25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jun 19, 2025

பெண்கள் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு படம்

 வேல் இயக்கி உள்ளபுதுமுகங்கள் கணேஷ் கோபிநாத், நடிப்பில்  படம் 'ஹும்'. இயக் குனர் கூறுகையில் "நான் பாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியது இல்லை. யாருடைய முகத்தையும் காட்டாமல் ஓரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த படத்தின் கதையை எழுதி வித்யாசமான முயற்சியாக இதை எடுத்துள்ளோம். பெண்கள் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு படமாக இருக்கும்" என்றார்.

Jun 19, 2025

ஜூன் 20ல்   3 படங்கள்  வெளியாக  உள்ளன. படம் நாளை ரிலீசாகிறது.

.ஜூன் 20ல் தனுஷ், நாகார்ஜுனா ராஷ்மிகா நடித்துள்ள 'குபேரா' படமும், அதர்வா, நிமிஷா சஜ யன் நடிப் பில் 'டிஎன்ஏ' படமும், வைபவ், அதுல்யா ரவி நடித்துள்ள 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படமும் வெளியாகின்றன. இவற்றில் தனுஷின் குபேரா படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. இதை தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி உள்ளா ர். தமிழ் சினிமாவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.இரண்டரை மணிநேரத்திற்கு மேல் இருந்தாலே ரசிகர்க ளுக்கு ஒருவித அயற்சியை தருகிறது. இதற்கு முன் தமிழில் அதிக நேரம் ஓடும் படங்களாக 2005ல் 'தவமாய் தவமிருந்து' (3:34 மணிநேரம்), 2000ல் 'ஹே ராம்' (3:30 மணிநேரம்), 2021ல் 'நண்பன்' (3:08 மணிநேரம்), 2022ல் 'கோப்ரா' (3:03 மணி நேரம்) ஆகியவை இருந்தன. இதற்கு அடுத்து 3 மணி நேரம் 2 நிமிடங்களுடன் தனுஷின் 'குபேரா' 5வது இடத்தை பிடித்துள்ளது. இப்படம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் இருந்த நிலையில் சென்சார் வாங்கி, பின்னர் 13 நிமிடங்களைக் குறைத்துள்ளனர்..

Jun 19, 2025

கார் ரேஸில் வெற்றியாளராக இருக்க விரும்பும் அஜித்.

கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி  வரும் நடிகர் அஜித், சமீபத்தில் அளித்த பேட்டி நான் நடிக்க வந்தபோது தமிழ் சரியாக பேசவில்லை; உச்சரிப்பில் ஆங்கில சாயல் இருந்தது. இதற்கு எழுந்த விமர்சனத்திற்கு பிறகு பலவீனங்களை சரி செய்தேன். தற்போது நான் அடைந்திருக்கும் நிலை அனைவருக்கும் தெரியும். அதுபோல கார் ரேஸிலும் காயங்கள் உண்டாகும். பயிற்சி எடுத்து கற்றுக்கொள்வேன். மற்றவர்களின் விமர்சனங்களால் என்னை நானே மதிப்பிட்டுக் கொள்ள மாட்டேன். நான் வெற்றியாளராக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

Jun 19, 2025

தமிழுக்கு வரும் நடிகை பிரியம்வதா கிருஷ்ணன் 'நரிவேட்ட' ஹீரோயின்

 நடிகை பிரியம்வதா கிருஷ் ணன்,மலையாளத்தில் 'ரோஷாக், சம்ஷயம்' படங்களில் நடித்திருந்த , சமீபத்தில் 'நரிவேட்ட' படத் தில் நடித்திருந்தார். இவரது நடிப்பு பேசப்படவே,பிரியம்வதாவை தமிழ் படங்களில் நடிக்க வைக்க சில தமிழ் இயக்குனர்கள் முயற்சித்து வருகின்றனர். விரைவில் அவர் நடிக்கும் தமிழ் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும்.

