25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Sep 18, 2025

200 படங்கள் வரை நடித்துள்ள ,நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.

சமீபத்தில் 90வது பிறந்தநாளை கொண்டாடிய ,பழம் பெரும் நடிகை எம். என்.ராஜம் 200 படங்கள் வரை நடித்த அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்., 21ல் சென்னையில் நடக்கும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் இவ்விருது வழங்கப் பட இருக்கிறது.

Sep 18, 2025

கொல்லூர் மூகாம்பிகைக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வீரபத்திர சுவாமிக்கு தங்க வாள் காணிக்கை தந்த இளையராஜா.

 கர்நாடகாவில் உள்ள  கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு இசையமைப்பாளர் இளைய ராஜா,  மகன் கார்த்திக் ராஜா ,பேரன் யத்தீஸ்வர் உடன் சென்றார். அங்கு மூகாம்பிகைக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ் ,வீரபத்திர சுவாமிக்கு தங்க வாளை காணிக்கையாக வழங்கினார். இவற்றின் மதிப்பு பல கோடி. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தெய்வங்களுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. 

Sep 11, 2025

நடிகர் மாதவன் - சரிதா தம்பதி, வீட்டு வாடகை மூலம் கோடிகளில் சம்பாதிக்கின்றனர் .

மும்பையில் உள்ள தங்களது 17.5 கோடி மதிப்பிலான அம்பார்ட்மெண்டை  நடிகர் மாதவன் - சரிதா தம்பதி, வாடகைக்கு விட்டு, மாதம் ரூ. 6.50 லட்சம் வாடகை பெறுகின்றனர் - 2 ஆண்டுகளில் அவர்கள்  ரூ.1.6 கோடி வருவாய் ஈட்டியுள்ளனர் - மாதவன் மும்பையில் இருந்து துபாய்க்கு இடம்பெயர்ந்ததுள்ளனர். 

Sep 11, 2025

'பாந்தர்'  ஹிந்தி திரைப்படம் டொராண்டோ பட விழாவிற்கு தேர்வானது.

பாபி தியோல், சான்யா மல்கோத்ரா நடித்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் ஹிந்தி படம் 'பாந்தர்' (மங்கி இன் ஏ கேஜ்). உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படம் புகழ்பெற்ற கனடாவின், டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. செப்., 4 முதல் 14 வரை நடக்கும் இந்த விழாவில் உலகம் முழுக்க இருந்து பல்வேறு திரைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

Sep 11, 2025

மணிரத்னம் இயக்கத்தில் நாயகனாக விக்ரம் மகன் துருவ், நாயகியாக ருக்மணி வசந்த்..

சமீபத்தில் தக் லைப் படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது. எனது அடுத்தபடம் இளம் நடிகர்களை வைத்து காதல் கதையில் உருவாகும் என மணிரத்னம் கூறி வந்தார். இப்போது இந்த படத்தில் நாயகனாக விக்ரம் மகன் துருவ், நாயகியாக ருக்மணி வசந்த் நடிக்க  நவம்பரில் படப்பிடிப்பை துவங்க உள்ளனர்.

Sep 11, 2025

ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகி 100 கோடி வசூலித்த படம் 'சூப்ரம் சோ'

வெறும் ரூ.6 கோடி பட்ஜெட்டில் உருவாகி 100 கோடி வசூலித்தது. ஹாரர் கலந்த காமெடி  கன்னட படமான  இதனை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். கன்னடத்தில் இயக்குனரும், நடிகருமான ராஜ் பி ஷெட்டி நடித்து, ஜேபி துமினாடு இயக்கிய படம் 'சூப்ரம் சோ'.  இதில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

Sep 11, 2025

'கிஸ்' ரிலீஸ் செப் 19ல்…

கவின், பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ள, நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கி உள்ள முதல் படம் 'கிஸ்'. காதல் கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் செப்., 19ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். 

Sep 11, 2025

'உப் யே சியாபா' வசனமே இல்லாத படம்.

