25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Oct 09, 2025

சூர்யா குடும்பம் ஒரு வேளை சாப்பிட ஆகும்  செலவு . எனக்கு 7 வருஷத்துக்கு ரூ7500 செலவு. நடிகர் சிவக்குமார்.

 நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் ,அந்த காலக்கட்டத்தில் நான் ஓவியம் வரைவதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்ய ஆன தொகையை விட,2 மடங்கு இப்போது சூர்யா, ஜோதிகா ஒருவேளை சாப்பாட்டுக்கு செலவு செய்கிறார்கள் என்று ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.சிவக்குமார்  சென்னைக்கு வந்த புதிதில் குடியிருந்த வீட்டின் வாடகை ரூ15. அங்கிருந்து தான்7 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றி ஓவியம் வரைவதற்கு ஆன செலவு மொத்தம் ரூ7500. ஆனால் இப்போது சூர்யா கார்த்தி குடும்பம் மதியம் ஹோட்டலில் போய் சாப்பிட்டால் ரூ.15000 வருகிறது. பைவ் ஸ்டார் ஹோட்டலில் ஒருவேளை சாப்பாடு இவ்வளவு செலவு ஆகிறது. ஆனால் நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை7 ஆண்டுகள் தெருத்தெருவாக போய் ஓவியம் வரைய7 ஆண்டுகள் ஆன செலவு ரூ7500 என்று சிவக்குமார் கூறியுள்ளார்.

Oct 09, 2025

இட்லி கடை VS காந்தரா 2நாள்  வசூல் 

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'இட்லி கடை. மற்றொன்று பான் இந்தியா எதிர்பார்ப்புடன் வெளியான ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1. இந்த இரண்டு படங்களின் வசூல் வேட்டையில், 'காந்தாரா சாப்டர்1!' பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தி, முதல் நாளிலேயே ரூ.89 கோடி க்கும் அதிகமாக வசூலித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Oct 09, 2025

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த கன்னட படமான 'காந்தாரா சாப்டர் 1' முதல்நாளில் ரூ.89 கோடி வசூலித்துள்ளது

'காந்தாரா' படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2ம் பாகமாக 'காந்தாரா சாப்டர் 1' படத்தை இயக்கி நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. கடந்த வாரம் ரிலீசான இப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. "முதல் பாக வெற்றியால் எதிர்பார்ப்பு அதிகரித்து, இப்படத்தில் முழு கவனம் செலுத்த முடியாது, என்பதால் 3 ஆண்டுகள் முழுமையாக அர்ப்பணித்து இந்த சாப்டர் 1 படத்திற்காக பணியாற்றினேன்" என்றார் ரிஷப் ஷெட்டி. ‘காந்தாரா சாப்டர் 1' நேற்றுமுன்தினம் பான் இந்தியா படமாக வெளியானது. படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் முதல்நாளில் ரூ.89 கோடி வசூலித் துள்ளது. தொடர் விடுமுறையால் இந்த வாரத்திற் குள் 300 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க் கப்படுகிறது. காந்தாரா முதல்பாகம் 400 கோடி வசூலித்த நிலையில் அதைவிட இப்படம் நிச்சயம் கூடுதலாக வசூலிக்கும்.

Oct 09, 2025

மூன்று படங்கள் ரூ.300 கோடி வசூலில் …

 'காந்தாரா சாப்டர் 1', ரிஷப் ஷெட் டியின் கன்னட படம், லோகாசாப்டர் 1 கல்யாணி பிரியதர்தஷனின் மலையாள படம், 'ஓஜி'சந்திரா, பவன் கல்யாணின் தெலுங்கு  படம் ஆகியவை ரூ.300 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்துள்ளன. காந்தாரா 4 நாட்களிலும், லோகா 40 நாட்களிலும், ஒஜி 10 நாட்களிலும் இந்த சாதனையை படைத்தன.

Oct 09, 2025

இந்த வாரம் 10 படங்கள் வெளியீடு.

படங்களின் வெளியீடு இந்தாண்டு 200ஐ கடந்து விட்டது. வெற்றி 10 சதவீதம் வெற்றி. ஆனாலும் படங்கள் வெளியீடு குறையவில்லை.இந்தவாரம்அக்.,9ல்'அக்னிபத்து' படமும், அக்.,10ல்"அனல்மழை, இறுதிமுயற்சி, மருதம், நெடுமி, ரவாளி, தந்த்ரா, உயிர் மூச்சு, வில்" ஆகிய படங்களும், ஓடிடி யில் நேரடியாக 'ராம்போ' படம் என மொத்தம் 10 படங்கள் வெளியாகின்றன.

Oct 09, 2025

ரீ யூனியன் சந்திப்பு 80களின் நடிகர்கள், நடிகைகள்…

ஆண்டுக்கு ஒரு முறை 1980களில் நடித்த நடிகர்கள், நடிகைகள் கூடி மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு 80ஸ் ரீ யூனியன் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில்நடிகர்கள்சிரஞ்சீவி, வெங்கடேஷ், பிரபு, சரத்குமார், ரத்குமார், ரகுமான், பாக்யராஜ், நடிகைகள் குஷ்பூ, சுஹாசினி, நதியா,  ராதா, ரேவதி, ரம்யா கிருஷ்ணன், நடிகை லிசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Oct 04, 2025

தேசிய விருதைப் பெற்ற விக்ராந்த் மாஸ்ஸியைப் ஏன் ஊடகங்கள் பாராட்டவில்லை.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றதற்காக ஷாருக்கானை அனைவரும் வாழ்த்தினர், ஆனால் ஒரு ஊடகவியலாளர் கூட சனாதனியின் விக்ராந்த் மாஸ்ஸியைப் பாராட்டவில்லை.

