25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Sep 25, 2025

பிரதமர் மோடி யின் வாழ்க்கை "மா வந்தே". பிரதமர் மோடி வேடம் உன்னி முகுந்தன் பெருமிதம்

பிரதமர் மோடியின் வாழ்க்கை "மா வந்தே" என்ற பெயரில் சினிமாவாகிறது. கிராசாந்தி  குமார் இயக்க ,மோடியின் வேடத்தில் உன்னி முகுந்தன் நடிக்கிறார். மோடி யின் சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்தது வரை இப் படம் பேசப் போகிறது. குறிப்பாக மோடியின் தாயார் ஹீராபென் சம் பந்தப்பட்ட ஆழமான பந்தத்தை இப்படம் வெளிப்படுத்த உள்ளது. பான் இந்தியா அளவில் படத்தை வெளியிட உள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடியின் வேடத்தில் உன்னி முகுந்தன் கூறுகையில், "இதை பெருமையாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன். நான் ஆமதாபாத்தில் பிறந்து வளர்ந்தவன். என் குழந்தை பருவத்தில் அப்போது குஜராத்தின் முதல்வராக மோடி இருந்தார்.அது முதலே அவர் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. தேசத்திற்கான தலைவனாக அவர் எப்படி உருவானார். தாய் உடனான அவரின் பாசப்பிணைப்பு இந்த படத்தில் ஹைலைட்டாக இருக்கும்" என்றார்.

Sep 25, 2025

தாய்மொழியான கன்னடத்தில் நடிக்கும் வர்ஷா பொல்லம்மா.

முதன் முறையாக கன்னடத்தில் பி.சி சேகர் இயக்கும் 'மஹான்' என்ற படத்தில்நாயகியாகநடிக்கஒப்பந்தம் ஆகியுள்ளார். 10 ஆண்டு சினிமா பயணத்தில் தன் சொந்த மொழியில் இப்போதுதான் அறி முகமாவது மகிழ்ச்சி என வர்ஷா தெரிவித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த வர்ஷா பொல்லம்மா தனது தாய்மொழியான கன்னடத்தில் இதுவரை நடித்ததில்லை.

Sep 25, 2025

'மதராஸி' ரூ.100 கோடி வசூலைக் கடந்தது.

சிவகார்த் திகேயன், ருக்மணி வசந்த் நடிப் பில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத் தில் செப்., 5ல் வெளி யான படம் 'மதராஸி'. கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் இப்படம் தற்போது ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது. டாக்டர், டான், அமரன் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேய னுக்கு 4வது ரூ.100 கோடி படமாக மதராஸி அமைந்துள்ளது..

Sep 18, 2025

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2040ல் நடக்கும் 'எல்ஐ கே ' படக் கதை .

 பிரதீப் ரங்கநாதன், எஸ். ஜே. சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் சும்பெனி (சுருக்கமாக எல்ஐகே) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 2040 காலகட்டத்தில் நடக்கும் காதல் கதை. காதலுக்கே இன்சூரன்ஸ் கம்பெனி இருக்கும் ஒரு கால கட்டத்தில், ஒருவன் தன் காதலை காப்பாற்ற என்ன செய்கிறான் என்பது படத்தின் ஒருவரிக் கதை. புதுமையான விஷூவல், அனிருத்தின் பழைய ஆல்பம் பாடலான 'எனக்கென யாரும் இல்லையே' ரசிக்க வைத்துள்ளது.

Sep 18, 2025

பல ஆண்டுகளுக்கு பின் ரஜினியும், கமலும் மீண்டும் இணைந்து நடிப்பதாக சமீபத்திய செய்தி.

