25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Apr 23, 2025

இந்தாண்டு திரிஷாவிற்கு 6 படங்கள் ரிலீஸ்.

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகியாக நடித்து வரு கிறார் திரிஷா. அனேகமாக இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த நடிகையாக இவராக தான் இருப்பார் போல. 2025ல் இது வரை இவரது நடிப்பில் 'ஐடென் டிட்டி (மலையாளம்), விடா முயற்சி, குட் பேட் அக்லி' ஆகிய 3 படங்கள் வெளிவந்துவிட்டன. அடுத்து தமிழில் 'தக்லைப், சூர்யா 45' மற்றும் 'விஸ்வாம் பரா' (தெலுங்கு) ஆகிய மூன்று படங்கள் இந்தாண்டுக்குள் வெளியாக உள்ளன.

Apr 23, 2025

அஜித் அணி பெல்ஜியம் கார் ரேஸில் வெற்றி பெற்றதும் ஏகே.... ஏகே... என்று சத்தம் எழுப்பியபடி இந்திய தேசிய கொடியை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

 நடிகர் அஜித் தொடர்ச்சியாக கார் ரேஸில் பயணித்து வருகிறார். ஏற்கனவே போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நடந்த ரேஸில் அஜித் அணி 3வது இடம் பிடித்தது. இப்போது பெல்ஜியம் நாட்டில் பிர பலமான ஸ்பா பிராங்கோர் சாம்ப்ஸ் சர்க்யூட்டில் சர்வ தேச கார் பந்தயம் நடந்தது. இதில் அஜித் அணி 2வது இடம் பிடித்தது . போட்டியை நேரில் பார்த்த இந்தியர்கள் அஜித் அணி வெற்றி பெற்றதும் ஏகே.... ஏகே... என்று சத்தம் எழுப்பியபடி இந்திய தேசிய கொடியை அசைத்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Apr 23, 2025

அர்ஜுன் தாஸ் “ரசாவதி “படத்திற்காக விருது  வென்றார் .

கடந்த ஆண்டில் இயக்குனர் சாந்தகுமார் இயக்கத் தில் அர்ஜுன் தாஸ் நடித்து வெளி யான படம் 'ரசாவதி'. நல்ல விமர் சனம் கிடைத்தாலும் வசூலில் தோற்றது. இந்த நிலையில் 7வது நியூ ஜெர்ஸி இந்தியன் அன்ட் இன் டர்நேஷனல் திரைப்பட விழாவில் 'ரசாவதி' படம் பங்கேற்றது. இதில் அர்ஜுன் தாஸிற்கு சிறந்த நடிகர் விருதை அறிவித்துள்ளனர். இதனை பகிர்ந்த இயக்குனர் சாந்தகுமரர், அர் ஜூன் தாஸிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

Apr 16, 2025

கதாநாயகி அந்தஸ்து பாதிக்காத வகையில் தீபிகாவின் ரோல் .ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக தீபிகா .

பாலிவுட்டில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'கிங்' என்ற படத்தில்  ஷாருக்கான்,  தீபிகா படுகோன் நடிக்கின்றனர். இதில் ஷாருக்கான்  மகள் சுஹானாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுஹானாவிற்கு அம்மாவாக தீபிகா நடிக்கிறார். அதே சமயம் கதாநாயகி அந்தஸ்து பாதிக்காத வகையில், தீபிகாவின் ரோல் வலுவாக இருப்பதாக சொல்கிறார்கள்

Apr 16, 2025

தமிழுக்கு வரும் தபு.

நடிகை தபு, தமிழில் கடைசியாக 2000ல் வெளியான 'சிநேகிதியே' படத்தில் நடித்திருந்தார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்தவர் அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு படங்களில், இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார். 25 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க இருக்கிறார் தபு. பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் முக்கிய கதாபாத் திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது.

Apr 16, 2025

'குட் பேட் அக்லி' 3 நாளில் ரூ.100 கோடி வசூலை கடந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், திரிஷா நடிப்பில் ஏப்.10ல் வெளியான படம் 'குட் பேட் அக்லி'. 3 நாளில் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் விரைவில் ரூ.150 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

Apr 16, 2025

மகளின் நினைவில் பாடகி சித்ரா .

“என்னால் உன்னைத் தொடவோ உன் பேச்சைக் கேட்கவோ, பார்க்கவோ முடியாது, என் இதயத்தில் உன்னை உணர முடிகிறது.” "வானத்தில் பிரகாசிக்கும் நீ, படைப்பாளர்களின் உலகில் வாழ்ந்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன்" என உருக்கமாக கூறியுள்ளார். 2011 ஏப்ரல் 14 ஆம் தேதி  கே.எஸ்.சித்ராவின் மகள் நந்தனா வெளிநாட்டில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மரணமடைந்த  நாள். 

Apr 16, 2025

.60 வருடங்களாக தரையில்தான் தூங்குறேன்!

கடந்த60 வருடங்களாக தினமும் ஒரு மணி நேரம் வாக்கிங்,20 நிமிடங்கள் யோகாசனம்,20 நிமிடங்கள் பிராணயாமம் பண்றேன். பெட்ல தூங்குறது கிடையாது தரையிலதான் தூங்குவேன். சர்க்கரை, உப்பு. மைதா என வெள்ளை நிற உணவுகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். தேவையில்லாத எண்ணங்கள் வரும்போது குரு மந்திரத்தை சொல்லிட்டு இருப்பேன். எண்ணங்கள் நல்லா இருந்தால்தான் மனசு நல்லா இருக்கும்.ரஜினிகாந்த் பேட்டி.

Apr 16, 2025

 ஹாலிவுட் படம் போல அட்லி - அல்லு அர்ஜூன் படம் உருவாக  உள்ளது .

 அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.1000 கோடி வசூலித்த 'ஜவான்' படத்தை இயக்கிய அட்லியும், 1800 கோடியை - வசூலித்த 'புஷ்பா 2' படத் தில் நடித்த அல்லு அர்ஜுனும் புதியபடத்தில் இணைந் துள்ளனர். இதனைவீடியோ உடன் படக்குழு அறிவித்தது. அதில், அமெரிக்காவில் உள்ள பிரபல வி.எப்.எக்ஸ் நிறுவனமான லோலா வல்லுனர்களுடன் அட்லி, அல்லு அர்ஜூன் விவாதித்தது, படத் தின் கதை பற்றி அவர்கள் வியந்து பேசியது, அல்லு அர்ஜூனின் ஸ்க்ரீன் டெஸ்ட் ஆகியவை இடம்பெற்றிருந்தது.  தெளிவாக ஹாலிவுட் படம்போன்ற வித்யாசமான கதையை பிரமாண்டமாக எடுக்க உள்ளது . 

Apr 16, 2025

வில்லனாக நடிக்க விரும்பும்  ரவி மோகன் மற்றும் ஆர்யா

மார்க்கெட் சரிந்து கிடப்பதால், ரவி மோகன் மற்றும் ஆர்யா போன்ற நடிகர்களும், விஜய் சேதுபதி பாணியில் மற்ற மொழிப்படங்களிலும் வில்லனாக டித்து, தங்களது மார்க்கெட்டை இந்திய அளவில் விரிவுபடுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.'ஹீரோ' மார்க்கெட் ஸ்டெடியாக இருந்த போதே,தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என, பல மொழி படங்களில் வில்லனாகவும் நடித்தார், விஜய் சேதுபதி.

1 2 ... 52 53 54 55 56 57 58 ... 89 90

AD's



More News