Oct 02, 2025

ஹனுமன் புகழ் பாடும் 3டி அனிமேஷன்  “வாயுபுத்ரா” : படம்.

3டி அனி மேஷன்  படம் சமீபத்தில் 'மகாவதார் நரசிம்மா' என்ற வெளியாகி ரூ.300 கோடி வசூலை ஈட்டியது. அடுத்து தெலுங்கில் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் 'வாயுபுத்ரா' என்ற 3டி அனிமேஷன் படம் தயாராகிறது.ஹனுமன் புகழ் பாடும்  இந்தபடம் பான் இந்தியா வெளியீடாக 2026 விஜயதசமிக்கு வெளியாகிறது.

Oct 02, 2025

கமலின் சாதனையை முறியடித்த சிறுமி திரிஷா தோஷர் என்ற 4 வயது குழந்தை.

திரிஷா தோஷர் என்ற 4 வயது குழந்தை 'நாள் 2' என்ற மராட்டிய படத்திற்காக ,ஜனாதிபதி திரவுபதி முர்மு கையால் தேசிய விருது பெற்றார். அவருக்கு கமல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவில், "என்னுடைய 6 வயதில் முதல் தேசிய விருதை வென்றேன். அந்த சாதனையை முறியடித்த திரிஷா தோஷருக்கு பாராட்டுகள். நீங்கள் உங்கள் திறமையை வளர்த்து இன்னும் பல தூரம் செல்ல  பாடுபட வேண்டும் மேடம். என குறிப்பிட்டுள்ளார்.

Oct 02, 2025

இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரேலியா தமிழ் கலைமற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெள‌ரவித்தது.

 தமிழ் திரையுலகில் கானா பாடல்களை அறிமுகப்படுத்தியவர் தேனிசைத் தென்றல் தேவா தான். இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரகுமான் என்ற இரண்டு ஜாம்பவான்களும் மலை போல நின்று கொண்டு இருந்த காலத்திலும் இவர், உச்ச நட்சத்திரமான ரஜினி, கமல் உள்ளிட்டவர்களுடன் பணியாற்றி, பல ஹிட் பாடல்களைக் கொடுத்தவர். தேவாவின் பாடல் என்றாலே அதற்கு தனிமதிப்பும் தனிரசிகர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது தேவாவுக்கு ஆஸ்திரேலிய அரசு, அவர்களின் நாடாளுமன்றத்தில் உள்ள அவைத்தலைவர் இருக்கையில் அமர வைத்து செங்கோலைக் கொடுத்து அழகு பார்த்துள்ளது என்றால், அவரது புகழ் உலகம் முழுவதும் பரவி உள்ளது என்பதற்கான சான்றுதான் அது என்று பலரும் பேசி வருகிறார்கள்.தேனிசைத் தென்றல் தேவாவுக்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் உயரிய மரியாதை அளித்ததை அளித்தனர். குறிப்பாக அவைத்தலைவர் இருக்கையில் அமரவைத்து, செங்கோலைத் தந்ததற்காக ஆஸ்திரேலிய அரசுக்கு தேவா நன்றி. தமிழ் திரை இசையில் பல சாதனைகளை புரிந்து ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என்று அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவை ஆஸ்திரேலியா தமிழ் கலை மற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் சமீபத்தில் கெள‌ரவித்தது.ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த தேவாவும் அவரது இசைகுழுவினரும் ஆஸ்திரேலிய அரசுக்கு இதற்காக நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேனிசைத் தென்றல் தேவா கூறியதாவது:"ஆஸ்திரேலிய தமிழ் கலைமற்றும் பண்பாட்டு மேம்பாட்டு மையம் எனக்களித்த மரியாதை குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். எனக்கும் எனது இசைகலைஞர்கள் குழுவிற்கும் இவ்வளவு அரிய கௌரவத்தை வழங்கியதற்காக அன்புள்ள திரு. லாரன்ஸ் அண்ணாதுரை மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.செப்டம்பர்24ம் தேதி மாலையில்,ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டு,அவைத்தலைவர் இருக்கையில் அமர வாய்ப்பு அளிக்கப்பட்டு,மரியாதைக்குரிய செங்கோல் வழங்கப்பட்டது. இந்த தருணம் எனக்கு மட்டுமல்ல,உலகம் முழுவதும் இசை மற்றும் கலாச்சாரத்தை பரப்பி வரும் ஒவ்வொரு தெற்காசிய கலைஞருக்கும் இது சொந்தம்.எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு இந்த பெருமைமிகு தருணத்தில் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது36ஆண்டுகால இசைப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் எனது மிகப்பெரிய‌ பலமாக இருந்து வருகிறது. இந்த அங்கீகாரத்தை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

1 2 ... 35 36 37 38 39 40 41 ... 89 90

AD's



More News