நடிகர்கள் சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா பதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜி. அசோக் இயக்கத்தில் படம் 'உப் யே சியாபா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள் ளார். இப்படத்தில் எந்தவொரு வசனமும் இல்லையாம். படம் பற்றி ரஹ்மான் கூறுகையில், "இசையே இப்படக் கதையின் ஒரு பகுதி. புதிய பாணிகளை பரிசோதிப்பதை ரசித்தேன். நகைச்சுவை, திரில்லர் வகை படமாக இது இருந்தது " என்றார்.

Sep 11, 2025

செப்.13ல் இளையராஜாவிற்கு பாராட்டு விழா.

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தமைக் காகவும். சிம்பொனி இசைக்காகவும்  இசையமைப்பாளர் இளைய ராஜா அவருக்கு பாராட்டு விழா ஜூன் 2ல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது அந்த விழா தள்ளி வைக்கப்பட்டு. செப்., 13ல் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதில் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய அளவில் உள்ள பிரபல நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர்.

Sep 06, 2025

சித்தார்த் மல்ஹோத்ரா, ஜான்வி கபூர் நடிப்பில் வெளியான பரம் சுந்தரி.

 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் நகைச்சுவைப் படங்களில் ஒன்றான, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் நடித்த பரம் சுந்தரி, ஆகஸ்ட்29 வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. துஷார் ஜலோட்டா இயக்கிய இந்தப் படம், சீரான தொடக்கத்தைக் கொண்டிருந்தது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் தொழில் கண்காணிப்பாளர் சக்னில்க் கருத்துப்படி, பரம் சுந்தரி முதல் நாளில் ரூ.7.25 கோடி வசூலித்து, நல்ல தொடக்கத்தை அளித்தது. சனிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணிசமாக மேம்பட்டது, படம் ரூ.9.25 கோடி வசூலித்தது, ஞாயிற்றுக்கிழமையும் இந்த உயர்வு தொடர்ந்தது,  ரூ.10.45 கோடியை ஈட்டியது, இது இதுவரையிலான ஒரே நாளில் அதன் சிறந்த வசூலைக் குறிக்கிறது.இந்த வார இறுதி வசூல், பரம் சுந்தரியின் மொத்த உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸ் வசூலை அதன் முதல் வார இறுதிக்குப் பிறகு ரூ.26.75 கோடியாகக் கொண்டு வந்ததுபரம் சுந்தரி திரைப்படம் ஒட்டுமொத்தமாக20.71 சதவீத ஹிந்தி திரைப்பட ஆக்கிரமிப்பை பதிவு செய்தது. மாலை காட்சிகள் சிறப்பாக செயல்பட்டன, கிட்டத்தட்ட30 சதவீத திரையரங்க இருக்கைகள் நிரம்பியிருந்தன, காலை காட்சிகள் சுமார்10 சதவீதம் மட்டுமே நிரம்பியிருந்தன. இரவு காட்சிகள் சற்று குறைந்து18.39 சதவீத ஆக்கிரமிப்பை பதிவு செய்தன.. சென்னை, ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற நகரங்களிலும் படத்திற்கு நல்ல பார்வையாளர்கள் வருகை பதிவாகியுள்ளது.பரம் சுந்தரி என்பது ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த கவலையற்ற டெல்லி சிறுவன் பரம்(சித்தார்த் மல்ஹோத்ரா) பற்றிய ஒரு படம், அவர் தனது தந்தையின் பணத்தை புதிய யுக தொடக்க நிறுவனங்களில் முதலீடு செய்கிறார். 'சோல்மேட்ஸ்' என்ற AI- இயங்கும் திருமணப் பொருத்த செயலியை முயற்சிக்கும்போது, அவர் தனது மாமாவுடன் தனது மூதாதையர் இல்லத்தை நடத்தும் கேரளாவைச் சேர்ந்த தென்னிந்தியப் பெண்ணான சுந்தரி(ஜான்வி கபூர்) உடன் ஜோடி சேருகிறார்.இந்தப் படம் பரமின் நவீன, நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கும் சுந்தரியின் வேரூன்றிய, பாரம்பரியம் நிறைந்த உலகத்திற்கும் இடையிலான மோதலைக் காட்டுகிறது. பரம் சுந்தரி இந்த ஆண்டின் மிகப்பெரிய காதல் பொழுதுபோக்கு படமாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டியை எதிர்கொண்டது. 

1 2 ... 38 39 40 41 42 43 44 ... 89 90

AD's



More News