25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

May 28, 2025

.'குபேரா' தெலுங்கு டீசர்33.25 லட்சம் பார்வைகளை கடந்தது.

சேகர் கம்முலாஇயக்கத்தில்தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகாநடிப்பில்ஜூன் 20ல்வெளியாகும்படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கு, கன்ன டம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் இதன் டீசர் 'டிரான்ஸ் ஆப் குபேரா' என்ற பெய ரில் வெளியாகி உள்ளது. என்ன மாதிரியானகதைஎன்பதையூகிக்கமுடியாதசூழலில்டீசர்உள்ளது. 24 மணிநேரத்தில்தமிழ்டீசர் 28.5 லட்சம்பார்வைகளையும், தெலுங்கு டீசர் 33.25 லட்சம் பார்வைகளையும் கடந்தது.

May 28, 2025

'மாமன்' பட வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூரி 

சூரி, ஐஸ்வர்யலட்சுமி நடிப்பில் ,பிரசாந்த் பாண்டி ராஜ் இயக்கத்தில், வெளியான குடும்ப படம் 'மாமன்'. 25 கோடிக்கு மேல் வசூலித்து லாபக்கணக்கில் சேர்ந்துள்ளது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு சூரி "உண்மையான வெற்றி உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் மனதார மதிப்பு கொடுப்பதில் தான் ஆரம்பமாகிறது நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த நம்பிக்கையோட மாமன் கதையை துவங்கினேன். மாமன் என் வாழ்க்கையில் நடந்த சில உண்மையான சம்பவங்களைத் தழுவிய, ஆனால் நம்மில் பலருடைய வாழ்க்கை யிலும் எங்கோ ஒரு கோணத்தில் தொடும் ஒரு உணர்வுப்பூர்வ மான பயணம். உங்கள் அன்பும், ஆதரவுமே எனக்கு உண்மையான மகிழ்ச்சி.என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

May 28, 2025

விமல் மலையாள ரீமேக் படத்தில் நடிக்க போகிறார்.

'விலங்கு' வெப்சீரிஸ் தந்த வரவேற்பால் கதை தேர்வு விஷயத்தில் கவன முடன் இருந்து வருகிறார் நடிகர் விமல். தற்போது தேசிங்கு ராஜா 2, பரமசி வன்பாத்திமா ஆகியபடங் களில் நடித்து வருகிறார். அடுத்து மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் பட புகழ் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான 'ஜென்.இ.மேன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க போகிறார். சிதம்பரத்தின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்க போகிறார்.

May 21, 2025

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள 'படை தலைவன்'

அன்பு இயக்க, இளையராஜா இசையமைத்துள்ள, மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் 'படை தலைவன்'. முக்கிய வேடத் தில் கஸ்தூரி ராஜா, எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளனர். ஏஐ., தொழில்நுட்பம் மூலம் சிறப்பு தோற்றத்தில்  விஜயகாந்த்தை இப்படத்தில் கொண்டு வந்துள்ளனர். யானையை பின்புலமாக வைத்து இந்த கதை உருவாகி உள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர்  ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது மே 23ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

May 21, 2025

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 'தக் லைப் ‘டிரைலர்'

கமல், சிம்பு, திரிஷா நடித்துள்ள, மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். இசையமைப்பில் உருவான'தக்லைப்'. படம் ஜூன் 5ல் ரிலீசாகிறது. இதன் டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியிட்டனர். 24 மணிநேரத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற டிரைலர் தமிழில் 18.8 மில்லியன் பார்வைகளும், ஹிந்தியில் 3 மில்லியன் பார்வைகளும், தெலுங்கில் 3.8 பார்வைகளும் பெற்றுள்ளது. கமல் இதற்கு முன் நடித்த 'விக்ரம்' படத்தின் டிரைலர் 24 மணிநேரத்தில் 12 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்த நிலையில் அதனை தக்லைப் முறியடித்துள்ளது.

May 21, 2025

'டூரிஸ்ட் பேமிலி' மே 24ல் ஜப்பானில் ரிலீஸ்.