Jun 19, 2025

வில்லனாக ஆதி 'அகண்டா 2' படத்தில்…

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள 'அகண்டா 2' படத் தில் ஆதி, வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் 24 மணிநேரத்தில் 22.3 மில்லியன் பார்வை களை பெற்று அதிகப் பார்வைகளைப் பெற்ற தெலுங்கு பட டீசர்களில் 5வது இடத்தைப் பிடித் துள்ளது. தமிழில் நாய கனாகவும். தெலுங்கில் நாயகன், வில்லன், குணச்சித்தி ரக் கதாபாத் திரங்களிலும் நடித்து வருபவர் ஆதி. தமிழில் கடை சியாக 'சப்தம்' படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

Jun 19, 2025

ரோஜா பூவுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து ,”உங்களை நீங்களே பாராட்டுங்கள்” ராஷ்மிகா.

தனுஷ் உடன் நடித்துள்ள குபேரா படம் ஜூன் 20ல் ரிலீஸாகிறது. நடிகை ராஷ்மிகா கைவசம் 'குபேரா,தி கேர்ள் பிரண்ட், 'தாமா' போன்ற படங்கள் உள்ளன.ரோஜா பூவுடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து "உங்களை நீங்களே அடிக்கடி பாராட்டிக் கொள்ளவும், நன்றி சொல்லவும் ஒரு மென்மையான நினைவூட்டல்.காரணம் உலகில் உள்ள எல்லா அன்புக்கும் கருணைக்கும் நீங்கள் தகுதியானவர்கள்" என குறிப்பிட்டுள்ளார் ராஷ்மிகா.

Jun 11, 2025

விருதுகள் முக்கியமல்ல சாய் பல்லவி கூறினார் .

சாய் பல்லவி அளித்த பேட்டி : எனக்கு விருதுகள் முக்கியமல்ல; ரசிகர்கள்தான் முக்கியம். என் கதாபாத்தி ரங்களின் எமோஷனல் உணர்வுகளுடன் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் எனக்கு கிடைக் கும் உண்மையான வெற்றியாக, விருதாக பார்க்கிறேன். அப்படியான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும்.. 'அமரன், தண்டேல்' படத்திற்கு பிறகு ஹிந்தியில் தற்போது 'ராமாயணா' என்ற படத்தில் சீதை வேடத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

Jun 11, 2025

அடுத்தாண்டு ஜூன் 25ல் படம் ரிலீசாகும் பிரசாந்த் நீல் - ஜூனியர் என்.டி.ஆர்.,படம்.

கன்னட இயக்குனரான பிரசாந்த் நீல்'கேஜிஎப், சலார்' படங்களை இயக்கி,அடுத்து ஜூனியர் என்.டி.ஆரி.,ன் 31வது படத்தை இயக்குகிறார். இதில் ருக்மணி வசந்த், டொவினோ தாமஸ் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்திற்கு 'டிராகன்' என தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜூன் 25ல் படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். இதே தலைப்பில் தமிழ், தெலுங்கில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் வெளியாகி ஹிட்டானது. 

Jun 11, 2025

 'மிஸ்டர் ஜூ கீப்பர்' ஜூன் 27ல்ரிலீஸ்

 நடிகர் புகழ், டிவி'யில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் சினிமாவில் காமெடி ரோலில் நடிக்கிறார். இதுதவிர 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். நாயகியாக ஷிரின்நடிக்க, சுரேஷ் இயக்கி  உள்ளார். ஒரு புலிக்குட்டியை பூனைக் குட்டி என நினைத்து ஹீரோ வளர்க்க, அது வளரும்போது, என்ன நடக் கிறது என்ற ரீதியில் காமெடியாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.  இப்படம் தற்போது ஜூன் 27ல் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Jun 11, 2025

அஜித் ,ரோல் மாடல் நினைவாக ரூ.15 கோடிக்கு கார் வாங்கினார்.

நடிகர் அஜித் கார் ரேஸில் பிஸியாகி , ரேஸிற்காக பெராரி, போர்ஸே போன்ற கார்களை வாங்கினார். இப்போது  ரூ.15 கோடி மதிப்புள்ள மெக்லாரன் சென்னா என்ற காரை வாங்கி இருக்கிறார்.. ரேஸிற்காகவே ஸ்பெஷலாக உருவாகி உள்ள இந்த காரை இங்கிலாந்தை சேர்ந்த ஆட்டோ மொபைல் நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த அயர்டன் சென்னாவின் நினைவாக தனது கார் ரேஸ் ரோல் மாடலான இந்த காரை அஜித் வாங்கி உள்ளார்.

1 2 ... 47 48 49 50 51 52 53 ... 89 90

AD's



More News