் படம் 'சயாரா'. ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தபடம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று யாரும் எதிர்பார்க்காத  வகையில் 130 கோடிக்கு மேல் வசூலைக் குவித்துள்ளது. இந்தவாரத்திற்குள் 150 கோடியை தாண்டும் என்றும், நிகரலாபமாக மட்டும் 100 கோடியை கடக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Jul 31, 2025

' ஹரிஹர வீரமல்லு 'முதல் நாளில் ரூ.70 கோடி வசூல்..

ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில் பான் இந்தியா படமாக 'ஹரிஹர வீரமல்லு  ஜூலை 24 வெளியானது. தெலுங்கு தவிர்த்து பிறமொழிகளில் சுமாரான வரவேற்பே கிடைத்துள்ளது. இருப்பினும் முதல்நாளில் இந்தப்படம் உலகளவில் ரூ.70 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இதனிடையே படத்தின் நீளம் ரெண்டே முக்கால் மணிநேரம் இருந்தது. தற்போது 15முதல் 30 நிமிடம் வரை குறைத்துள்ளனராம்.

Jul 31, 2025

டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள்.

உலக அளவில் வெளியாகும் படங்களின் ரேட்டிங், அவற்றின் தகவல்கள் அடங்கிய இணைய தளம் ஐஎம்டிபி. 2025 அரையாண்டில் வெளியான இந்திய படங்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ள னர். அதில் ஹிந்தி படமான 'சாவா' முதலிடத்தில் உள்ளது. தமிழ் படங்களான 'டிராகன்' 2வது, 'ரெட்ரோ' 5வது, 'விடா முயற்சி' 10வது இடங்களை பிடித்தன. ஹிந்தி படங்களான 'தேவா' 3வது, "ரெய்டு 2' 4வது, 'தி டிப்ள மோட்' 6வது, 'சித் தாரே ஜமீன் பர்' 8வது, 'கேசரி சேப்டர் 2' 9வது,மலையாள படமான 'எல் எம்புரான்' 7வது இடங்களை பிடித்தன. இந்த பட் டியலில் ஒரு தெலுங்கு படம் கூட இடம் பெறவில்லை.

Jul 31, 2025

வில்லனுக்கு அதிக சம்பளம்.

ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'வார் 2'படத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் வில்லனாக நடித்து பாலி வுட்டில் அறிமுகமாகிறார்.. இந்த படத்தில் நாயகன் ஹிருத்திக்கிற்கு 50 கோடி சம்பளம். ஆனால் என் டி ஆருக்கு 60 கோடி சம்பளமாம். ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லராக உருவாகி உள்ள இந்த படம் ஆக., 14ல் பான் இந்தியா படமாக வெளியாகிறது.

Jul 24, 2025

அதர்வாவின் 'தணல்'  ஆக.,29ல் ரிலீசாகும் .

நடிகர் அதர்வா நடித்து, திரைக்கு வந்த 'டிஎன்ஏ' படம் வரவேற்பை பெற்ற 'டிஎன்ஏ' படம் .இந்த வெற்றியை கொண்டு ஓராண்டாக கிடப்பில் இருந்த அதர்வா நடித்த 'தணல்' படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக அதர்வா நடித்துள்ள இப்படம் 'வலி உன்னை ஹீரோவாக்கும் அல்லது வில்லனாக்கும்' என்ற கருப்பொருளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. லாவண்யா திரிபாதி நாயகியாக நடித்துள்ளார். 

Jul 24, 2025

'கிங்டம்' ஜூலை 31ல் ரிலீஸ்

விஜய் தேவரகொண்டா ,கவுதம் தின்னூரி இயக்கத்தில் நடித்துள்ள 12வது படம் 'கிங்டம்', நாயகியாக பாக்ய ஸ்ரீ போர்ஸ் நடிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.இந்தபடம் ஜூலை 4ல் ரிலீஸாக வேண்டிய இந்த படத்தின் பணிகள் முடியாததால் ரிலீஸை தள்ளி வைத்தனர். இப்போது ஜூலை 31ல் படம் ரிலீஸ் என அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய புரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். தெலுங்கு, தமிழில் ரிலீஸாகிறது.

1 2 ... 43 44 45 46 47 48 49 ... 89 90

AD's



More News