துபாயில் நடந்த சைமா விருது விழாவில் பேசிய கமல், "நாங்கள் இணைந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது ஆளுக்கு ஒரு பிஸ்கெட் சாப்பிட ஆசைப்பட்டோம், தனியாக படம் செய்து அதை சாப்பிட்டோம். இப்ப மீண்டும் அரை பிஸ்கட் போதும்ங்கிற நிலைக்கு வந்து விட்டோம். எப்போதோ நடக்க வேண்டி யது. இப்போதாவது நடக்குதே" என்றார். ரஜினியும், கமலும் இணைந்து பல  படங்களில் நடித்தனர்

Sep 18, 2025

இயக்குனர் பிரியதர்ஷன் உடல் ஒத்துழைக்கும் வரை, இயக்கிக் கொண்டே இருப்பேன்.

40 வருடங்களுக்கு மேலாக மலையாளம், தமிழ், ஹிந்தி மொழிகளில் இயக்குனராக வலம் வரும் பிரியதர்ஷன், தற்போது ஹிந்தியில் அக் ஷய் குமார், சைப் அலிகானை வைத்து 'ஹைவான்' படத்தை இயக்குகிறார். இது அவர் இயக்கும் 99வது படம். தனது 100வது படத்துடன் சினிமாவில் ஓய்வு பெறுவதாக வெளியான செய்தி பற்றி பேசிய பிரியதர்ஷன், “ஓய்வு பெறுவதாக நான் எப்போதுமே சொன்னதில்லை. என் உடல் ஒத்துழைக்கும் வரை ஓடிக் கொண்டே இருப்பேன், 100வது படத்தில் மோகன்லால் நடிப்பது மட்டும் இப்போதைக்கு உறுதி" என்றார்

Sep 18, 2025

சந்தனமரக் கடத்தல்காரனாக பிரித்விராஜ் நடித்துள்ள விலாயத் புத்தா'

சந்தனமரக் கடத்தல்காரனாக பிரித்விராஜ் நடித்துள்ள விலாயத் புத்தா' பட டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதில் உள்ள காட்சிகள், 'புஷ்பா' படத்தை ஞாபகப்படுத்துவதாக இருந்தாலும், டீசரில் ஒரு போலீஸ் அதிகாரி, 'நீ என்ன புஷ்பாவா?' எனக் கேட்க, பிரித்விராஜ், 'ஐயோ சார் அவர் இன்டர் நேஷனல்,நான் வெறும் லோக்கல்' என பதில் சொல்லும் காட்சி இடம் பெற்றது .

Sep 18, 2025

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் 'இட்லி கடை''.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் 'இட்லி கடை'. நித்யா மேனன், ராஜ்கிரண் உள் ளிட்டோர் நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள, படம் வெளியீட்டிற்கு தயாராகிறது. . அக்., 1ல் படம் ரிலீஸாகும் சூழலில் செப்., 14ல் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங் கில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாய் நடந்தது.

Sep 18, 2025

ஜப்பானில் 'வேட்டையன்'  படம் 'புல்லட்ஸ் அன்ட்ஸ் ஜஸ்டிஸ்' என்ற பெயரில் வெளியாகி வரவேற்பு உடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

 ரஜினி, மஞ்சு வாரியர், ராணா நடிப்பில் த.செ., ஞானவேல் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான படம் 'வேட்டையன்'. பெரிய வர வேற்பையும், வசூலையும் பெறவில்லை.தற்போது இந்தப் படம் 'புல்லட்ஸ் அன்ட்ஸ் ஜஸ்டிஸ்' என்ற பெயரில் ஜப்பானில் வெளியாகி வரவேற்பு உடன் ஓடிக் கொண்டிருக்கிறது

Sep 18, 2025

கர்நாடக ரத்னா விருது சரோஜாதேவி, விஷ்ணுவர்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு ஆண்டு தோறும் கலை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு 'கர்நாடக ரத்னா' விருது வழங்கி வருகிறது. 2025ம் ஆண் டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள் ளது. இதில் கலை உலகைச் சேர்ந்த மறைந்த நடிகை சரோஜாதேவி, நடிகர் விஷ்ணுவர்தன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1 2 ... 37 38 39 40 41 42 43 ... 89 90

AD's



More News