சசிகுமார், சிம்ரன் இணைந்து நடித்து அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியானபடம் 'டூரிஸ்ட் பேமிலி'. பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று 16 நாட்களில் 63 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்தை மே 24ல் ஜப்பான் மொழியில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' படம் ஜப்பான் மொழியில் ரிலீசாகி வரவேற்பை பெற்றதுபோல், 'டூரிஸ்ட் பேமிலி' படமும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கின்றனர்.

May 21, 2025

மே 23ல் 7 ரிலீஸ் ஆகும் படங்கள்

மே 23ல் 7 படங்கள் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிய இன்னும் பத்து நாட்களே உள்ளது. விஜய் சேதுபதியின் 'ஏஸ்', சண்முகபாண்டியனின் 'படை தலைவன் 'ஆகியவற்றுடன் "அக மொழி விழிகள், ஆகக் கடவன, மையல்,திருப்பூர் குருவி, ஸ்கூல்' உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன.

May 21, 2025

'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயின் மிருணாள் தாகூர்

மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக அல்லு அர்ஜுன், அட்லி இணைய உள்ள பிரமாண்ட படத்தில் ஏற்கனவே தகவல் வெளி யானது. இதற்காக பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின்கள் சிலரிடம் பேச்சு நடந்த நிலையில், கால்ஷீட் பிரச்னையால் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் முதல் நாயகியாக 'சீதா ராமம், ஹாய் நானா' படத் தில் நடித்த மிருணாள் தாகூரை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். 2வது நாயகியாக விரைவில் ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்.

May 21, 2025

இயக்குனர் ஷங்கரின் மகளான  அதிதி  தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகிறார்.

தமிழில் விருமன், மாவீரன் போன்ற படங்களில்  இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி நடித்தார். தற்போது தெலுங்கில் பெல்லம் கொண்ட ஸ்ரீனிவாஸ் ஜோடியாக பைரவம் என்ற படத்தில் நடித்து, அங்கு நாயகியாக அறிமுகமாகிறார். விஜய் கனகமெடலா இயக்க, மே 30ல் படம் ளிலீஸாகிறது. அதிதி கூறுகையில், "விருமன் படத்தை பார்த்து இப்பட இயக்குனர் விஜய் இந்த வேடத் திற்கு நான் சரியாக இருப்பேன் என வாய்ப்பு வழங்கினார். தெலுங்கில் நடிப்பது கஷ்டம் என நினைத்தேன். ஆனால் நடிக்கும்போது அப்படி தோன்றவில்லை. சின்ன வயதில் அப்பாவுடன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு வந்துள்ளேன். ஆனால் என் படத்தின் படப்பிடிப்புக்கும் அங்கு வருவேன் என நினைத்து கூட பார்க்க வில்லை, கனவு போல் உள்ளது" என்றார்.

May 14, 2025

சூரியின் 'மாமன்' பட டிரைலர் வெளியானது 

 சூரி கதை யின் நாயகனாக நடித் துள்ள படம் ,பிரசாந்த் பாண்டியராஜ்  இயக்கத்தில் “மாமன்.” அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்க, ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட் டோர் நடித்துள்ளனர். மே 16ல் படம் வெளியாகும் நிலையில் டிரைலர் வெளியாகி உள்ளது. 3 நிமிடம் ஓடும் டிரைலரில் குடும்ப உறவுகளுக்குஇடையே நடக்கும்  மோதல்கள், பாசப் போராட்டம்ஆகியவற்றுடன் அக்கா மகன், தாய் மாமன் பந்தத்தை முதன்மையாக கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர்.'மாமன்' படம் மே 16ல் ரிலீஸாகிறது. 'மாமன்' பட கதையை சூரி எழுதி யுள்ளார். இவர் கூறுகையில் "கதையை நான் எழுதியிருந்தாலும் எனது பெயர் வர வேண்டாம் என இயக்குந ரிடம் சொன்னேன். ஆனாலும் பெயரை போட்டு விட்டார். நான் இங்கு நிற்க என் குடும்பம் தான் காரணம். என் குடும்பம் தான் எனக்கு சாமி. இந்த கதை அங்கிருந்து தான் உருவானது. சின்ன பையனுக்கும், அவனது தாய் மாமனுக்கும் இடையேயான உறவே கதை. படத்தில் சின்ன பையனாக நடித்தவர் இயக்குனரின் மகன் என்றார்.

1 2 ... 49 50 51 52 53 54 55 ... 89 90

AD's



More News