25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jul 17, 2025

. பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் உடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான  தருணம். ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வரலட்சுமி ..

'ரிசானா ஏ கேஜ்டு போட் என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.'போடா போடி' படம் மூலம் நாயகியாக அறி முகமான வரலட்சுமி, தமிழ், தெலுங்கு, கன் னடம், மலையாளத்திலும் நடித்துள்ளார்.. பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அவருடன் நடிப்பது பற்றி வரலட்சுமி "ஜெர்மி உடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான   தருணம்.   உலக சினிமா  ரசிகர்களால் மதிக்கப்படும் நடிகர். சர்வதேச ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி" என்றார் வரலட்சுமி .

Jul 17, 2025

கியாராவிற்காக யஷ் செய்த செயல்.

'கேஜிஎப் 'படங்களின் நாயகனான கன்னட நடிகர் யஷ் தற்போது 'டாக்ஸிக்' என்ற படத்தில் நடிக் கிறார். நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்க, கீது மோகன்தாஸ் இயக்குகி றார். கியாரா அத்வானி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்தச் சூழலில் அவர் அடிக்கடி பெங்களூரு வந்து படப்பிடிப்பில் பங்கேற்றால் சரி யாக இருக்காது என எண்ணிய யஷ், டாக்ஸிக் படத்தின் படப் பிடிப்பை மும்பைக்கே மாற் றிவிட்டார். இவரின் செயலை திரையுலகினர் பாராட்டுகின் றனர்.

Jul 10, 2025

ஹாலிவுட்டில் உலகளவில் புகழ் பெற்ற ஒரு கவுரவமாக கருதப்படும் 2026ம் ஆண்டுக்கான 'ஹாலிவுட் வாக் ஆப் பேம்' நடிகை தீபிகா படுகோனே பெற்றுள்ளார்

2026ம் ஆண்டுக்கான 'ஹாலிவுட் வாக் ஆப் பேம்' கவுரவத்தை பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பை ஹாலிவுட்டின் வர்த்தக சபை அறிவித்தது. மோஷன் பிக்சர் பிரிவில் இவர் தேர்வாகி உள்ளார். தீபிகா இப்படியொரு அங்கீகாரத்தைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார். ஹாலிவுட் நடிகர் ராமி மலெக் , உடன் பிரிட்டன் நடிகை எமிலி பிளன்ட், பிரெஞ்ச் நடிகர் டிமோதி சால்மெட் உடன்  தீபிகா ஆகியோரும் இதே பிரிவில் தேர்வாகி உள்ளனர். அமெரிக்கா, கலிபோர்னியாவின் ஹாலிவுட் நகரில் உள்ள நடைபாதையில் பொழுதுபோக்குத் துறைகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களை கவுரவிக்கும் வகையில் நட்சத்திர வடிவிலான பதக்கங்கள் பதிக்கப்படும்.  இந்த  கவுரவமிக்க அங்கீகாரத்தை தீபிகா பெறுவது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்.

Jul 10, 2025

இந்த வாரம் 5  தமிழ் படங்கள் ரிலீஸ்.

ஜூலை 10ல் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ் நடித்த இலங்கை அகதிகளைப் பற்றிய 'ப்ரீடம்' படம் வெளியாகிறது. ஜூலை 11ல் விமலின் ‘தேசிங்கு ராஜா 2', வனிதா இயக்கி, நடித்துள்ள 'மிசஸ் அண்ட் மிஸ்டர்', விஷ்ணு விஷால் தம்பி நடித்துள்ள 'ஓஹோ எந்தன் பேபி' மற்றும் புதுமுகங்கள் நடித்துள்ள 'மாயக் கூத்து' ஆகிய 5 தமிழ் படங்கள் வெளியாகின்றன.

Jul 10, 2025

மகனுடன் இணைந்து நடிக்கும்  நடிகர் ஜெயராம்.

தமிழ், தெலுங்கிலும் நடிக்கும் மலையாள நடிகரான ஜெயராம் ,தனது மகன் காளிதாஸ் உடன் 'ஆசைகள் ஆயிரம்' என்ற படத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் இப்போது தனது தந்தையுடன் நடிக்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகும் இதை பிரஜித் இயக்குகிறார். இதன் முதல்பார்வை வெளியாகி உள்ளது.  காளிதாஸ் 2000ல் தனது தந்தையுடன் 'கொச்சு கொச்சு சந்தோசங்கள்' படத்தில் சிறுவயது ஜெயராமாக காளிதாஸ் 25 ஆண்டுகளுக்கு முன் நடித்துள்ளார். 

Jul 10, 2025

‘லக்கி பாஸ்கர் 2'

வாத்தி,லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, தற்போது சூர்யா வின் 46வது படத்தை இயக்குகிறார். லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் உருவாகும். கதை தயாராகவில்லை. நானும், துல்கரும் பிஸியாக இருக்கி றோம். கொஞ்ச காலம் ஆகும்" என்றார் வெங்கி அட்லூரி.

Jul 10, 2025

சினிமாவில் பிஸியான குணச்சித்ர நடிகையாக மறைந்த இயக்குனர்  கே. பாலசந்தர் மூத்த மகன் மறைந்த கைலாசத்தின் மனைவி கீதா.

 இவர் கதையின் நாயகியாக நடித்த 'அங்கம்மாள்' என்ற படம் நியூயார்க் திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வாகி உள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய இந்த படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கோடித் துணி என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது. ஏற்கனவே மும்பை, கேரளா திரைப்பட விழாவிலும் இந்த படம் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது.

Jul 10, 2025

பிஷ் வெங்கடேஷ் நடிகரின் சிகிச்சைக்கு ரூ.50 லட்சம் தரும் பிரபாஸ்.

 வெங்கட்ராஜ் என்ற பிஷ் வெங்கடேஷ் தெலுங்கில் நகைச்சுவை, வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்ட அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையறிந்த நடிகர் பிரபாஸ் தனது உதவியாளரை அனுப்பி சிகிச்சைக்கு தேவையான 50 லட்சம் செலவை ஏற்பதாக வெங்கட்ராஜின் மகளிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

Jul 10, 2025

'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் 24 மணி நேரத்தில் 48 மில்லியன் பார்வைகளைப் பெற்று தென்னிந்தியத் திரைப் படங்களில் புதிய சாதனை படைத்தது.

பவன் கல்யாண், நிதி அகர்வால் நடிப்பில் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், உருவாகியுள்ள சரித்திர படம் 'ஹரிஹர வீரமல்லு'. தெலுங்கில் எடுக்கப்பட்டு பான் இந்தியா படமாக ஜூலை 24ல் ரிலீஸாகிறது.இதன் டிரை லர் 24 மணி நேரத்தில் 48 மி ல்லியன் பார்வைகளைப் பெற்று ,தென்னிந்தியத் திரைப் படங்களில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அனைத்து மொழிகளிலும் 61.7 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் பெற்றுள்ளது.

Jul 03, 2025

“ ஆந்தாலஜி “விதார்த் நடிக்கும் கதை

நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி ஜானி டிசோசா இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள திரைப் படம் 'சின்னதா ஒரு படம்'. இதில் விதார்த், பூஜா, பிரசன்னா, ரோகிணி, லட்சுமி பிரியா சந்திர மவுலி நடித்துள்ளனர். இயக்குனர் கூறுகையில், 'இந்த படம் ஆந்தாலஜி எனப்படும் நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு., சுவாரஸ்யமான சுதாபாத்திரங்களையும் கொண்டது" என்கிறார்.

1 2 ... 45 46 47 48 49 50 51 ... 89 90

AD's